Skip to main content

وَلَمَّا جَآءَتْ
வந்த போது
رُسُلُنَآ
நமது தூதர்கள்
إِبْرَٰهِيمَ
இப்ராஹீமிடம்
بِٱلْبُشْرَىٰ
நற்செய்தியுடன்
قَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
مُهْلِكُوٓا۟
அழிக்கப் போகிறோம்
أَهْلِ
வசிப்பவர்
هَٰذِهِ
இந்த
ٱلْقَرْيَةِۖ
ஊரில்
إِنَّ
நிச்சயமாக
أَهْلَهَا
இதில் வசிப்பவர்கள்
كَانُوا۟
இருக்கின்றனர்
ظَٰلِمِينَ
தீயவர்களாக

Wa lammaa jaaa'at Rusulunaaa Ibraaheema bil bushraa qaalooo innaa muhlikoo ahli haazihil qaryati inna ahlahaa kaanoo zaalimeen

(மலக்குகளாகிய) நம்முடைய தூதர்கள், இப்ராஹீமுக்கு நற்செய்தி கூற அவரிடம் வந்த சமயத்தில் (அவரை நோக்கி "லூத்துடைய) ஊராரை நிச்சயமாக நாங்கள் அழித்து விடுவோம். ஏனென்றால், நிச்சயமாக அவ்வூரார் (பாவம் செய்வதில் எல்லை கடந்து) அநியாயக் காரர்களாக ஆகிவிட்டார்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
إِنَّ
நிச்சயமாக
فِيهَا
அதில் இருக்கிறார்
لُوطًاۚ
லூத்
قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
نَحْنُ
நாங்கள்
أَعْلَمُ
நன்கறிந்தவர்கள்
بِمَن فِيهَاۖ
அதில்உள்ளவர்களை
لَنُنَجِّيَنَّهُۥ
நிச்சயமாக அவரையும் நாம் பாதுகாப்போம்
وَأَهْلَهُۥٓ
அவருடைய குடும்பத்தாரையும்
إِلَّا ٱمْرَأَتَهُۥ
தவிர/அவருடைய மனைவியை
كَانَتْ
அவள்ஆகிவிடுவாள்
مِنَ ٱلْغَٰبِرِينَ
மீதம் இருப்பவர்களில்

Qaala inna feeha Lootaa; qaaloo nahnu a'lamu biman feehaa lanunajjjiyannahoo wa ahlahooo illam ra atahoo kaanat minal ghaabireen

அதற்கவர் (அம்மலக்குகளை நோக்கி) "நிச்சயமாக அதில் லூத்தும் இருக்கின்றாரே!" என்று கூறினார். அதற்கவர்கள் "அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். அவருடைய மனைவி (அவருடன் செல்லாது அழிந்து போகக் கூடிய அவ்வூராருடன்) தங்கி (அவர்களுடன் அவளும் அழிந்து) விடுவாள்" என்று கூறினார்கள்.

Tafseer

وَلَمَّآ أَن
வந்த போது
رُسُلُنَا
நமது தூதர்கள்
لُوطًا
லூத்திடம்
سِىٓءَ
அவர் மனம் புண்பட்டார்
بِهِمْ
அவர்களால்
وَضَاقَ
இன்னும் அவர் நெருக்கடிக்கு உள்ளானார்
بِهِمْ
அவர்களால்
ذَرْعًا
மன
وَقَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
لَا تَخَفْ
பயப்படாதீர்
وَلَا تَحْزَنْۖ
இன்னும் கவலைப்படாதீர்!
إِنَّا
நிச்சயமாக நாம்
مُنَجُّوكَ
உம்மைபாதுகாப்போம்
وَأَهْلَكَ
உமது குடும்பத்தையும்
إِلَّا
தவிர
ٱمْرَأَتَكَ
உமது மனைவியை
كَانَتْ
அவள்ஆகிவிடுவாள்
مِنَ ٱلْغَٰبِرِينَ
மீதம் இருப்பவர்களில்

Wa lammaaa an jaaa'at Rusulunaa Lootan seee'a bihim wa daaqa bihim zar'anw wa qaaloo laa takhaf wa laa tahzan innaa munajjooka wa ahlaka illam ra ataka kaanat minal ghaabireen

