Skip to main content

وَلَا تُطِيعُوٓا۟
கீழ்ப்படியாதீர்கள்
أَمْرَ
காரியத்திற்கு
ٱلْمُسْرِفِينَ
வரம்பு மீறிகளின்

Wa laa tutee'ooo amral musrifeen

வரம்பு மீறுபவர்களின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள்.

Tafseer

ٱلَّذِينَ يُفْسِدُونَ
எவர்கள்/ குழப்பம்செய்கின்றனர்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَا يُصْلِحُونَ
அவர்கள் சீர்திருத்துவதில்லை

Allazeena yufsidoona fil ardi wa laa yuslihoon

அவர்கள், பூமியில் விஷமம் செய்வார்களேயன்றி நன்மை செய்ய மாட்டார்கள்" என்று கூறினார்.

Tafseer

قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
مِنَ ٱلْمُسَحَّرِينَ
சூனியம் செய்யப்பட்ட ஒருவர்தான்

Qaalooo innamaa anta minal musahhareen

அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) "உங்கள்மீது எவரோ சூனியம் செய்து விட்டார்கள். (ஆதலால், உங்களுடைய புத்தி தடுமாறிவிட்டது.)

Tafseer

مَآ أَنتَ
நீர் இல்லை
إِلَّا
தவிர
بَشَرٌ
மனிதராகவே
مِّثْلُنَا
எங்களைப் போன்ற
فَأْتِ
ஆகவே கொண்டு வாரீர்
بِـَٔايَةٍ
அத்தாட்சியை
إِن كُنتَ
நீர் இருந்தால்
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்

Maaa anta illaa basharum mislunaa faati bi Aayatin in kunta minas saadiqeen

நீங்கள் நம்மைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை. நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் (நாம் விரும்பியவாறு) யாதொரு அத்தாட்சியைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
هَٰذِهِۦ
இது ஒரு
نَاقَةٌ
பெண் ஒட்டகை
لَّهَا
இதற்கு
شِرْبٌ
நீர் அருந்துவதற்குரிய ஒரு பங்கு
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கும்
شِرْبُ
நீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளது
يَوْمٍ
நாளில்
مَّعْلُومٍ
குறிப்பிட்ட

Qaala haazihee naaqatul lahaa shirbunw w alakum shirbu yawmim ma'loom

அதற்கவர் "(உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கின்றது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகின்றது.

Tafseer

وَلَا تَمَسُّوهَا
அதை தொட்டு விடாதீர்கள்!
بِسُوٓءٍ
தீங்கைக் கொண்டு
فَيَأْخُذَكُمْ
பிடித்துக்கொள்ளும் உங்களை
عَذَابُ
தண்டனை
يَوْمٍ
நாளின்
عَظِيمٍ
பெரிய

Wa laa tamassoohaa bisooo'in fa yaakhuzakum 'azaabu Yawmin 'Azeem

அன்றி, நீங்கள் அதற்கு யாதொரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறாயின் ஒரு நாளின் கடினமான வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்" என்று கூறினார்.

Tafseer

فَعَقَرُوهَا
ஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள்
فَأَصْبَحُوا۟
ஆகவே ஆகிவிட்டனர்
نَٰدِمِينَ
கைசேதப்பட்டவர்களாக

Fa'aqaroohaa fa asbahoo naadimeen

(இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.

Tafseer

فَأَخَذَهُمُ
பிடித்தது அவர்களை
ٱلْعَذَابُۗ
தண்டனை
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
وَمَا كَانَ
இல்லை
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Fa akhazahumul 'azaab; inna fee zaalika la Aayah; wa maa kaana aksaruhum m'mineen

ஆகவே, அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது. நிச்சயமாக (அவர்களுக்கு) இதிலோர் அத்தாட்சி இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவேயில்லை.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Wa inna Rabbaka la Huwal 'Azeezur Raheem

(நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவனே (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
قَوْمُ
மக்கள்
لُوطٍ
லூத்துடைய
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை

kazzabat qawmu Lootinil mursaleen

லூத்துடைய மக்களும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.

Tafseer