Skip to main content

قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
أَنُؤْمِنُ
நாம் நம்பிக்கை கொள்வோமா
لَكَ
உம்மை
وَٱتَّبَعَكَ
உம்மை பின்பற்றி இருக்க
ٱلْأَرْذَلُونَ
சாதாரணமானவர்கள்

Qaalooo anu'minu laka wattaba 'akal arzaloon

அதற்கவர்கள் "உங்களை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தாம் உங்களைப் பின்பற்றியிருக்கின்றனர்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
وَمَا عِلْمِى
எனக்கு ஞானம் இல்லை
بِمَا
எதைப் பற்றி
كَانُوا۟
இருந்தனர்
يَعْمَلُونَ
செய்கின்றனர்

Qaala wa maa 'ilmee bimaa kaanoo ya'maloon

அதற்கு அவர், "நான் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை இன்னதென அறிய மாட்டேன். (அதனை விசாரிப்பதும் என் வேலையல்ல) என்றும்,

Tafseer

إِنْ حِسَابُهُمْ
அவர்களது விசாரணை இல்லை
إِلَّا
தவிர
عَلَىٰ
மீதே
رَبِّىۖ
என் இறைவன்
لَوْ تَشْعُرُونَ
நீங்கள் உணரவேண்டுமே!

In hisaabuhum illaa 'alaa Rabbee law tash'uroon

(இவைகளைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட அறிந்துகொள்ள வேண்டாமா?

Tafseer

وَمَآ أَنَا۠
நான் இல்லை
بِطَارِدِ
விரட்டக்கூடியவன்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை

Wa maaa ana bitaaridil mu'mineen

நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது.

Tafseer

إِنْ أَنَا۠
நான் இல்லை
إِلَّا
தவிர
نَذِيرٌ
எச்சரிப்பாளராகவே
مُّبِينٌ
தெளிவான

In ana illaa nazeerum mubeen

பகிரங்கமாக நான் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனேயன்றி வேறில்லை" என்று கூறினார்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
لَئِن لَّمْ
நீர் விலகவில்லை என்றால்
يَٰنُوحُ
நூஹே!
لَتَكُونَنَّ
நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்
مِنَ ٱلْمَرْجُومِينَ
ஏசப்படுபவர்களில்

Qaaloo la'il lam tantahi yaa Noohu latakoonanna minal marjoomeen

அதற்கவர்கள் "நூஹே! நீங்கள் இதனை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீங்கள் கல்லெறிந்து கொல்லப் படுவீர்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா!
إِنَّ
நிச்சயமாக
قَوْمِى
என் மக்கள்
كَذَّبُونِ
என்னை பொய்ப்பித்து விட்டனர்

Qaala Rabbi inna qawmee kazzaboon

அதற்கவர், "என் இறைவனே! என்னுடைய (இந்த) மக்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்."

Tafseer

فَٱفْتَحْ
ஆகவே, நீ தீர்ப்பளி!
بَيْنِى
எனக்கும் இடையில்
وَبَيْنَهُمْ
இன்னும் அவர்களுக்கும் இடையில்
فَتْحًا
தெளிவான
وَنَجِّنِى
என்னை(யும்) பாதுகாத்துக்கொள்
وَمَن مَّعِىَ
என்னுடன் உள்ளவர்களையும்
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்

Faftab bainee wa bai nahum fat hanw wa najjinee wa mam ma'iya minal mu'mineen

ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர் களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார்.

Tafseer

فَأَنجَيْنَٰهُ
ஆகவே, அவரையும் பாதுகாத்தோம்
وَمَن مَّعَهُۥ
அவருடன் உள்ளவர்களையும்
فِى ٱلْفُلْكِ
கப்பலில்
ٱلْمَشْحُونِ
நிரம்பிய

Fa anjainaahu wa mamma'ahoo fil fulkil mashhoon

ஆகவே, நாம் அவரையும் (நம்பிக்கை கொண்டு) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற உயிர்ப் பிராணிகளால்) நிறைந்திருந்த கப்பலில் ஏற்றி பாதுகாத்துக் கொண்டோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
أَغْرَقْنَا
நாம் அழித்தோம்
بَعْدُ
பின்னர்
ٱلْبَاقِينَ
மீதம் இருந்தவர்களை

Summa aghraqnaa ba'dul baaqeen

இதன் பின்னர் (கப்பலில் ஏறாது) மீதமிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம்.

Tafseer