பின்னர் நம்முடைய (அத்)தூதர்கள் லூத் (நபி) இடம் வந்தபொழுது, (அவ்வூரார் தீய எண்ணத்துடன் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அப்போது) அவர், (அந்த மலக்குகளை பாதுகாத்துகொள்ள) தன் கையால் ஒன்றும் செய்ய முடியாமல், அவர்களுக்காகத் துக்கித்தார். அதற்கவர்கள், (அவரை நோக்கி) "நீங்கள் அஞ்ச வேண்டாம்; துக்கிக்கவும் வேண்டாம். (நாம் இவ்வூராரை அழித்துவிட உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மலக்குகளாவோம்.) நிச்சயமாக நாம் உங்களையும், உங்களுடைய மனைவியைத் தவிர, உங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வோம். அவள் (உங்களுடன் வராது, இவ்வூராருடன்) தங்கி (அழிந்து) விடுவாள்" என்று கூறினார்கள்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
مُنزِلُونَ
இறக்குவோம்
عَلَىٰٓ
மீது
أَهْلِ
வசிப்பவர்
هَٰذِهِ
இந்த
ٱلْقَرْيَةِ
ஊரில்
رِجْزًا
தண்டனையை
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
بِمَا كَانُوا۟
அவர்கள் பாவம் செய்துகொண்டு இருந்ததால்

Innaa munziloona 'alaaa ahli haazihil qaryati rijzam minas samaaa'i bimaa kaanoo yafsuqoon

"அன்றி, இவ்வூரார் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக நிச்சயமாக நாம் இவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைப்போம்" என்று கூறினார்கள்.

Tafseer

وَلَقَد
திட்டவட்டமாக
تَّرَكْنَا
நாம் விட்டுள்ளோம்
مِنْهَآ
அதில்
ءَايَةًۢ
அத்தாட்சியை
بَيِّنَةً
தெளிவான
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்ற

Wa laqat taraknaa min haaa aayatam baiyinatal liqawminy ya'qiloon

(பின்னர், மலக்குகள் கூறியவாறே அவர்கள் மீது வேதனை இறங்கி அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர்.) நிச்சயமாக நாம் அறிவுடைய மக்களுக்குத் தெளிவான அத்தாட்சியை (இன்றளவும்) அவர்களிருந்த ஊரில் விட்டு வைத்திருக்கின்றோம்.

Tafseer

وَإِلَىٰ مَدْيَنَ
இன்னும் ‘மத்யன்’க்கு
أَخَاهُمْ
சகோதரர் அவர்களுடைய
شُعَيْبًا
ஷுஐபை
فَقَالَ
அவர் கூறினார்
يَٰقَوْمِ
என் மக்களே!
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்!
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱرْجُوا۟
இன்னும் ஆதரவு வையுங்கள்!
ٱلْيَوْمَ
நாளை
ٱلْءَاخِرَ
மறுமை
وَلَا تَعْثَوْا۟
வரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مُفْسِدِينَ
தீயவர்களாக இருந்து

Wa ilaa Madyana akhaahum Shu'ayban faqaala yaa qawmi'-budul laaha warjul yawmal aakhira wa laa ta'saw fil ardi mufsideen

மத்யன்வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். இறுதி நாளை எதிர்பார்த்திருங்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்" என்று கூறினார்.

Tafseer

فَكَذَّبُوهُ
அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்
فَأَخَذَتْهُمُ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
ٱلرَّجْفَةُ
நிலநடுக்கம்
فَأَصْبَحُوا۟
அவர்கள் காலையில் ஆகிவிட்டனர்
فِى دَارِهِمْ
தங்கள் இல்லத்தில்
جَٰثِمِينَ
இறந்தவர்களாக

Fakazzaboohu fa akhazat humur rajfatu fa asbahoo fee daarihim jaasimeen

எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அவர்களைப் பூகம்பம் பிடித்துக்கொண்டது. எனவே, அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்துவிட்டனர்.

