Skip to main content

وَلَئِن
سَأَلْتَهُم
அவர்களிடம் நீர் கேட்டால்
مَّنْ خَلَقَ
யார் படைத்தான்?
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
وَسَخَّرَ
வசப்படுத்தினான்
ٱلشَّمْسَ
சூரியனையும்
وَٱلْقَمَرَ
சந்திரனையும்
لَيَقُولُنَّ
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
ٱللَّهُۖ
அல்லாஹ்தான்
فَأَنَّىٰ
ஆக, அவர்கள் எப்படி
يُؤْفَكُونَ
திருப்பப்படுகிறார்கள்

Wa la'in sa altahum man khalaqas samaawaati wal arda wa sakhkharash shamsa wal qamara la yaqoolunnal laahu fa ann yu'fakoon

(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்?" என்று அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், அவர்கள் (நம்மைவிட்டு) எங்கு வெருண்டோடுகின்றனர்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்தான்
يَبْسُطُ
விசாலமாக்குகின்றான்
ٱلرِّزْقَ
உணவை
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
مِنْ عِبَادِهِۦ
தனது அடியார்களில்
وَيَقْدِرُ
இன்னும் சுருக்குகின்றான்
لَهُۥٓۚ
அவருக்கு
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Allaahu yabsutur rizqa limany yashaaa'u min 'ibaadihee wa yaqdiru lah; innal laaha bikulli shai'in Aleem

அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின் தகுதி) அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

وَلَئِن
سَأَلْتَهُم
நீர் அவர்களிடம் கேட்டால்
مَّن نَّزَّلَ
யார்/இறக்கினான்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مَآءً
மழையை
فَأَحْيَا
உயிர்ப்பிப்பவன்
بِهِ
அதன் மூலம்
ٱلْأَرْضَ
பூமியை
مِنۢ بَعْدِ
பின்னர்
مَوْتِهَا
அது இறந்து விட்ட
لَيَقُولُنَّ
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
ٱللَّهُۚ
அல்லாஹ்
قُلِ
நீர் கூறுவீராக!
ٱلْحَمْدُ
புகழ் எல்லாம்
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே!
بَلْ
மாறாக
أَكْثَرُهُمْ
அதிகமானவர்கள் அவர்களில்
لَا يَعْقِلُونَ
சிந்தித்து புரிய மாட்டார்கள்

Wa la'in sa altahum man nazzala minas samaaa'e maaa'an fa ahyaa bihil arda mim ba'di mawtihaa la yaqoolunnal laah; qulil hamdu lillah; bal aksaruhum laa ya'qiloon

(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்பவன் யார்? அதனைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் "நிச்சயமாக அல்லாஹ்தான்" என்று கூறுவார்கள். அதற்கு நீங்கள் "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!" என்று கூறுங்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) உணர்ந்து கொள்வதில்லை.

Tafseer

وَمَا هَٰذِهِ
இல்லை
ٱلْحَيَوٰةُ
வாழ்க்கை
ٱلدُّنْيَآ
இவ்வுலக
إِلَّا
தவிர
لَهْوٌ
வேடிக்கையாகவும்
وَلَعِبٌۚ
விளையாட்டாகவும்
وَإِنَّ
நிச்சயமாக
ٱلدَّارَ
வீடு
ٱلْءَاخِرَةَ لَهِىَ
மறுமை/அதுதான்
ٱلْحَيَوَانُۚ
நிரந்தரமானது
لَوْ كَانُوا۟
அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!

Wa maa haazihil hayaa tud dunyaaa illaa lahwunw-wa la'ib; wa innad Daaral Aakhirata la hiyal ha yawaan; law kaano ya'lamoon

இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும்மறுமையின் வாழ்க்கைதான் நிச்சயமாக நிலையான வாழ்க்கை ஆகும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

Tafseer

فَإِذَا رَكِبُوا۟
அவர்கள் பயணித்தால்
فِى ٱلْفُلْكِ
கப்பலில்
دَعَوُا۟
அழைக்கின்றனர்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مُخْلِصِينَ
தூய்மைப்படுத்தியவர்களாக
لَهُ
அவனுக்கு மட்டும்
ٱلدِّينَ
வணக்க வழிபாட்டை
فَلَمَّا نَجَّىٰهُمْ
அவன் அவர்களை காப்பாற்றிக் கொண்டு வந்தால்
إِلَى ٱلْبَرِّ
கரைக்கு
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
يُشْرِكُونَ
இணைவைக்கின்றனர்

Fa-izaa rakiboo fil fulki da'awul laaha mukhilseena lahud deena falammaa najjaa hum ilal baari izaa hum yushrikoon

(மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர்.

