Skip to main content

فَخَسَفْنَا
ஆகவே, சொருகிவிட்டோம்
بِهِۦ
அவனையும்
وَبِدَارِهِ
அவனுடைய இல்லத்தையும்
ٱلْأَرْضَ
பூமியில்
فَمَا كَانَ
ஆக, ஏதும் இல்லை
لَهُۥ
அவனுக்கு
مِن فِئَةٍ
கூட்டம்
يَنصُرُونَهُۥ
அவனுக்கு உதவுகின்ற
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
وَمَا كَانَ
இன்னும் அவன் இல்லை
مِنَ ٱلْمُنتَصِرِينَ
உதவி செய்துகொள்பவர்களில்

Fakhasafnaa bihee wa bidaarihil arda famaa kaana laho min fi'atiny yansuroo nahoo min doonil laahi wa maa kaana minal muntasireen

அவனையும், அவனுடைய மாளிகையையும் நாம் பூமியில் சொருகி விட்டோம். அல்லாஹ்வுக்கு எதிரிடையாக அவனுக்கு உதவி செய்யக்கூடிய கூட்டத்தார் ஒருவரும் இருக்கவில்லை. அல்லது அவன் தன்னைத்தானே (அல்லாஹ்வின் பிடியிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.

Tafseer

وَأَصْبَحَ
காலையில்
ٱلَّذِينَ تَمَنَّوْا۟
ஆசைப்பட்டவர்கள்
مَكَانَهُۥ
அவனுடைய இடத்தை
بِٱلْأَمْسِ
நேற்று
يَقُولُونَ
கூறினர்
وَيْكَأَنَّ
பார்க்கவில்லையா!/நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَبْسُطُ
விசாலமாக்குகின்றான்
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
مِنْ عِبَادِهِۦ
தனது அடியார்களில்
وَيَقْدِرُۖ
இன்னும் சுருக்கிவிடுகிறான்
لَوْلَآ أَن
அருள் புரிந்திருக்கவில்லையென்றால்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْنَا
நம்மீது
لَخَسَفَ
அவன் சொருகியிருப்பான்
بِنَاۖ
நம்மையும்
وَيْكَأَنَّهُۥ
பார்க்கவில்லையா!/நிச்சயமாக
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்கள்
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்

Wa asbahal lazeena tamannaw makaanahoo bil amsi yaqooloona waika annal laaha yabsutur rizqa limany ya shaaa'u min 'ibaadihee wa yaqdiru law laaa am mannal laahu 'alainaa lakhasafa binaa waika annahoo laa yuflihul kaafiroon

நேற்றைய தினம் அவனுடைய பதவியை விரும்பியவர் களெல்லாம் (அவனும், அவனுடைய மாளிகையும் பூமியில் சொருகிப்போனதைக் கண்ணுற்றதும் திடுக்கிட்டு நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கின்றான்; (அவன் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் விடுகின்றான் என்றும், (மனிதனுடைய சாமர்த்தியத்தால் மட்டும் ஒன்றும் ஆவதில்லை என்றும்) தெரிகின்றதே! அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்கா விடில் அவ்வாறே நம்மையும் பூமி விழுங்கியே இருக்கும், (என்று கூறினர். பிறகு திடுக்கிட்டு, நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக (இறைவனின் அருட்கொடையை மறுக்கும்) நன்றி கெட்டவர்கள் வெற்றி அடையவே மாட்டார்கள் என்று (தெரிகின்றதே! என்று) கூற ஆரம்பித்தார்கள்.

Tafseer

تِلْكَ
அந்த
ٱلدَّارُ
இல்லமானது
ٱلْءَاخِرَةُ
மறுமை
نَجْعَلُهَا
அதை ஆக்குவோம்
لِلَّذِينَ لَا
விரும்பாதவர்களுக்கு
عُلُوًّا
அநியாயத்தையோ
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَا فَسَادًاۚ
குழப்பத்தையோ
وَٱلْعَٰقِبَةُ
முடிவான நற்பாக்கியம்
لِلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு

Tilkad Daarul Aakhiratu naj'aluhaa lillazeena laa yureedoona 'uluwwan fil ardi wa laa fasaadaa; wal 'aaqibatu lilmuttaqeen

(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால், முடிவான நற்பாக்கியம் இறை அச்சம் உடையவர்களுக்குத்தான்.

Tafseer

مَن
எவர்
جَآءَ
வருவாரோ
بِٱلْحَسَنَةِ
நன்மையைக்கொண்டு
فَلَهُۥ
அவருக்கு
خَيْرٌ
நற்கூலி கிடைக்கும்
مِّنْهَاۖ
அதனால்
وَمَن
எவர்கள்
جَآءَ
வருவார்களோ
بِٱلسَّيِّئَةِ
தீமையைக் கொண்டு
فَلَا يُجْزَى
கூலி கொடுக்கப்பட மாட்டார்(கள்)
ٱلَّذِينَ عَمِلُوا۟
செய்தவர்கள்
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை
إِلَّا
தவிர
مَا كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கே

Man jaaa'a bilhasanati falahoo khairum minhaa wa man jaaa'a bissaiyi'ati falaa yujzal lazeena 'amilus saiyiaati illaa maa kaanoo ya'maloon

