Wa iz ghadawta min ahlika tubawwi'ul mu'mineena maqaa'ida lilqitaal; wallaahu samee'un 'aleem
(நபியே!) நீங்கள் உங்கள் குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு(ச் சென்று) நம்பிக்கை கொண்டவர்களை போர்க்களத்தில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள். (அனைத்தையும்) அல்லாஹ் செவியுறுபவனாகவும், நன்கறிந்த வனாகவும் இருக்கிறான்.
Iz hammat taaa'ifataani minkum an tafshalaa wallaahu waliyyuhumaa; wa 'alal laahi falyatawakkalil mu'minoon
(அந்த போரில்) உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து ("உஹுத்" என்னும் போர்க்களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்த சமயத்தில் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்பவனாக இருந்தான். (ஆகவே!) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக!
Wa laqad nasarakumul laahu bi-Badrinw wa antum azillatun fattaqul laaha la'allakum tashkuroon
பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள்.
Iz taqoolu lilmu'mineena alai yakfiyakum ai-yumiddakum Rabbukum bisalaasati aalaafim minal malaaa'ikati munzaleen
(நபியே! அப்பொழுது) நீங்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "(வானத்திலிருந்து) இறங்கிய மூவாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?" என்று கூறியதையும் ஞாபகமூட்டுங்கள்.
Balaaa; in tasbiroo wa tattaqoo wa yaatookum min fawrihim haazaa yumdidkum Rabbukum bikhamsati aalaafim minal malaaa'ikati musawwaimeen
நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறியபோதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வான்.
Wa maa ja'alahul laahu illaa bushraa lakum wa litatma'inna quloobukum bih' wa man-nasru illaa min 'indilllaahil 'Azeezil Hakeem
உங்களுடைய உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியை புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே அன்றி (வேறு யாரிடம் இருந்தும் இந்த) உதவி (உங்களுக்கு) கிடைக்கவில்லை. (கிடைக்கவும் செய்யாது.)
Laiyaqta'a tarafam minal lazeena kafarooo aw yakbitahum fayanqaliboo khaaa'ibeen
(அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி அடைந்தவர்களாகத்) திரும்பிச் சென்று விடுவதற்காகவேதான்.
Laisa laka minal amrishai'un aw yatooba 'alaihim aw yu'az zi bahum fa innahum zaalimoon
(நபியே!) இவ்விஷயத்தில் உங்களுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர்களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம்.
Wa lilaahi maa fissamaawaati wa maa fil-ard; yaghfiru limai-yashaaa'u wa yu'azzibu mai-yashaaa'; wallaahu Ghafoorur Raheem
(ஏனென்றால்) வானங்களில் உள்ளவை அனைத்தும், பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களைத் தண்டிப்பான். ஆனால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.
Yaaa ayyuhal lazeena aamanoo la taakuhur ribaaa ad'aafam mudaa'afatanw wattaqul laaha la'allakum tuflihoon
நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.