Skip to main content

لَّيْسَ
இல்லை
عَلَى
மீது
ٱلْأَعْمَىٰ
குருடர்
حَرَجٌ
குற்றம்
وَلَا
இன்னும் இல்லை
عَلَى
மீது
ٱلْأَعْرَجِ
ஊனமுற்றவர்
حَرَجٌ
குற்றம்
وَلَا
இன்னும் இல்லை
عَلَى
மீது
ٱلْمَرِيضِ
நோயாளி
حَرَجٌ
குற்றம்
وَلَا
இன்னும் இல்லை
عَلَىٰٓ
மீது
أَنفُسِكُمْ
உங்கள்
أَن تَأْكُلُوا۟
நீங்கள் உண்பது
مِنۢ بُيُوتِكُمْ
உங்கள் இல்லங்களிலிருந்து
أَوْ
அல்லது
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
ءَابَآئِكُمْ
உங்கள் தந்தைகளின்
أَوْ
அல்லது
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
أُمَّهَٰتِكُمْ
உங்கள் தாய்மார்களின்
أَوْ
அல்லது
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
إِخْوَٰنِكُمْ
உங்கள் சகோதரர்களின்
أَوْ
அல்லது
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
أَخَوَٰتِكُمْ
உங்கள் சகோதரிகளின்
أَوْ
அல்லது
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
أَعْمَٰمِكُمْ
உங்கள் தந்தையின் சகோதரர்களின்
أَوْ
அல்லது
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
عَمَّٰتِكُمْ
உங்கள் மாமிகளின்
أَوْ
அல்லது
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
أَخْوَٰلِكُمْ
உங்கள் தாய்மாமன்களின்
أَوْ
அல்லது
بُيُوتِ
இல்லங்களிலிருந்து
خَٰلَٰتِكُمْ
உங்கள் தாயின் சகோதரிகளின்
أَوْ
அல்லது
مَا
எந்த
مَلَكْتُم
நீங்கள் உங்கள் உரிமையில் வைத்திருக்கிறீர்களோ
مَّفَاتِحَهُۥٓ
அதன் சாவிகளை
أَوْ
அல்லது
صَدِيقِكُمْۚ
உங்கள் நண்பனின்
لَيْسَ
இல்லை
عَلَيْكُمْ
உங்கள் மீது
جُنَاحٌ
குற்றம்
أَن تَأْكُلُوا۟
நீங்கள் உண்பது
جَمِيعًا
நீங்கள் ஒன்றினைந்தவர்களாக
أَوْ
அல்லது
أَشْتَاتًاۚ
பிரிந்தவர்களாக
فَإِذَا دَخَلْتُم
நீங்கள் நுழைந்தால்
بُيُوتًا
இல்லங்களில்
فَسَلِّمُوا۟
சலாமை சொல்லுங்கள்
عَلَىٰٓ
மீது
أَنفُسِكُمْ
உங்கள்
تَحِيَّةً
முகமனாகிய
مِّنْ عِندِ
அல்லாஹ்விடமிருந்து
مُبَٰرَكَةً
அருள்நிறைந்த
طَيِّبَةًۚ
நல்ல
كَذَٰلِكَ
இவ்வாறு
يُبَيِّنُ
தெளிவுபடுத்துகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لَعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து விளங்குவதற்காக

Laisa 'alal a'maa barajunw wa laa 'alal a'raji barajunw wa laa 'alal mareedi barajun wa laa 'alaa anfusikum an taakuloo mim buyootikum aw buyooti aabaaa'ikum aw buyooti ummahaatikum aw buyooti ikhwaanikum aw buyooti akhawaatikum aw buyooti a'maamikum aw buyooti 'ammaatikum aw buyooti akhwaalikum aw buyooti khaalaatikum aw maa malaktum mafaatihahooo aw sadeeqikum; laisa 'alaikum junaahun an taakuloo jamee'an aw ashtaata; fa izaa dakhaltum buyootan fasallimoo 'alaaa anfusikum tahiyyatam min 'indil laahi mubaarakatan taiyibah; kazaalika yubai yinul laahu lakumul Aayaati la'allakum ta'qiloon

(நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது; நொண்டி மீதும் குற்றமாகாது; நோயாளி மீதும் குற்றமாகாது; உங்கள் மீதும் குற்றமாகாது. நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தைகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாய்மார்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயினுடைய சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகள் வீட்டிலோ அல்லது சாவி உங்கள் வசமிருக்கும் வீட்டிலோ அல்லது உங்கள் தோழர்கள் வீட்டிலோ நீங்கள் (உணவு) புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. இதில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புசித்தாலும் சரி, தனித்தனியாகப் புசித்தாலும் சரியே (உங்கள் மீது குற்றமில்லை). ஆனால், நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வினால் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான ("ஸலாமுன்" என்னும்) வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக்கொள்ளவும். இவ்வாறே இறைவன் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! (என்பதை) நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!