(உங்களில்) எவரேனும் யாதொரு நன்மையை(ச் செய்து) கொண்டு வந்தால், அவருக்கு அதைவிட மேலான கூலியே கிடைக்கும். உங்களில் எவரேனும் யாதொரு பாவத்தைக் கொண்டு வந்தாலோ, அவர் செய்த பாவங்களின் அளவேயன்றி (அதிகமாகத்) தண்டிக்கப்பட மாட்டார்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِى فَرَضَ
இறக்கியவன்
عَلَيْكَ
உம்மீது
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
لَرَآدُّكَ
உம்மை திரும்பக்கொண்டு வருவான்
إِلَىٰ مَعَادٍۚ
வழமைக்கு
قُل
கூறுவீராக!
رَّبِّىٓ
என் இறைவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
مَن جَآءَ
கொண்டு வந்தவரையும்
بِٱلْهُدَىٰ
நேர்வழியை
وَمَنْ هُوَ
இருப்பவரையும்
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
مُّبِينٍ
தெளிவான

Innal azee farada 'alaikal Qur-aana laraaadduka ilaa ma'aad; qur Rabbeee a'lamu man jjaaa'a bil hudaa wa man huwa fee dalaalim mubeen

(நபியே!) நிச்சயமாக எவன் இந்தக் குர்ஆனின் கட்டளைகளை உங்கள் மீது விதித்து இருக்கின்றானோ அவன் நிச்சயமாக உங்களை (மக்காவாகிய) உங்களுடைய இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: நேரான வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? (அதனை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான்.

Tafseer

وَمَا كُنتَ
நீர் எதிர்பார்த்திருக்கவில்லை
أَن يُلْقَىٰٓ
இறக்கப்படுவதை
إِلَيْكَ
உமக்கு
ٱلْكِتَٰبُ
இந்த வேதம்
إِلَّا
என்றாலும்
رَحْمَةً
கருணையினால்தான்`
مِّن رَّبِّكَۖ
உமது இறைவனின்
فَلَا تَكُونَنَّ
ஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர்
ظَهِيرًا
உதவியாளராக
لِّلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு

Wa maa kunta tarjooo ai yulqaaa ilaikal Kitaabu illaa rahmatam mir Rabbika falaa takoonanna zaheeral lilkaafireen

(நபியே!) உங்களது இறைவனின் அருளால் அன்றி இவ்வேதம் (அவன் புறத்திலிருந்து) உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. (அவனுடைய அருளாலேயே இது உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.) ஆகவே, நீங்கள் நிராகரிப்பவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டாம்.

Tafseer

وَلَا يَصُدُّنَّكَ
உம்மை அவர்கள் திருப்பி விடவேண்டாம்
عَنْ ءَايَٰتِ
வசனங்களை விட்டு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
بَعْدَ
பின்னர்
إِذْ أُنزِلَتْ
அவை இறக்கப்பட்டதன்
إِلَيْكَۖ
உமக்கு
وَٱدْعُ
அழைப்பீராக
إِلَىٰ
பக்கம்
رَبِّكَۖ
உமது இறைவன்
وَلَا تَكُونَنَّ
இன்னும் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Wa laa yasuddunnaka 'an Aayaatil laahi ba'da iz unzilat ilaika wad'u ilaa Rabbika wa laa takonanna minal mushrikeen

இவ்வேதம் உங்களுக்கு அருளப்பட்ட பின் (இதிலுள்ள) அல்லாஹ்வுடைய வசனங்களி(ன் பக்கம் நீங்கள் மக்களை அழைப்பதி)லிருந்து அவர்கள் உங்களைத் தடுத்து விட வேண்டாம். ஆகவே, உங்கள் இறைவன் பக்கம் (நீங்கள் அவர்களை) அழைத்துக் கொண்டேயிருங்கள். நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்களுடன் சேர்ந்து விட வேண்டாம்.

Tafseer

وَلَا تَدْعُ
இன்னும் அழைத்துவிடாதீர் !
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
إِلَٰهًا
ஒரு கடவுளை
ءَاخَرَۘ
வேறு
لَآ
இல்லவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரிய கடவுள்
إِلَّا
தவிர
هُوَۚ
அவனை
كُلُّ
எல்லா
شَىْءٍ
பொருள்களும்
هَالِكٌ
அழியக்கூடியவையே
إِلَّا
தவிர
وَجْهَهُۥۚ
அவனது முகத்தை
لَهُ
அவனுக்கே உரியது
ٱلْحُكْمُ
அதிகாரம்
وَإِلَيْهِ
அவனிடமே
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Wa laa tad'u ma'al laahi ilaahan aakhar; laaa ilaaha illaa Hoo; kullu shai'in haalikun illaa Wajhah; lahul hukkmu wa ilaihi turja'oon

(நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை நீங்கள் அழைக்க வேண்டாம். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனைத் தவிர எல்லா பொருள்களும் அழிந்துவிடக் கூடியனவே. எல்லா அதிகாரங்களும் அவனுக்குரியனவே. அவனிடமே நீங்கள் அனைவரும் கொண்டு வரப்படுவீர்கள்.

Tafseer