Skip to main content

فَفَرَرْتُ
நான் ஓடிவிட்டேன்
مِنكُمْ
உங்களை விட்டு
لَمَّا خِفْتُكُمْ
உங்களை நான் பயந்தபோது
فَوَهَبَ
ஆகவே,வழங்கினான்
لِى
எனக்கு
رَبِّى
என் இறைவன்
حُكْمًا
தூதுவத்தை
وَجَعَلَنِى
இன்னும் என்னை ஆக்கினான்
مِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில் ஒருவராக

Fafarartu minkum lam maa khiftukum fawahaba lee Rabbee hukmanw wa ja'alanee minal mursaleen

ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என்னுடைய இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன்னுடைய தூதராகவும் ஆக்கினான்.

Tafseer

وَتِلْكَ
அது
نِعْمَةٌ
ஓர் உபகாரம்தான்
تَمُنُّهَا
நீ சொல்லிக் காட்டுகின்றாய்/அதை
عَلَىَّ
என் மீது
أَنْ عَبَّدتَّ
அடிமையாக்கி வைத்திருக்கிறாய்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை

Wa tilka ni'matun tamun nuhaa 'alaiya an 'abbatta Baneee Israaa'eel

ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினான்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
وَمَا رَبُّ
இறைவன் யார்?
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Qaala Fir'awnu wa maa Rabbul 'aalameen

அதற்குப் ஃபிர்அவ்ன் "உலகத்தாரின் இறைவன் யார்?" என்று கேட்டான்.

Tafseer

قَالَ
கூறினார்
رَبُّ
இறைவன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَمَا بَيْنَهُمَآۖ
இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّوقِنِينَ
உறுதிகொள்பவர்களாக

Qaala Rabbus samaawaati wal ardi wa maa bainahumaa in kuntum mooqineen

அதற்கு (மூஸா) "வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவன் தான் (உலகத்தாரை படைப்பவனும் வளர்ப்பவனும் ஆவான்). இவ்வுண்மையை நீங்கள் நம்புவீர்களா?" என்று கூறினார்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
لِمَنْ حَوْلَهُۥٓ
தன்னை சுற்றி உள்ளவர்களிடம்
أَلَا تَسْتَمِعُونَ
நீங்கள் செவிமடுக்கிறீர்களா?

Qaala liman hawlahooo alaa tastami'oon

அதற்கவன், தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி "நீங்கள் இதனைச் செவியுறவில்லையா?" என்று கூறினான்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
وَرَبُّ
இன்னும் இறைவன்
ءَابَآئِكُمُ
உங்கள் மூதாதைகளின்
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான

Qaala Rabbukum wa Rabbu aabaaa'ikumul awwaleen

அதற்கவர் "(அவன்) உங்கள் இறைவன் (மட்டும் அன்று; உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் (அவன்தான்)" என்று கூறினார்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
إِنَّ
நிச்சயமாக
رَسُولَكُمُ
உங்கள் தூதர்
ٱلَّذِىٓ أُرْسِلَ
எவர்/அனுப்பப்பட்ட
إِلَيْكُمْ
உங்களிடம்
لَمَجْنُونٌ
கண்டிப்பாக ஒரு பைத்தியக்காரர்

Qaala inna Rasoolakumul lazee ursila ilaikum lamajnoon

அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) "உங்களிடம் அனுப்பப்பட்ட (தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்" என்று சொன்னான்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبُّ
இறைவன்
ٱلْمَشْرِقِ
கிழக்கு திசை
وَٱلْمَغْرِبِ
இன்னும் மேற்கு திசை
وَمَا بَيْنَهُمَآۖ
இன்னும் அவை இரண்டுக்கும்இடையில்உள்ளவற்றின்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تَعْقِلُونَ
சிந்தித்துபுரிபவர்களாக

Qaala Rabbul mashriqi wal maghribi wa maa baina humaa in kuntum ta'qiloon

அதற்கு (மூஸா) "கீழ் நாட்டையும் மேல் நாட்டையும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களையும் படைத்து காப்பவன் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதனை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)" என்று கூறினார்.

Tafseer

قَالَ
அவன் கூறினான்
لَئِنِ ٱتَّخَذْتَ
நீர் எடுத்துக் கொண்டால்
إِلَٰهًا
ஒரு கடவுளை
غَيْرِى
என்னைஅன்றிவேறு
لَأَجْعَلَنَّكَ
உம்மையும் ஆக்கி விடுவேன்
مِنَ ٱلْمَسْجُونِينَ
சிறைப்படுத்தப்பட்டவர்களில்

Qaala la'init takhazta ilaahan ghairee la aj'alannaka minal masjooneen

அதற்கவன் "என்னைத் தவிர (மற்றெதனையும்) நீங்கள் இறைவனாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உங்களை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்" என்று கூறினான்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
أَوَلَوْ جِئْتُكَ
நான் உம்மிடம் கொண்டு வந்தாலுமா?
بِشَىْءٍ مُّبِينٍ
தெளிவான ஒன்றை

Qaala awalw ji'tuka bishai'im mubeen

அதற்கவர் "தெளிவானதொரு அத்தாட்சியை நான் உன்னிடம் கொண்டு வந்தபோதிலுமா?" என்று கேட்டார்.

Tafseer