Lai yadurrookum 'illaaa azanw wa ai yuqaatilookum yuwallookumul adbaara summa laa yunsaroon
(நம்பிக்கையாளர்களே!) இத்தகையவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர் புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெற மாட்டார்கள்.
Duribat 'alaihimuz zillatu aina maa suqifooo illaa bihablim minal laahi wa hablim minan naasi wa baaa'oo bighadabim minallaahi wa duribat 'alaihimul maskanah; zaalika bi-annahum kaanoo yakfuroona bi Aayaatil laahi wa yaqtuloonal Ambiyaaa'a bighairi haqq; zaalika bimaa 'asaw wa kaanoo ya'tadoon
அவர்கள் எங்கு சென்றபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் (நம்பிக்கை கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) கயிற்றைக் கொண்டுமே அன்றி (அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.) அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (வீழ்ச்சி என்னும்) துர்ப்பாக்கியமும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி இறைத் தூதர்களைக் கொலை செய்துகொண்டும் இருந்ததுதான். தவிர, வரம்பு கடந்து பாவம் செய்துகொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகும்.
Laisoo sawaaa'a; min Ahlil Kitaabi ummatun qaaa'imatuny yatloona Aayaatil laahi aanaaa'al laili wa hum yasjudoon
அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் (நல்லோரான) ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம் பணிந்து வணங்குகின்றனர்.
Yu'minoona billaahi wal Yawmil Aakhiri wa yaa muroona bilma'roofi wa yanhawna 'anil munkari wa yusaari'oona fil khairaati wa ulaa'ika minas saaliheen
அன்றி, அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு) நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இத்தகைய வர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே.
Wa maa yaf'aloo min khairin falai yukfarooh; wallaahu 'aleemun bilmuttaqeen
இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், இத்தகைய) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நன்கறிவான்.
Innal lazeena kafaroo lan tughniya 'anhum amwaalum wa laaa awlaaduhum minal laahi shai anw wa ulaaa'ika Ashaabun Naar; hum feehaa khaalidoon
நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய பொருள்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து அவர்களை ஒரு சிறிதும் காப்பாற்றிவிடாது. அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள்.
Masalu maa yunfiqoona fee haazihil hayaatid dunyaa kamasali reehin feehaa sirrun as aabat harsa qawmin zalamooo anfusahum fa ahlakath; wa maa zalamahumul laahu wa laakin anfusahum yazlimoon
இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம், ஒரு காற்றைப்போல் இருக்கின்றது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகித்) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதனை அழித்துவிட்டது. அல்லாஹ் இவர்களுக்கு ஒன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், இவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
Yaaa ayyuhal lazeena aamanoo laa tattakhizoo bitaanatam min doonikum laa yaaloonakum khabaalanw waddoo maa 'anittum qad badatil baghdaaa'u min afwaahihim; wa maa tukhfee sudooruhum akbar; qad baiyannaa lakumul Aayaati in kuntum ta'qiloon
நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்) களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகின்றார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்களில் மறைந்திருப்பவைகளோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்து விட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.)
Haaa antum ulaaa'i tuhibboonahum wa laa yuhibboonakum wa tu'minoona bil kitaabi kullihee wa izaa laqookum qaalooo aamannaa wa izaa khalaw 'addoo 'alaikumul anaamila minal ghaiz; qul mootoo bighai zikum; innal laaha 'aleemum bizaatis sudoor
(நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கின்றீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், "(உங்களுடைய வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்" என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்."
In tamsaskum hasanatun tasu'hum wa in tusibkum saiyi'atuny yafrahoo bihaa wa in tasbiroo wa tattaqoo laa yad urrukum kaiduhum shai'aa; innal laaha bimaa ya'maloona muheet
உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயலை சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.