Skip to main content

وَجَعَلْنَٰهُمْ
அவர்களை ஆக்கினோம்
أَئِمَّةً
முன்னோடிகளாக
يَدْعُونَ
அழைக்கின்றனர்
إِلَى ٱلنَّارِۖ
நரகத்தின் பக்கம்
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
لَا يُنصَرُونَ
அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்

Wa ja'alnaahum a'immatany yad'oona ilan Naari wa Yawmal Qiyaamati laa yunsaroon

(அவர்கள் இவ்வுலகத்தில் இருந்தவரை மனிதர்களை) நரகத்திற்கு அழைக்கக்கூடிய தலைவர்களாகவே அவர்களை ஆக்கி வைத்தோம். மறுமை நாளிலோ அவர்களுக்கு எத்தகைய உதவியும் கிடைக்காது.

Tafseer

وَأَتْبَعْنَٰهُمْ
அவர்களுக்குத் தொடர வைத்தோம்
فِى هَٰذِهِ
இவ்வுலகத்திலும்
لَعْنَةًۖ
சாபத்தை
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமையிலும்
هُم
அவர்கள்
مِّنَ ٱلْمَقْبُوحِينَ
அசிங்கப்படுத்தப்பட்டவர்களில் உள்ளவர்கள்

Wa atba'naahum fee haazihid dunyaa la'natanw wa Yawmal Qiyaamati hum minal maqbooheen

இவ்வுலகில் நம்முடைய சாபம் அவர்களைப் பின்பற்றும்படி செய்தோம். மறுமை நாளிலோ அவர்களுடைய நிலைமை மிக்க கேடானதாகவே இருக்கும்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
நாம் தந்தோம்
مُوسَى
மூஸாவிற்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
مِنۢ بَعْدِ
பின்னர்
مَآ أَهْلَكْنَا
நாம் அழித்த
ٱلْقُرُونَ
தலைமுறையினர்களை
ٱلْأُولَىٰ
முந்திய(வர்கள்)
بَصَآئِرَ
ஒளியாகவும்
لِلنَّاسِ
மக்களுக்கு
وَهُدًى
நேர்வழியாகவும்
وَرَحْمَةً
கருணையாகவும்
لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்

Wa laqad aatainaa Moosal Kitaaba mim ba'di maaa ahlaknal quroonal oolaa basaaa'ira linnaasi wa hudanw wa rahmatal la'allahum yata zakkkaroon

(அவர்களுக்கு) முன்னிருந்த வகுப்பார்களையும் நாம் அழித்துவிட்ட பின்னர் (அவர்களுடைய வேதங்களும் அழிந்து விட்டதனால்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்கு நல்ல படிப்பினை தரக் கூடியதாகவும், நேரான வழியாகவும், அருளாகவும் இருந்தது. அவர்கள் (அதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே (கொடுத்தோம்).

Tafseer

وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
بِجَانِبِ
பக்கத்தில்
ٱلْغَرْبِىِّ
மேற்கு
إِذْ قَضَيْنَآ
நாம் ஒப்படைத்த போது
إِلَىٰ مُوسَى
மூஸாவிடம்
ٱلْأَمْرَ
சட்டங்களை
وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
مِنَ ٱلشَّٰهِدِينَ
இருந்தவர்களில்

Wa maa kunta bijaanibil gharbiyyi iz qadainaaa ilaa Moosal amra wa maa kunta minash shaahideen

(நபியே! தூர் ஸீனாய் என்னும் மலையில்) நாம் மூஸாவுக்குக் (கற்பலகையில் எழுதப்பட்ட) கட்டளைகளை விதித்தபோது நீங்கள் அதன் மேற்குத் திசையில் இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நீங்கள் ஒருவருமல்ல.

