Skip to main content

ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௮

فَلَمَّا جَاۤءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَآ اُوْتِيَ مِثْلَ مَآ اُوْتِيَ مُوْسٰىۗ اَوَلَمْ يَكْفُرُوْا بِمَآ اُوْتِيَ مُوْسٰى مِنْ قَبْلُۚ قَالُوْا سِحْرٰنِ تَظَاهَرَاۗ وَقَالُوْٓا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ   ( القصص: ٤٨ )

But when
فَلَمَّا
வந்த போது
came to them
جَآءَهُمُ
அவர்களுக்கு
the truth
ٱلْحَقُّ
சத்திய தூதர்
from Us from Us
مِنْ عِندِنَا
நம்மிடமிருந்து
they said
قَالُوا۟
கூறினர்
"Why not he was given
لَوْلَآ أُوتِىَ
வழங்கப்பட்டிருக்க வேண்டாமா!
(the) like
مِثْلَ
போன்ற
(of) what was given
مَآ أُوتِىَ
வழங்கப்பட்டதை
(to) Musa?"
مُوسَىٰٓۚ
மூஸாவிற்கு
Did not they disbelieve
أَوَلَمْ يَكْفُرُوا۟
இவர்கள் மறுக்கவில்லையா?
in what was given
بِمَآ أُوتِىَ
வழங்கப்பட்டதை
(to) Musa
مُوسَىٰ
மூஸாவிற்கு
before? before?
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
They said
قَالُوا۟
கூறினர்
"Two magic (works)
سِحْرَانِ
இரண்டு சூனியங்களாகும்
supporting each other"
تَظَٰهَرَا
தங்களுக்குள் உதவி செய்தனர்
And they said
وَقَالُوٓا۟
அவர்கள் கூறினர்
"Indeed, we
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
in all
بِكُلٍّ
அனைத்தையும்
(are) disbelievers"
كَٰفِرُونَ
மறுப்பவர்கள்தான்

Falammaa jaaa'ahumul haqqu min 'indinaa qaaloo law laa ootiya misla maaa ootiyaa Moosaa; awalam yakfuroo bimaaa ootiya Moosaa min qablu qaaloo sihraani tazaaharaa wa qaalooo innaa bikullin kaafiroon (al-Q̈aṣaṣ 28:48)

Abdul Hameed Baqavi:

எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதனை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக இவர்கள் "மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (என்னே!) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்துவிட வில்லையா? "(மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்" என்றும் கூறினார்கள்.

English Sahih:

But when the truth came to them from Us, they said, "Why was he not given like that which was given to Moses?" Did they not disbelieve in that which was given to Moses before? They said, "[They are but] two works of magic supporting each other, and indeed we are, in both, disbelievers." ([28] Al-Qasas : 48)

1 Jan Trust Foundation

எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்| (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) “ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!” என்று; இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்| “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்று.