Tafseer

وَعَادًا
இன்னும் ஆதை
وَثَمُودَا۟
இன்னும் சமூதை
وَقَد تَّبَيَّنَ
தெளிவாக இருக்கின்றது
لَكُم
உங்களுக்கு
مِّن مَّسَٰكِنِهِمْۖ
அவர்களின் தங்குமிடங்களில் இருந்து
وَزَيَّنَ
அலங்கரித்தான்
لَهُمُ
அவர்களுக்கு
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
فَصَدَّهُمْ
தடுத்தான் அவர்களை
عَنِ ٱلسَّبِيلِ
பாதையிலிருந்து
وَكَانُوا۟
அவர்கள் இருந்தனர்
مُسْتَبْصِرِينَ
தெளிவானவர்களாக

Wa 'Aadanw wa Samooda wa qat tabaiyana lakum mim masaakinihim wa zaiyana lahumush Shaitaanu a'maalahum fasaddahum 'anis sabeeli wa kaanoo mustabsireen

அன்றி, இவ்வாறே ஆது, ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். (நீங்கள் போக வர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய (பாவச்) செயலையே ஷைத்தான் அழகாகக் காண்பித்து, நேரான வழியில் செல்லாது அவர்களைத் தடுத்துக் கொண்டான். அவர்கள் நல்லறிவுடையவர் களாகத்தான் இருந்தார்கள். (ஷைத்தானுடைய வலையில் சிக்கி இக்கதிக்கு ஆளானார்கள்.)

Tafseer

وَقَٰرُونَ
இன்னும் காரூனையும்
وَفِرْعَوْنَ
ஃபிர்அவ்னையும்
وَهَٰمَٰنَۖ
ஹாமானையும்
وَلَقَدْ
திட்டவட்டமாக
جَآءَهُم
அவர்களிடம் வந்தார்
مُّوسَىٰ
மூசா
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
فَٱسْتَكْبَرُوا۟
அவர்கள் பெருமையடித்தனர்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَمَا كَانُوا۟
அவர்கள் இல்லை
سَٰبِقِينَ
தப்பி விடுபவர்களாக

Wa Qaaroona wa Fir'awna wa haamaana wa laqad jaaa'ahum Moosa bilbaiyinaati fastakbaroo fil ardi wa maa kaanoo saabiqeen

காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (நாம் இவ்வாறே அழித்துவிட்டோம்.) நிச்சயமாக மூஸா இவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். எனினும், இவர்கள் (அவைகளை நிராகரித்து விட்டுப்) பூமியில் பெருமை கொண்டு நடந்ததினால் (நம் வேதனைக்கு உள்ளானார்கள். அதில் இருந்து) அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியவில்லை.

Tafseer

فَكُلًّا
ஒவ்வொருவரையும்
أَخَذْنَا
நாம் தண்டித்தோம்
بِذَنۢبِهِۦۖ
அவர்களின் பாவத்தினால்
فَمِنْهُم
இவர்களில்
مَّنْ أَرْسَلْنَا
எவர்கள்/நாம் அனுப்பினோம்
عَلَيْهِ
அவர்கள் மீது
حَاصِبًا
கல் மழையை
وَمِنْهُم
இன்னும் இவர்களில்
مَّنْ أَخَذَتْهُ
எவர்கள்/பிடித்தோம்/அவர்கள்
ٱلصَّيْحَةُ
இடி முழக்கம்
وَمِنْهُم
இன்னும் , இவர்களில்
مَّنْ خَسَفْنَا
எவர்கள்/நாம் சொருகினோம்
بِهِ
அவர்களை
ٱلْأَرْضَ
பூமியில்
وَمِنْهُم
இன்னும் இவர்களில்
مَّنْ أَغْرَقْنَاۚ
எவர்கள்/நாம் மூழ்கடித்தோம்
وَمَا كَانَ
இல்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لِيَظْلِمَهُمْ
அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக
وَلَٰكِن
எனினும்
كَانُوٓا۟
அவர்கள் இருந்தனர்
أَنفُسَهُمْ
தங்களுக்கே
يَظْلِمُونَ
அநியாயம் செய்பவர்களாக

Fakullan akhaznaa bizam bihee faminhum man arsalnaa 'alaihi haasibaa; wa minhum man akhazat hus saihatu wa minhum man khasafnaa bihil arda wa minhum man aghraqnaa; wa maa kaanal laahu li yazlimahum wa laakin kaanoo anfusahum yazlimoon

அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில் ஆழ்த்திவிட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்) மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், அவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

Tafseer