Tafseer

وَلَٰكِنَّآ
என்றாலும்
أَنشَأْنَا
நாம்உருவாக்கினோம்
قُرُونًا
பல தலைமுறையினரை
فَتَطَاوَلَ
நீண்டு சென்றது
عَلَيْهِمُ
அவர்களுக்கு
ٱلْعُمُرُۚ
காலம்
وَمَا كُنتَ
இன்னும் நீர் இல்லை
ثَاوِيًا
தங்கியவராக
فِىٓ أَهْلِ
மத்யன் வாசிகளுடன்
تَتْلُوا۟
நீர் ஓதியவராக
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ءَايَٰتِنَا
நமது வசனங்களை
وَلَٰكِنَّا
என்றாலும் நாம்தான்
كُنَّا
இருந்தோம்
مُرْسِلِينَ
தூதர்களை அனுப்பக்கூடியவர்களாக

Wa laakinnaa anshaanaa quroonan fatataawala 'alaihimul 'umur; wa maa kunta saawiyan feee ahli Madyana tatloo 'alaihim Aayaatinaa wa laakinnaa kunnaa mursileen

எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ வகுப்பினரை நாம் உற்பத்தி செய்தோம். அவர்கள் சென்றும் நீண்ட காலம் ஆகிவிட்டது. (அவ்வாறிருந்தும் மூஸாவைப் பற்றிய இவ்வளவு உண்மையான சரித்திரத்தை நீங்கள் கூறுவதெல்லாம் இறைவனால் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதால்தான் என்று இவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?) அன்றி, (நபியே!) மத்யன் வாசிகளிடமும் நீங்கள் தங்கியிருக்கவில்லை. (அவ்வாறிருந்தும் அவர்களைப் பற்றிய) நம்முடைய வசனங்களை நீங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றீர்கள். ஆகவே, நிச்சயமாக நாம் உங்களை நம் தூதர்களில் ஒருவராகவே அனுப்பி வைத்திருக்கின்றோம். (நம்முடைய வஹீ மூலம் கிடைத்த விஷயங்களையே நீங்கள் அவர்களுக்கு அறிவிக்கின்றீர்கள்.)

Tafseer

وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
بِجَانِبِ
அருகில்
ٱلطُّورِ
மலைக்கு
إِذْ نَادَيْنَا
நாம் அழைத்தபோது
وَلَٰكِن
எனினும்
رَّحْمَةً
அருளினால்
مِّن رَّبِّكَ
உமது இறைவனின்
لِتُنذِرَ
ஏனெனில், நீர் எச்சரிக்க வேண்டும்
قَوْمًا
ஒரு மக்களை
مَّآ أَتَىٰهُم
அவர்களிடம் வரவில்லை
مِّن نَّذِيرٍ
எச்சரிப்பாளர் எவரும்
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக

Wa maa kunta bijaanibit Toori iz naadainaa wa laakir rahmatam mir Rabbika litunzira qawmam maaa ataahum min nazeerim min qablika la'allahum yatazakkaroon

அன்றி, (தூர் ஸீனாய் என்னும் மலைக்கு மூஸாவை) நாம் அழைத்த பொழுது (அந்தத்) தூர் (என்னும்) மலையின் சார்பிலும் நீங்கள் இருக்கவில்லை. எனினும், உங்களுக்கு முன்னர் நம்முடைய யாதொரு தூதருமே வராத (இந்த) மக்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பொருட்டே உங்கள் இறைவனின் அருளால் (இவ்விஷயம் உங்களுக்கு அறிவிக்கப்பட்டது.) அவர்கள் (இதைக்கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக!

Tafseer

وَلَوْلَآ أَن
அவர்களுக்கு ஏற்பட்டு
مُّصِيبَةٌۢ
ஒரு சோதனை
بِمَا قَدَّمَتْ
முற்படுத்தியதால்
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
فَيَقُولُوا۟
அவர்கள் கூறாதிருப்பதற்காக
رَبَّنَا
எங்கள் இறைவா!
لَوْلَآ أَرْسَلْتَ
நீ அனுப்பி இருக்கக்கூடாதா?
إِلَيْنَا
எங்களிடம்
رَسُولًا
ஒரு தூதரை
فَنَتَّبِعَ
நாங்கள் பின்பற்றி இருப்போமே!
ءَايَٰتِكَ
உனது வசனங்களை
وَنَكُونَ
நாங்கள்ஆகியிருப்போமே
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்

Wa law laaa an tuseebahum museebatum bimaa qaddamat aideehim fa yaqooloo Rabbanaa law laaa arsalta ilainaa Rasoolan fanattabi'a Aayaatika wa nakoona minal mu'mineen

(நபியே! உங்களுடைய மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை யாதொரு வேதனை வந்தடையும் சமயத்தில் "எங்கள் இறைவனே! எங்களிடம் உன்னுடைய ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன்னுடைய வசனங்களை நாங்கள் பின்பற்றி உன்னை நம்பிக்கை கொண்டிருப்போமே" என்று கூறாதிருக்கும் பொருட்டே (உங்களை நம்முடைய தூதராக இவர்களிடம் அனுப்பி வைத்தோம்.)