Tafseer

لِيَكْفُرُوا۟
இறுதியாக, நிராகரிப்பதற்காகவும்
بِمَآ ءَاتَيْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
وَلِيَتَمَتَّعُوا۟ۖ
அவர்கள் இன்புறுவதற்காகவும்
فَسَوْفَ يَعْلَمُونَ
அவர்கள் அறிவார்கள்

Li yakfuroo bimaaa aatainaahum wa li yatamatta'oo fasaw fa ya'lamoon

நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டே இருக்கட்டும். (தங்கள் விருப்பப்படியும்) அவர்கள் சுகமனுபவித்துக் கொண்டே இருக்கட்டும். தங்கள் (செயலின்) பயனை(ப் பின்னர்) நிச்சயமாக தெரிந்து கொள்வார்கள்.

Tafseer

أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
أَنَّا
நிச்சயமாக நாம்
جَعَلْنَا
ஏற்படுத்தினோம்
حَرَمًا
புனித தலத்தை
ءَامِنًا
பாதுகாப்புஅளிக்கின்ற
وَيُتَخَطَّفُ
சூறையாடப்படுகின்றனர்
ٱلنَّاسُ
மக்கள்
مِنْ حَوْلِهِمْۚ
அவர்களைச் சுற்றி
أَفَبِٱلْبَٰطِلِ
பொய்யை
يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனரா?
وَبِنِعْمَةِ
அருளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يَكْفُرُونَ
நிராகரிக்கின்றனரா?

Awalam yaraw annaa ja'alnaa haraman aaminanw wa yutakhattafun naasu min haw lihim; afabil baatili yu'minoona wa bini'matil laahi yakfuroon

(இந்த மக்காவை) அபயமளிக்கும் இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் இறாஞ்சி(த் தூக்கி)ச் செல்லப்படுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின் (இவ்வருட்) கொடையை நிராகரித்துவிட்டு பொய்யான தெய்வங்களை நம்பிக்கை கொள்கின்றனரா?

Tafseer

وَمَنْ
யார்?
أَظْلَمُ
மகா அநியாயக்காரன்
مِمَّنِ ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டியவனை விட
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்வின்
كَذِبًا
பொய்யை
أَوْ
அல்லது
كَذَّبَ
பொய்ப்பித்தான்
بِٱلْحَقِّ
உண்மையை
لَمَّا جَآءَهُۥٓۚ
அது தன்னிடம் வந்த போது
أَلَيْسَ
இல்லையா?
فِى جَهَنَّمَ
நரகத்தில்
مَثْوًى
தங்குமிடம்
لِّلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு

Wa man azlamu mimma nif taraa 'alal laahi kaziban aw kazzaba bilhaqqi lammaa jaaa'ah; alaisa fee jahannama maswal lil kaafireen

அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனைவிட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யாக்குபவனைவிட அநியாயக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பவர்களின் தங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
جَٰهَدُوا۟
போரிட்டனர்
فِينَا
நமக்காக
لَنَهْدِيَنَّهُمْ
அவர்களுக்கு நாம் நிச்சயமாக வழிகாட்டுவோம்
سُبُلَنَاۚ
நமது பாதைகளை
وَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَمَعَ ٱلْمُحْسِنِينَ
நல்லோருடன் இருக்கின்றான்

Wallazeena jaahadoo feenaa lanahdiyannahum subulana; wa innal laaha lama'al muhsineen

எவர்கள் நம்முடைய வழியில் (செல்ல) முயற்சிக் கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய (நல்) வழிகளில் செலுத்துகின்றோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.

Tafseer