Skip to main content

ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௪௦

فَكُلًّا اَخَذْنَا بِذَنْۢبِهٖۙ فَمِنْهُمْ مَّنْ اَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا ۚوَمِنْهُمْ مَّنْ اَخَذَتْهُ الصَّيْحَةُ ۚوَمِنْهُمْ مَّنْ خَسَفْنَا بِهِ الْاَرْضَۚ وَمِنْهُمْ مَّنْ اَغْرَقْنَاۚ وَمَا كَانَ اللّٰهُ لِيَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْٓا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ  ( العنكبوت: ٤٠ )

So each
فَكُلًّا
ஒவ்வொருவரையும்
We seized
أَخَذْنَا
நாம் தண்டித்தோம்
for his sin
بِذَنۢبِهِۦۖ
அவர்களின் பாவத்தினால்
Then of them
فَمِنْهُم
இவர்களில்
(was he) who We sent
مَّنْ أَرْسَلْنَا
எவர்கள்/நாம் அனுப்பினோம்
on him
عَلَيْهِ
அவர்கள் மீது
a violent storm
حَاصِبًا
கல் மழையை
and of them
وَمِنْهُم
இன்னும் இவர்களில்
(was he) who seized him
مَّنْ أَخَذَتْهُ
எவர்கள்/பிடித்தோம்/அவர்கள்
the awful cry
ٱلصَّيْحَةُ
இடி முழக்கம்
and of them
وَمِنْهُم
இன்னும் , இவர்களில்
(was he) who We caused to swallow
مَّنْ خَسَفْنَا
எவர்கள்/நாம் சொருகினோம்
him
بِهِ
அவர்களை
the earth
ٱلْأَرْضَ
பூமியில்
and of them
وَمِنْهُم
இன்னும் இவர்களில்
(was he) who We drowned
مَّنْ أَغْرَقْنَاۚ
எவர்கள்/நாம் மூழ்கடித்தோம்
And not was
وَمَا كَانَ
இல்லை
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
to wrong them
لِيَظْلِمَهُمْ
அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக
but
وَلَٰكِن
எனினும்
they were
كَانُوٓا۟
அவர்கள் இருந்தனர்
themselves
أَنفُسَهُمْ
தங்களுக்கே
doing wrong
يَظْلِمُونَ
அநியாயம் செய்பவர்களாக

Fakullan akhaznaa bizam bihee faminhum man arsalnaa 'alaihi haasibaa; wa minhum man akhazat hus saihatu wa minhum man khasafnaa bihil arda wa minhum man aghraqnaa; wa maa kaanal laahu li yazlimahum wa laakin kaanoo anfusahum yazlimoon (al-ʿAnkabūt 29:40)

Abdul Hameed Baqavi:

அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில் ஆழ்த்திவிட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்) மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், அவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

English Sahih:

So each We seized for his sin; and among them were those upon whom We sent a storm of stones, and among them were those who were seized by the blast [from the sky], and among them were those whom We caused the earth to swallow, and among them were those whom We drowned. And Allah would not have wronged them, but it was they who were wronging themselves. ([29] Al-'Ankabut : 40)

1 Jan Trust Foundation

இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாகப் பிடித்தோம்; அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம்; அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்களில் சிலரைப் பூமியினுள் அழுந்தச் செய்தோம்; அவர்களில் சிலரை மூழ்கடித்தோம்; ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.