Tafseer

فَلَمَّا
வந்த போது
جَآءَهُمُ
அவர்களுக்கு
ٱلْحَقُّ
சத்திய தூதர்
مِنْ عِندِنَا
நம்மிடமிருந்து
قَالُوا۟
கூறினர்
لَوْلَآ أُوتِىَ
வழங்கப்பட்டிருக்க வேண்டாமா!
مِثْلَ
போன்ற
مَآ أُوتِىَ
வழங்கப்பட்டதை
مُوسَىٰٓۚ
மூஸாவிற்கு
أَوَلَمْ يَكْفُرُوا۟
இவர்கள் மறுக்கவில்லையா?
بِمَآ أُوتِىَ
வழங்கப்பட்டதை
مُوسَىٰ
மூஸாவிற்கு
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
قَالُوا۟
கூறினர்
سِحْرَانِ
இரண்டு சூனியங்களாகும்
تَظَٰهَرَا
தங்களுக்குள் உதவி செய்தனர்
وَقَالُوٓا۟
அவர்கள் கூறினர்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
بِكُلٍّ
அனைத்தையும்
كَٰفِرُونَ
மறுப்பவர்கள்தான்

Falammaa jaaa'ahumul haqqu min 'indinaa qaaloo law laa ootiya misla maaa ootiyaa Moosaa; awalam yakfuroo bimaaa ootiya Moosaa min qablu qaaloo sihraani tazaaharaa wa qaalooo innaa bikullin kaafiroon

எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதனை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக இவர்கள் "மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (என்னே!) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்துவிட வில்லையா? "(மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்" என்றும் கூறினார்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
فَأْتُوا۟ بِكِتَٰبٍ
ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள்
مِّنْ عِندِ
அல்லாஹ்விடமிருந்து
هُوَ
அது
أَهْدَىٰ
மிக்க நேர்வழி
مِنْهُمَآ
அவ்விரண்டை விட
أَتَّبِعْهُ
நான் அதை பின்பற்றுகிறேன்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Qul faatoo bi Kitaabim min 'indil laahi huwa ahdaa minhu maaa attabi'hu in kuntum saadiqeen

ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், அல்லாஹ் விடமிருந்து வந்த வேதங்களில் (மூஸாவுடைய வேதமும், திருக்குர்ஆனுமாகிய) இவ்விரண்டையும்விட நேரான வழியை அறிவிக்கக் கூடியதொரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதனைப் பின்பற்றுகிறேன்" என்று நீங்கள் கூறுங்கள்.

Tafseer

فَإِن لَّمْ
அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால்
لَكَ
உமக்கு
فَٱعْلَمْ
நீர் அறிவீராக!
أَنَّمَا يَتَّبِعُونَ
நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம்
أَهْوَآءَهُمْۚ
மன இச்சைகளைத்தான் தங்கள்
وَمَنْ
யார்?
أَضَلُّ
பெரும் வழிகேடன்
مِمَّنِ ٱتَّبَعَ
பின்பற்றியவனை விட
هَوَىٰهُ
தனது மன இச்சையை
بِغَيْرِ هُدًى
நேர்வழி அன்றி
مِّنَ ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார

Fa il lam yastajeeboo laka fa'lam annamaa yattabi'oona ahwaaa'ahum; w aman adallu mimmanit taba'a hawaahu bighari hudam minal laah; innal laaha laa yahdil qawmaz zaalimeen

உங்களுக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் சரீர இச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வினுடைய நேரான வழியை விட்டுத் தன்னுடைய சரீர இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ! நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.

Tafseer