Skip to main content

وَلِيُمَحِّصَ
இன்னும் சோதிப்பதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ
எவர்களை
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَيَمْحَقَ
இன்னும் அழிப்பதற்காக
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை

Wa liyumahhisal laahul lazeena aamanoo wa yamhaqal kaafireen

நிராகரிப்பவர்களை அழித்து உண்மை நம்பிக்கை யாளர்களை வடிகட்டி எடுப்பதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்.)

Tafseer

أَمْ حَسِبْتُمْ
நினைத்தீர்களா?
أَن تَدْخُلُوا۟
நீங்கள் நுழைய
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
وَلَمَّا يَعْلَمِ
அல்லாஹ் அறியாமல்
ٱلَّذِينَ جَٰهَدُوا۟
போர் புரிந்தவர்களை
مِنكُمْ
உங்களில்
وَيَعْلَمَ
(அவன்) அறிவதுடன்
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்களை

Am hasibtum an tadkhulul Jannnata wa lammaa ya'lamil laahul lazeena jaahadoo minkum wa ya'lamas saabireen

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (கஷ்டங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் (பரிசோதித்து) அறிவதற்கு முன்னதாகவே நீங்கள் சுவர்க்கம் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?

Tafseer

وَلَقَدْ كُنتُمْ
இன்னும் திட்டமாக இருந்தீர்கள்
تَمَنَّوْنَ
ஆசைவைக்கிறீர்கள்
ٱلْمَوْتَ
மரணத்தை
مِن قَبْلِ
முன்னர்
أَن تَلْقَوْهُ
அதைச் சந்திப்பதற்கு
فَقَدْ رَأَيْتُمُوهُ
அதைப் பார்த்தும் விட்டீர்கள்
وَأَنتُمْ
நீங்களோ
تَنظُرُونَ
காண்கிறீர்கள்

Wa laqad kuntum tamannnawnal mawta min qabli an talqawhu faqad ra aitumoohu wa antum tanzuroon

நீங்கள் இறந்து விடுவதற்கு முன்னதாகவே, (அல்லாஹ்வின் பாதையில் உங்கள்) உயிரை அர்ப்பணம் செய்ய விரும்பிக் கொண்டிருந்தீர்களே! (இப்போது) அது உங்கள் கண் முன் இருப்பதைத் திட்டமாகப் பார்த்து விட்டீர்கள். (ஆகவே இந்த போரில் ஏன் தயங்குகின்றீர்கள்?)

Tafseer

وَمَا
இல்லை
مُحَمَّدٌ
முஹம்மது
إِلَّا
தவிர
رَسُولٌ
ஒரு தூதரே
قَدْ خَلَتْ
சென்று விட்டனர்
مِن قَبْلِهِ
அவருக்கு முன்னர்
ٱلرُّسُلُۚ
தூதர்கள்
أَفَإِي۟ن مَّاتَ
அவர் இறந்தால்
أَوْ
அல்லது
قُتِلَ
கொல்லப்பட்டால்
ٱنقَلَبْتُمْ
புரண்டு விடுவீர்கள்
عَلَىٰٓ
மீது
أَعْقَٰبِكُمْۚ
உங்கள் குதிங்கால்கள்
وَمَن
இன்னும் எவர்
يَنقَلِبْ
புரண்டு விடுவாரோ
عَلَىٰ
மீது
عَقِبَيْهِ
தன் குதிங்கால்கள்
فَلَن يَضُرَّ
அறவே தீங்கு செய்யமுடியாது
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
شَيْـًٔاۗ
எதையும்
وَسَيَجْزِى
கூலி வழங்குவான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلشَّٰكِرِينَ
நன்றி செலுத்துபவர்களுக்கு

Wa maa Muhammadun illaa Rasoolun qad khalat min qablihir Rusul; afa'im maata aw qutilan qalabtum 'alaaa a'qaabikum; wa mai yanqalib 'alaa aqibihi falai yadurral laaha shai'aa; wa sayajzil laahush shaakireen

முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றியறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான்.

Tafseer

وَمَا كَانَ
(சாத்தியம்) இல்லை
لِنَفْسٍ
ஓர் ஆத்மாவிற்கு
أَن تَمُوتَ
மரணிப்பது
إِلَّا
தவிர
بِإِذْنِ
அனுமதியுடன்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
كِتَٰبًا
விதிக்கு ஏற்ப
مُّؤَجَّلًاۗ
காலம் குறிக்கப்பட்ட
وَمَن يُرِدْ
இன்னும் எவர்/நாடுவாரோ
ثَوَابَ
நன்மையை
ٱلدُّنْيَا
உலகத்தின்
نُؤْتِهِۦ
அவருக்கு கொடுப்போம்
مِنْهَا
அதிலிருந்து
وَمَن يُرِدْ
இன்னும் எவர்/நாடுவாரோ
ثَوَابَ
நன்மையை
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
نُؤْتِهِۦ
அவருக்கு கொடுப்போம்
مِنْهَاۚ
அதிலிருந்து
وَسَنَجْزِى
கூலி வழங்குவோம்
ٱلشَّٰكِرِينَ
நன்றி செலுத்துபவர்கள்

Wa maa kaana linafsin an tamoota illaa bi iznillaahi kitaabam mu'ajjalaa; wa mai yurid sawaabad dunyaa nu'tihee minhaa wa mai yurid sawaabal Aakhirati nu'tihee minhaa; wa sanajzish shaakireen

யாதொரு ஆத்மாவும் அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம்.

