Qaala nakkiroo lahaa 'arshahaa nanzur atahtadeee am takoonu minal lazeena laa yahtadoon
"அவளுடைய சிம்மாசனத்தை மாற்றி (அமைத்து) விடுங்கள். அவள் அதனை(த் தன்னுடையதுதான் என்று) அறிந்து கொள்கிறாளா அல்லது அறிந்துகொள்ள முடியாதவளாகி விடுகின்றாளா?" என்று பார்ப்போமென்று கூறினார்.
Falammaa jaaa'at qeela ahaakaza 'arshuki qaalat kaanna hoo; wa ooteenal 'ilma min qablihaa wa kunnaa muslimeen
அவள் வந்து சேரவே (ஸுலைமான் அவளை நோக்கி) "உன்னுடைய சிம்மாசனம் இவ்வாறு தானா (இருக்கும்)?" என்று கேட்டதற்கு அவள் "இது முற்றிலும் அதைப் போலவே இருக்கின்றது. இதற்கு முன்னதாகவே (உங்கள் மேன்மையைப் பற்றிய) விஷயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டே வந்திருக்கிறோம்" என்றாள்.
Wa saddahaa maa kaanat ta'budu min doonil laahi innahaa kaanat min qawmin kaafireen
இதுவரையில் (நம்பிக்கை கொள்ளாது) அவளைத் தடுத்துக் கொண்டிருந்ததெல்லாம் அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்த (பொய்யான) தெய்வங்கள் தாம். ஏனென்றால், அவள் அல்லாஹ்வை நிராகரிக்கும் மக்களில் உள்ளவளாக இருந்தாள்.
Qeela lahad khulis sarha falammaa ra at hu hasibat hu lujjatanw wa khashafat 'an saaqaihaa; qaala innahoo sarhum mumarradum min qawaareer; qaalat Rabbi innee zalamtu nafsee wa aslamtu ma'a Sulaimaana lillaahi Rabbil 'aalameen
பின்னர் "இம்மாளிகையில் நுழை" என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதனைக் கண்டு (அதன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்கு கற்களை) தண்ணீர் என்று எண்ணி ஆடையை (நனைந்து போகாதிருக்க) இரு கெண்டைக்கால்களில் இருந்து உயர்த்தினாள். அதற்கு (ஸுலைமான் "அது தண்ணீரல்ல) பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட மாளிகை தான்" என்று கூறினார். அதற்கவள் "என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப் படுகின்றேன்" என்று கூறினாள்.
Wa laqad arsalnaaa ilaa Samoda akhaahum Saalihan ani'budul lahha fa izaa hum fareeqaani yakhtasimoon
நிச்சயமாக நாம் ஸமூது என்னும் மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். அவர், (அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ் ஒருவனை வணங்குங்கள்" என்று கூறினார். அச்சமயம் அவர்கள் இரு பிரிவினர்களாகி(த் தங்களுக்குள்) தர்க்கம் செய்துகொண்டார்கள்.
Qaala yaa qawmi lima tasta'jiloona bissaiyi'ati qablal hasanati law laa tas taghfiroonal laaha la'allakum turhamoon
(அதற்கு ஸாலிஹ்) "என்னுடைய மக்களே! நீங்கள் ஏன் அவசரப்பட்டு நன்மைக்கு முன்னதாகவே தண்டனையைத் தேடிக் கொள்கிறீர்கள்? அல்லாஹ்விடத்தில் நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டாமா? நீங்கள் கிருபை செய்யப்படுவீர்களே!" என்று கூறினார்.
Qaalut taiyarnaa bika wa bimam ma'ak; qaala taaa'irukum 'indal laahi bal antum qawmun tuftanoon
அதற்கவர்கள் "உங்களையும் உங்களுடன் இருப்பவர் களையும் நாங்கள் அபசகுணமாக எண்ணுகிறோம்" என்று கூறினார்கள். அதற்கவர் "அல்லாஹ்விடமிருந்துதான் உங்கள் துர்ச்சகுனம் வந்தது. நீங்கள் (அதிசீக்கிரத்தில் அல்லாஹ்வினுடைய) சோதனைக்குள்ளாக வேண்டிய மக்கள்" என்று கூறினார்.
Wa kaana fil madeenati tis'atu rahtiny yufsidoona fil ardi wa laa yuslihoon
அவ்வூரில் (விஷமிகளுக்குத் தலைவர்களாக) ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மை செய்யாது அவ்வூரிலும் (மற்ற சுற்றுப்புறங்களிலும்) விஷமம் செய்துகொண்டே திரிந்தார்கள்.
Qaaloo taqaasamoo billaahi lanubaiyitannahoo wa ahlahoo summaa lanaqoolana liwaliy yihee maa shahidnaa mahlika ahliee wa innaa lasaadiqoon
அவர்கள் ஸாலிஹையும் அவருடைய குடும்பத்தையும் நாம் இரவோடு இரவாக அழித்து விடுவோம். (இதனை ஒருவரிடமும் கூறுவதில்லை என்று) நாம் நமக்குள்ளாக அல்லாஹ் மீது சத்தியம் செய்துகொண்டு அவருடைய சொந்தக்காரர்களிடம், "அவர் வெட்டுப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகிறோம்" என்று நாம் கூறிவிடலாம் என்று கூறிக்கொண்டார்கள்.
Wa makaroo makranw wa makarnaa makranw wa hum laa yash'uroon
(இவ்வாறு) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். நாமும் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் அதனை உணர்ந்துகொள்ள முடியவில்லை.