اِنَّ الَّذِيْ فَرَضَ عَلَيْكَ الْقُرْاٰنَ لَرَاۤدُّكَ اِلٰى مَعَادٍ ۗقُلْ رَّبِّيْٓ اَعْلَمُ مَنْ جَاۤءَ بِالْهُدٰى وَمَنْ هُوَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ( القصص: ٨٥ )
Innal azee farada 'alaikal Qur-aana laraaadduka ilaa ma'aad; qur Rabbeee a'lamu man jjaaa'a bil hudaa wa man huwa fee dalaalim mubeen (al-Q̈aṣaṣ 28:85)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக எவன் இந்தக் குர்ஆனின் கட்டளைகளை உங்கள் மீது விதித்து இருக்கின்றானோ அவன் நிச்சயமாக உங்களை (மக்காவாகிய) உங்களுடைய இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: நேரான வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? (அதனை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான்.
English Sahih:
Indeed, [O Muhammad], He who imposed upon you the Quran will take you back to a place of return. Say, "My Lord is most knowing of who brings guidance and who is in clear error." ([28] Al-Qasas : 85)
1 Jan Trust Foundation
(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக.