Skip to main content

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَمَاتُوا۟
இன்னும் இறந்தார்கள்
وَهُمْ كُفَّارٌ
அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே
فَلَن يُقْبَلَ
அறவே அங்கீகரிக்கப்படாது
مِنْ
இருந்து
أَحَدِهِم
அவர்களில் ஒருவர்
مِّلْءُ ٱلْأَرْضِ
பூமி நிறைய
ذَهَبًا
தங்கத்தை
وَلَوِ ٱفْتَدَىٰ
அதை ஈடாக கொடுத்தாலும் சரியே
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
لَهُمْ
இவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
وَمَا
இன்னும் இல்லை
لَهُم
அவர்களுக்கு
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்களில் ஒருவரும்

Innal lazeena kafaroo wa maatoo wa hum kuffaarun falany yuqbala min ahadihim mil'ul ardi zahabanw wa lawiftadaa bih; ulaaa 'ika lahum 'azaabun aleemunw wa maa lahum min naasireen

நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதனைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இத்தகையவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்!

Tafseer

لَن تَنَالُوا۟
அறவே அடைய மாட்டீர்கள்
ٱلْبِرَّ
நன்மையை
حَتَّىٰ
வரை
تُنفِقُوا۟
தர்மம் செய்கிறீர்கள்
مِمَّا
எதிலிருந்து
تُحِبُّونَۚ
நேசிக்கிறீர்கள்
وَمَا تُنفِقُوا۟
எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும்
مِن شَىْءٍ
ஒரு பொருள் / இல்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
بِهِۦ
அதை
عَلِيمٌ
மிக நன்கறிந்தவன்

Lan tanaalul birra hattaa tunfiqoo mimmaa tuhibboon; wa maa tunfiqoo min shai'in fa innal laaha bihee 'Aleem

உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள். ஒரு சொற்பத்தை நீங்கள் தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனையும் நன்கறிவான்.

Tafseer

كُلُّ
எல்லா(ம்)
ٱلطَّعَامِ
உணவு(ம்)
كَانَ
இருந்தது
حِلًّا
ஆகுமானதாக
لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களுக்கு
إِلَّا
தவிர
مَا
எவை
حَرَّمَ
விலக்கினார்
إِسْرَٰٓءِيلُ
இஸ்ராயீல்
عَلَىٰ نَفْسِهِۦ
தன் மீது
مِن قَبْلِ
முன்னர்
أَن تُنَزَّلَ
இறக்கப்படுவதற்கு
ٱلتَّوْرَىٰةُۗ
தவ்றாத்
قُلْ
கூறுவீராக
فَأْتُوا۟
வாருங்கள்
بِٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்தைக்கொண்டு
فَٱتْلُوهَآ
இன்னும் ஓதுங்கள்/அதை
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Kullut ta'aami kaana hillal li Baneee Israaa'eela illaa maa harrama Israaa'eelu 'alaa nafsihee min qabli an tunzzalat Tawraah; qul faatoo bit Tawraati fatloohaaa in kuntum saadiqeen

இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் கொண்டவற்றைத் தவிர. (ஆகவே இதற்கு மாறாகக் கூறும் யூதர்களை நோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டுவந்து ஓதிக் காண்பியுங்கள்."

Tafseer

فَمَنِ
எவர்(கள்)
ٱفْتَرَىٰ
கற்பனை செய்கிறார்(கள்)
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
ٱلْكَذِبَ
பொய்யை
مِنۢ بَعْدِ
இதற்குப் பின்னர்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Famanif taraa 'alal laahilkaziba mim ba'di zaalika fa ulaaa'ika humuz zaalimoon

இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறினால் அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
صَدَقَ
உண்மை கூறி விட்டான்
ٱللَّهُۗ
அல்லாஹ்
فَٱتَّبِعُوا۟
ஆகவே பின்பற்றுங்கள்
مِلَّةَ
மார்க்கத்தை
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமின்
حَنِيفًا
இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர்
وَمَا كَانَ
இன்னும் அவர் இருக்கவில்லை.
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Qul sadaqal laah; fattabi'oo Millata Ibraaheema Haneefanw wa maa kaana minal mush rikeen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(இவைகளைப் பற்றி) அல்லாஹ் கூறியவைதான் (முற்றிலும்) உண்மை. ஆகவே (நம்பிக்கை யாளர்களே! இவர்களைப் புறக்கணித்து விட்டு) நேரான வழியில் சென்ற இப்ராஹீமுடைய மார்க்கத்தையே பின்பற்றுங்கள். அவர் இணைவைத்து வணங்குபவராக இருக்கவில்லை.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
أَوَّلَ بَيْتٍ
முதல்/இல்லம்
وُضِعَ
அமைக்கப்பட்டது
لِلنَّاسِ لَلَّذِى
மக்களுக்கு/எதுதான்
بِبَكَّةَ
பக்கா வில்
مُبَارَكًا
அருள்செய்யப்பட்டது
وَهُدًى
இன்னும் நேர்வழி
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு

