Skip to main content

إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
وَمَا كَانَ
இல்லை
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Inna fee zaalika la Aayaah; wa maa kaana aksaruhum mu'mineen

நிச்சயமாக இதிலொரு படிப்பினையிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Wa inna Rabbaka la huwal 'Azeezur Raheem

(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவனும் பேரன்புடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
عَادٌ
ஆது சமுதாய மக்கள்
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை

Kazzabat 'Aadunil mursaleen

"ஆது" உடைய மக்களும் நம்முடைய தூதரைப் பொய்யாக்கினார்கள்.

Tafseer

إِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!
لَهُمْ
அவர்களுக்கு
أَخُوهُمْ
சகோதரர் அவர்களது
هُودٌ
ஹூது
أَلَا تَتَّقُونَ
நீங்கள் பயந்துகொள்ள மாட்டீர்களா?

Iz qaala lahum akhoohum Hoodun alaa tattaqoon

அவர்களுடைய சகோதரர் "ஹூத்" அவர்களை நோக்கி "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?

Tafseer

إِنِّى
நிச்சயமாக நான்
لَكُمْ
உங்களுக்கு
رَسُولٌ
ஒரு தூதர்
أَمِينٌ
நம்பிக்கையான

Innee lakum Rasoolun ameen

நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாவேன்;

Tafseer

فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَأَطِيعُونِ
எனக்கு கீழ்ப்படியுங்கள்!

Fattaqullaaha wa atee'oon

ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிப்பட்டு நடங்கள்.

Tafseer

وَمَآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடம் கேட்கவில்லை
عَلَيْهِ
இதற்காக
مِنْ أَجْرٍۖ
எவ்வித கூலியையும்
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
إِلَّا
தவிர
عَلَىٰ رَبِّ
இறைவனிடமே
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Wa maa as'alukum 'alaihi min ajrin in ajriya illaa 'alaa Rabbil 'aalameen

இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமே இருக்கிறது.

Tafseer

أَتَبْنُونَ
கட்டிடத்தை கட்டுகிறீர்களா?
بِكُلِّ رِيعٍ
ஒவ்வொருஇடத்திலும்
ءَايَةً
ஒரு கட்டிடத்தை
تَعْبَثُونَ
விளையாடுகிறீர்கள்

Atabnoona bikulli ree'in aayatan ta'basoon

நீங்கள் உயர்ந்த இடங்களிலெல்லாம் (தூண்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை வீணாகக் கட்டுகிறீர்களே!

Tafseer

وَتَتَّخِذُونَ
இன்னும் நீங்கள் எற்படுத்துகிறீர்கள்
مَصَانِعَ
பெரியகோட்டைகளை
لَعَلَّكُمْ تَخْلُدُونَ
நீங்கள் நிரந்தரமாக இருப்பதைப் போன்று

Wa tattakhizoona masaani'a la'allakum takhludoon

நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கின்றீர்கள்.

Tafseer

وَإِذَا بَطَشْتُم
நீங்கள் யாரையும் தாக்கினால்
بَطَشْتُمْ
தாக்குகிறீர்கள்
جَبَّارِينَ
அநியாயக்காரர்களாக

Wa izaa batashtum batashtum jabbaareen

நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிகக் கொடுமையாக நடத்துகின்றீர்கள்.

Tafseer