Skip to main content

ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭௦

اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰۤىِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍۗ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا   ( الفرقان: ٧٠ )

Except
إِلَّا
எனினும்,
(he) who
مَن
யார்
repents
تَابَ
திருந்தினார்(கள்)
and believes
وَءَامَنَ
இன்னும் நம்பிக்கை கொண்டார்(கள்)
and does
وَعَمِلَ
இன்னும் செய்தார்
righteous deeds
عَمَلًا
செயலை
righteous deeds
صَٰلِحًا
நன்மையான
then (for) those
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
Allah will replace
يُبَدِّلُ
மாற்றி விடுவான்
Allah will replace
ٱللَّهُ
அல்லாஹ்
their evil deeds
سَيِّـَٔاتِهِمْ
அவர்களுடைய தீய செயல்களை
(with) good ones
حَسَنَٰتٍۗ
நல்ல செயல்களாக
And is
وَكَانَ
இருக்கிறான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
Oft-Forgiving
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
Most Merciful
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Illaa man taaba wa 'aamana wa 'amila 'amalan saalihan fa ulaaa'ika yubad dilul laahu saiyi aatihim hasanaat; wa kaanal laahu Ghafoorar Raheemaa (al-Furq̈ān 25:70)

Abdul Hameed Baqavi:

ஆயினும், (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்பு கோரி) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்துவிட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல; அதனை) நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

Except for those who repent, believe and do righteous work. For them Allah will replace their evil deeds with good. And ever is Allah Forgiving and Merciful. ([25] Al-Furqan : 70)

1 Jan Trust Foundation

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.