Inna awwala Baitinw wudi'a linnaasi lallazee bi Bakkata mubaarakanw wa hudal lil 'aalameen

(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக "பக்கா"வில் (மக்காவில்) இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

Tafseer

فِيهِ
அதில்
ءَايَٰتٌۢ
அத்தாட்சிகள்
بَيِّنَٰتٌ
தெளிவானவை
مَّقَامُ
நின்ற இடம்
إِبْرَٰهِيمَۖ
இப்றாஹீம்
وَمَن
இன்னும் எவர்
دَخَلَهُۥ
நுழைகிறார்/அதில்
كَانَ
ஆகி விட்டார்
ءَامِنًاۗ
அச்சமற்றவராக
وَلِلَّهِ
அல்லாஹ்வுக்காக
عَلَى
மீது
ٱلنَّاسِ
மக்கள்
حِجُّ
ஹஜ் செய்வது
ٱلْبَيْتِ
இல்லத்தை
مَنِ
எவர்
ٱسْتَطَاعَ
சக்தி பெற்றார்
إِلَيْهِ
அதன் பக்கம்
سَبِيلًاۚ
பாதையால்
وَمَن
இன்னும் எவர்
كَفَرَ
நிராகரித்தார்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَنِىٌّ
தேவையற்றவன்
عَنِ
விட்டு
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களை

Feehi Aayaatum baiyinaatum Maqaamu Ibraaheema wa man dakhalahoo kaana aaminaa; wa lillaahi 'alan naasi Hijjul Baiti manis tataa'a ilaihi sabeelaa; wa man kafara fa innal laaha ghaniyyun 'anil 'aalameen

அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவர் அதில் நுழைகின்றாரோ அவர் (பாதுகாப்பு பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்குச் சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கின்றான்.

Tafseer

قُلْ
கூறுவீராக
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
لِمَ
ஏன்
تَكْفُرُونَ
நிராகரிக்கிறீர்கள்
بِـَٔايَٰتِ ٱللَّهِ
வசனங்களை/ அல்லாஹ்வின்
وَٱللَّهُ
அல்லாஹ்
شَهِيدٌ
சாட்சியாளன்
عَلَىٰ مَا
நீங்கள் செய்வதற்கு

Qul yaaa Ahlal Kitaabi lima takfuroona bi Aayaatillaahi wallaahu shaheedun 'alaa maa ta'maloon

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "வேதத்தை உடையவர்களே! அல்லாஹ்வின் வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கின்றீர்கள். அல்லாஹ்வோ நீங்கள் செய்யும் அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்றான்."’

Tafseer

قُلْ
கூறுவீராக
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
لِمَ تَصُدُّونَ
ஏன்/தடுக்கிறீர்கள்
عَن
விட்டும்
سَبِيلِ
பாதை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مَنْ
எவரை
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
تَبْغُونَهَا
அதில் தேடுகிறீர்கள்
عِوَجًا
கோணலை
وَأَنتُمْ
நீங்களே
شُهَدَآءُۗ
சாட்சிகள்
وَمَا
இல்லை
ٱللَّهُ
அல்லாஹ்
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
عَمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதைப் பற்றி

Qul yaaa Ahlal Kitaabi lima tusuddoona 'an sabeelil laahi man aamana tabghoonahaa 'iwajanw wa antum shuhadaaa'; wa mallaahu bighaafilin 'ammaa ta'maloon

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (செல்லும்) நம்பிக்கையாளர்களை ஏன் தடை செய்கின்றீர்கள். (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சியம் கூறிக்கொண்டே அதனைக் கோணலாக்க விரும்புகின்றீர்களா? உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாய் இல்லை.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
إِن تُطِيعُوا۟
நீங்கள் கீழ்ப்படிந்தால்
فَرِيقًا
ஒரு பிரிவினருக்கு
مِّنَ
இருந்து
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
يَرُدُّوكُم
மாற்றிடுவார்கள்/ உங்களை
بَعْدَ
பின்னர்
إِيمَٰنِكُمْ
நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
كَٰفِرِينَ
நிராகரிப்பவர்களாக

Yaaa ayyuhal lazeena aamanoo in tutee'oo fareeqam minal lazeena ootul Kitaaba yaruddookum ba'da eemaanikum kaafireen

நம்பிக்கையாளர்களே! வேதத்தையுடையவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்படிந்தால், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதற்கு பின் உங்களை அவர்கள் அவனை நிராகரிப்பவர்களாக மாற்றி விடுவார்கள்.

Tafseer