Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௨௭

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِيْرًا وَّانْتَصَرُوْا مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا ۗوَسَيَعْلَمُ الَّذِيْنَ ظَلَمُوْٓا اَيَّ مُنْقَلَبٍ يَّنْقَلِبُوْنَ ࣖ   ( الشعراء: ٢٢٧ )

Except
إِلَّا
தவிர
those who believe
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
and do righteous deeds
وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை செய்தனர்
and remember
وَذَكَرُوا۟
நினைவு கூர்ந்தனர்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வை
much
كَثِيرًا
அதிகம்
and defend themselves
وَٱنتَصَرُوا۟
இன்னும் பழிவாங்கினார்கள்
after after after they were wronged
مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ۗ
தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர்
And will come to know
وَسَيَعْلَمُ
விரைவில் அறிவார்கள்
those who have wronged (to) what
ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ
அநியாயம் செய்தவர்கள்/எந்த
return
مُنقَلَبٍ
திரும்பும் இடத்திற்கு
they will return
يَنقَلِبُونَ
திரும்புவார்கள்

Illal lazeena aamanoo w a'amilus saalihaati wa zakarul laaha kaseeranw wantasaroo mim ba'di maa zulimoo; wa saya'lamul lazeena zalamooo aiya munqalbiny yanqaliboon (aš-Šuʿarāʾ 26:227)

Abdul Hameed Baqavi:

(ஆயினும்,) அவர்களில் எவர் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் நிந்தனையால்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினாரோ அவரைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம். பிறரை நிந்தனை செய்து துன்புறுத்திய இந்த) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்துகொள்வார்கள்.

English Sahih:

Except those [poets] who believe and do righteous deeds and remember Allah often and defend [the Muslims] after they were wronged. And those who have wronged are going to know to what [kind of] return they will be returned. ([26] Ash-Shu'ara : 227)

1 Jan Trust Foundation

ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.