Skip to main content

ஸூரத்துல் கஸஸ் வசனம் ௭௬

۞ اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰى فَبَغٰى عَلَيْهِمْ ۖوَاٰتَيْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَآ اِنَّ مَفَاتِحَهٗ لَتَنُوْۤاُ بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ   ( القصص: ٧٦ )

Indeed
إِنَّ
நிச்சயமாக
Qarun
قَٰرُونَ
காரூன்
was
كَانَ
இருந்தான்
from (the) people
مِن قَوْمِ
சமுதாயத்தில்
(of) Musa
مُوسَىٰ
மூஸாவின்
but he oppressed
فَبَغَىٰ
அநியாயம் புரிந்தான்
[on] them
عَلَيْهِمْۖ
அவர்கள் மீது
And We gave him
وَءَاتَيْنَٰهُ
அவனுக்கு நாம் கொடுத்தோம்
of the treasures
مِنَ ٱلْكُنُوزِ
பொக்கிஷங்களிலிருந்து
which indeed (the) keys of it
مَآ إِنَّ مَفَاتِحَهُۥ
எவை/நிச்சயமாக/அவற்றின் சாவிகள்
would burden
لَتَنُوٓأُ
சிரமத்தோடு சுமக்கும்
a company (of men) possessors of great strength possessors of great strength
بِٱلْعُصْبَةِ أُو۟لِى ٱلْقُوَّةِ
பலமுள்ள கூட்டம்
When
إِذْ
அந்த சமயத்தை (நினைவு கூறுங்கள்)
said
قَالَ
கூறினர்
to him
لَهُۥ
அவனுக்கு
his people
قَوْمُهُۥ
அவனுடைய மக்கள்
"(Do) not exult
لَا تَفْرَحْۖ
பெருமிதம் கொள்ளாதே!
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(does) not love
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
the exultant
ٱلْفَرِحِينَ
பெருமிதப்படுவோரை

Inna Qaaroona kaana min qawmi Moosaa fabaghaaa 'alaihim wa aatainaahu minal kunoozi maaa inna mafaati hahoo latanooo'u bil'usbati ulil quwwati iz qaala lahoo qawmuhoo laa tafrah innal laahaa laa yuhibbul fariheen (al-Q̈aṣaṣ 28:76)

Abdul Hameed Baqavi:

காரூன் (என்பவன்) மூஸாவுடைய மக்களிடம் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் தலைப்பட்டான். ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம். அவைகளின் சாவிகளை மாத்திரம் பலசாலிகளான எத்தனையோ பேர்கள் மிக்க கஷ்டத்தோடு சுமக்க வேண்டியிருந்தது. (இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் "நீ மகிழ்வடைந்துவிடாதே! (பெருமை கொண்டு) மகிழ்வடைபவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை" என்றும்,

English Sahih:

Indeed, Qarun was from the people of Moses, but he tyrannized them. And We gave him of treasures whose keys would burden a band of strong men; thereupon his people said to him, "Do not exult. Indeed, Allah does not like the exultant. ([28] Al-Qasas : 76)

1 Jan Trust Foundation

நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்| “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.