Wa laa sadeeqin hameem
(எங்கள் மீது அனுதாபமுள்ள) யாதொரு உண்மையான நண்பனுமில்லையே!
Falaw anna lanaa karratan fanakoona minal mu'mineen
நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக் கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்" என்று புலம்புவார்கள்.
Inna fee zaalika la Aayatanw wa maa kaana aksaruhum mu'mineen
மெய்யாகவே இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நம்புவதில்லை.
Wa inna Rabbaka la Huwal 'Azeezur Raheem
(நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவனே (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனுமாக இருக்கிறான்.
Kazzabat qawmu Noohinil Mursaleen
நூஹ்வுடைய மக்கள் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Iz qaala lahum akhoohum Noohun alaa tattaqoon
நூஹ் தன்னுடைய (இனச்) சகோதரர்களை நோக்கிக் கூறினார்: "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படவேண்டாமா?
Innee lakum Rasoolun ameen
மெய்யாகவே நான் உங்களிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையுள்ள ஒரு தூதனாவேன்.
Fattaqullaaha wa atee'oon
ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்.
Wa maaa as'alukum 'alaihi min ajrin in ajriya illaa 'alaa Rabbil 'aalameen
(இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி யாவும் உலகத்தாரைப் படைத்து காப்பாற்றி வளர்ப்பவனிடமே இருக்கின்றன.
Fattaqul laaha wa atee'oon
ஆதலால், நீங்கள் அந்த அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்" (என்று கூறினார்.)