Tafseer

وَكَأَيِّن
எத்தனையோ
مِّن
இருந்து
نَّبِىٍّ
நபி
قَٰتَلَ
போர் புரிந்தார்
مَعَهُۥ
அவருடன்
رِبِّيُّونَ
நல்லடியார்கள்
كَثِيرٌ
அதிகமான
فَمَا وَهَنُوا۟
அவர்கள் துணிவிழக்கவில்லை
لِمَآ أَصَابَهُمْ
அவர்களுக்கு ஏற்பட்டதின் காரணமாக
فِى سَبِيلِ
அல்லாஹ்வின் பாதையில்
وَمَا ضَعُفُوا۟
இன்னும் அவர்கள் பலவீனமடையவில்லை
وَمَا ٱسْتَكَانُوا۟ۗ
இன்னும் அவர்கள் பணியவில்லை
وَٱللَّهُ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்களை

Wa ka aiyim min Nabiyyin qaatala ma'ahoo ribbiyyoona kaseerun famaa wahanoo limaaa Asaabahum fee sabeelil laahi wa maa da'ufoo wa mas takaanoo; wallaahu yuhibbus saabireen

எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்து விடவும் இல்லை. (இவ்வாறு கஷ்டங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கின்றான்.

Tafseer

وَمَا كَانَ
இருக்கவில்லை
قَوْلَهُمْ
அவர்களுடைய கூற்றாக
إِلَّآ
தவிர
أَن قَالُوا۟
அவர்கள் கூறியது
رَبَّنَا
எங்கள் இறைவா
ٱغْفِرْ لَنَا
எங்களுக்கு மன்னி
ذُنُوبَنَا
எங்கள் பாவங்களை
وَإِسْرَافَنَا
இன்னும் எங்கள்வரம்பு மீறலை
فِىٓ أَمْرِنَا
எங்கள் காரியத்தில்
وَثَبِّتْ
இன்னும் உறுதிப்படுத்து
أَقْدَامَنَا
எங்கள் பாதங்களை
وَٱنصُرْنَا
இன்னும் எங்களுக்கு உதவு
عَلَى
எதிராக
ٱلْقَوْمِ
மக்களுக்கு
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்

Wa maa kaana qawlahum illaa an qaaloo Rabbanagh fir lanaa zunoobanaa wa israafanaa feee amirnaa wa sabbit aqdaamanaa wansurnaa 'alal qawmil kaafireen

(இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றி பெற நீ எங்களுக்கு உதவிபுரிவாயாக!" என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) கூறியதில்லை.

Tafseer

فَـَٔاتَىٰهُمُ
ஆகவே அவர்களுக்கு கொடுத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ثَوَابَ
நன்மையை
ٱلدُّنْيَا
உலகத்தின்
وَحُسْنَ
இன்னும் அழகான
ثَوَابِ
நன்மை(யை)
ٱلْءَاخِرَةِۗ
மறுமையின்
وَٱللَّهُ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோரை

Fa aataahumul laahu sawaabad dunyaa wa husna sawaabil Aakhirah; wallaahu yuhibbul muhsineen

ஆதலால் அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் வழங்கினான். அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
إِن تُطِيعُوا۟
நீங்கள் கீழ்ப்படிந்தால்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்களுக்கு
يَرُدُّوكُمْ
திருப்பி விடுவார்கள்/ உங்களை
عَلَىٰٓ
மீது
أَعْقَٰبِكُمْ
உங்கள் குதிங்கால்கள்
فَتَنقَلِبُوا۟
திரும்பி விடுவீர்கள்
خَٰسِرِينَ
நஷ்டவாளிகளாக

Yaaa 'aiyuhal lazeena aamanoo in tutee'ullazeena kafaroo yaruddookum 'alaaa a'qaabkum fatanqaliboo khaasireen

நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையி லிருந்து நீங்கள் விலகி)ப் பின் செல்லும்படி திருப்பி விடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறிவிடுவீர்கள்.

Tafseer

بَلِ ٱللَّهُ
மாறாக/அல்லாஹ்
مَوْلَىٰكُمْۖ
உங்கள் எஜமான்
وَهُوَ خَيْرُ
அவன்/சிறந்தவன்
ٱلنَّٰصِرِينَ
உதவியாளர்களில்

Balil laahu mawlaakum wa Huwa khairun naasireen

(இவர்கள்) அல்ல, அல்லாஹ்தான் உங்கள் பாதுகாவலன். அவன் உதவி செய்பவர்களில் மிகச் சிறந்தவனுமாக இருக்கின்றான்.

Tafseer