Tafseer

إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள் எல்லாம்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
உண்மைப்படுத்தியவர்கள்தான்
بِٱللَّهِ
இன்னும் அல்லாஹ்வையும்
وَرَسُولِهِۦ
இன்னும் அவனது தூதரையும்
وَإِذَا كَانُوا۟
அவர்கள் இருந்தால்
مَعَهُۥ
அவருடன்
عَلَىٰٓ أَمْرٍ
ஒரு காரியத்தில்
جَامِعٍ
பொது
لَّمْ يَذْهَبُوا۟
செல்ல மாட்டார்கள்
حَتَّىٰ يَسْتَـْٔذِنُوهُۚ
அவரிடம் அவர்கள் அனுமதி கேட்காமல்
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக உங்களிடம் அனுமதி கேட்பவர்கள்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
ٱلَّذِينَ يُؤْمِنُونَ
உண்மைப்படுத்தியவர்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
وَرَسُولِهِۦۚ
இன்னும் அவனது தூதரையும்
فَإِذَا ٱسْتَـْٔذَنُوكَ
ஆகவே, அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால்
لِبَعْضِ
சில
شَأْنِهِمْ
தங்களின் காரியத்திற்கு
فَأْذَن
அனுமதி அளிப்பீராக
لِّمَن شِئْتَ
நீர் நாடியவருக்கு
مِنْهُمْ
அவர்களில்
وَٱسْتَغْفِرْ
இன்னும் பாவமன்னிப்புக் கோருவீராக
لَهُمُ
அவர்களுக்காக
ٱللَّهَۚ
அல்லாஹ்விடம்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Innamal mu'minoonal lazeena aamanoo billaahi wa Rasoolihee wa izaa kaanoo ma'ahoo 'alaaa amrin jaami'il lam yazhaboo hataa yastaazinooh; innal lazeena yastaa zinookana ulaaa'ikal lazeena yu'minoona billaahi wa Rasoolih; fa izas taazanooka liba'di shaanihim faazal liman shi'ta minhum wastaghfir lahumul laah; innal laaha Gahfoor Raheem

நிச்சயமாக உண்மையான நம்பிக்கையாளர்கள் மெய்யாகவே யாரென்றால், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள்தாம். அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை செய்ய அவ(னுடைய தூத)ரிடம் கூடியிருந்தால், அவருடைய அனுமதியின்றி (கூட்டத்திலிருந்து) அவர்கள் போகவே மாட்டார்கள். (அவ்வாறு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டால், நபியே!) நிச்சயமாக எவர்கள் உங்களுடைய அனுமதியைக் கோரி (பெற்றே) செல்கிறார்களோ அவர்கள்தாம் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாக நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே, அவர்கள் தங்களுடைய யாதொரு அவசர வேலைக்காக உங்களிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீங்கள் விரும்பிய வர்களுக்கு அனுமதி அளியுங்கள். அவர்களுக்காக அல்லாஹ் விடத்தில் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَّا تَجْعَلُوا۟
ஆக்கிவிடாதீர்கள்
دُعَآءَ
சாபத்தை
ٱلرَّسُولِ
தூதரின்
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
كَدُعَآءِ
சபிப்பது போன்று
بَعْضِكُم
உங்களில் சிலர்
بَعْضًاۚ
சிலரை
قَدْ
திட்டமாக
يَعْلَمُ
நன்கறிவான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ يَتَسَلَّلُونَ
எவர்கள்/நழுவிச் செல்கிறார்கள்
مِنكُمْ
உங்களில்
لِوَاذًاۚ
மறைவாக
فَلْيَحْذَرِ
(அவர்கள்) உஷாராக இருக்கட்டும்
ٱلَّذِينَ يُخَالِفُونَ
மாறுசெய்பவர்கள்
عَنْ أَمْرِهِۦٓ
அவருடைய கட்டளைக்கு
أَن تُصِيبَهُمْ
தங்களைஅடைவதை
فِتْنَةٌ
குழப்பம்
أَوْ
அல்லது
يُصِيبَهُمْ
தங்களை அடைவதை
عَذَابٌ
தண்டனை
أَلِيمٌ
வலிதரும்

La taj'aloo du'aaa'ar Rasooli bainakum kadu'aaa'i badikum ba'daa; qad ya'lamul laahul lazeena yatasallaloona minkum liwaazaa; fal yahzaril lazeena yukhaalifoona 'an amriheee an tuseebahum fitnatun aw yuseebahum 'azaabun aleem

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதனை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப்போல் கருதவேண்டாம். (யா முஹம்மது என பெயர் கூறி அழைக்க வேண்டாம்.) உங்களில் எவர்கள் (நம்முடைய தூதர் கூட்டிய சபையிலிருந்து) மறைவாக நழுவிவிடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நிச்சயமாக நன்கறிவான். ஆகவே, எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு யாதொரு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கவும்.

Tafseer

أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّ
நிச்சயமாக
لِلَّهِ
அல்லாஹ்விற்கே சொந்தமானவை
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியிலும்
قَدْ
திட்டமாக
يَعْلَمُ
அவன் நன்கறிந்தவன்
مَآ أَنتُمْ
நீங்கள் இருக்கும்
عَلَيْهِ
அதன் மீது
وَيَوْمَ
நாளில்
يُرْجَعُونَ
அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும்
إِلَيْهِ
அவனிடம்
فَيُنَبِّئُهُم
அவன் அவர்களுக்கு அறிவிப்பான்
بِمَا عَمِلُوا۟ۗ
அவர்கள் செய்ததை
وَٱللَّهُ
அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்

Alaaa inna lillaahi maa fis samaawaati wal ardi qad ya'lamu maaa antum 'alaihi wa Yawma yurja'oona ilaihi fa yunaabi 'uhum bimaa 'amiloo; wallaahu bikulli shai'in 'Aleem

வானங்களிலும் பூமியிலும் இருப்பவை யாவும் அல்லாஹ்வுக்கு உரியனவே என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (இன்றைய தினம்) இருக்கும் நிலைமையையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அவனிடம் கொண்டு போகப்படும் நாளில் (இருக்கும் நிலைமையையும் அவன் நன்கறிவான். ஆகவே,) அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளை (அந்த நாளில்) அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer