Skip to main content

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்வை
يُسَبِّحُ
துதிக்கின்றனர்
لَهُۥ
அவனை
مَن فِى
வானத்தில் உள்ளவர்களும்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
وَٱلطَّيْرُ
பறவைகளும்
صَٰٓفَّٰتٍۖ
வரிசையாக பறக்கின்ற
كُلٌّ
ஒவ்வொருவரும்
قَدْ
திட்டமாக
عَلِمَ
அறிந்துள்ளனர்
صَلَاتَهُۥ
அவனை தொழுவதையும்
وَتَسْبِيحَهُۥۗ
அவனை துதிப்பதையும்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِمَا يَفْعَلُونَ
அவர்கள் செய்வதை

Alam tara annal laaha yusabbihu lahoo man fissamaawaati wal ardi wat tairu saaaffaatim kullun qad 'alima Salaatahoo wa tasbeehah; wallaahu 'aleemum bimaa yaf'aloon

வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளும் (இவற்றிற்கு மத்தியில் உள்ளவைகளும் குறிப்பாக) பறவைகளும் (தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை (நபியே!) நீங்கள் காண வில்லையா? இவை யாவும் தாங்கள் புகழ்ந்து வணங்க வேண்டிய முறையை நிச்சயமாக அறிந்தே இருக்கின்றன. அல்லாஹ்வும் அவைகள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான்.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
مُلْكُ
ஆட்சி உரியது
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியின்
وَإِلَى
பக்கமே
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلْمَصِيرُ
மீளுமிடம்

Wa lillaahi mulkus samaawaati wal ardi wa ilal laahil maseer

வானங்கள் பூமி (ஆகியவை)யின் ஆட்சி அல்லாஹ்வுக்கு உரியதே! அவனிடமே (அனைவரும்) திரும்பச் செல்ல வேண்டியதிருக்கிறது.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يُزْجِى
ஓட்டிவருகிறான்
سَحَابًا
மேகங்களை
ثُمَّ
பிறகு
يُؤَلِّفُ
இணைக்கிறான்
بَيْنَهُۥ
அவற்றுக்கு இடையில்
ثُمَّ
பிறகு
يَجْعَلُهُۥ
அவற்றை ஆக்குகிறான்
رُكَامًا
ஒன்றிணைக்கப்பட்டதாக
فَتَرَى
ஆகவே பார்க்கிறீர்
ٱلْوَدْقَ
மழை
يَخْرُجُ
வெளிவருவதை
مِنْ خِلَٰلِهِۦ
அவற்றுக்கு இடையிலிருந்து
وَيُنَزِّلُ
அவன் இறக்குகிறான்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مِن جِبَالٍ
மலைகளில்
فِيهَا
அதில் உள்ள
مِنۢ بَرَدٍ
பனியிலிருந்து
فَيُصِيبُ
அவன் தண்டிக்கிறான்
بِهِۦ
அதன் மூலம்
مَن يَشَآءُ
தான் நாடியவரை
وَيَصْرِفُهُۥ
இன்னும் அதை திருப்பிவிடுகிறான்
عَن
விட்டும்
مَّن يَشَآءُۖ
தான் நாடியவரை
يَكَادُ سَنَا
கடுமையான வெளிச்சம் ஆரம்பித்து விடுகிறது
بَرْقِهِۦ
அதன் மின்னலின்
يَذْهَبُ
பறித்துவிடும்
بِٱلْأَبْصَٰرِ
பார்வைகளை

Alam tara annal laaha yuzjee sahaaban summa yu'allifu bainahoo summa yaj'aluhoo rukaaman fataral wadqa yakhruju min khilaalihee wa yunazzilu minas samaaa'i min jibaalin feehaa mim barain fa yuseebu bihee mai yashaaa'u wa yasrifuhoo 'am mai yashaaa'u yakkaadu sanaa barqihee yazhabu bil absaar

(பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும்) மேகங்களை ஓட்டி அவைகளை ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாக நிச்சயமாக அல்லாஹ்தான் அடுக்குகின்றான் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்க வில்லையா? பின்னர், அந்த மேகங்களின் மத்தியிலிருந்து மழையை பொழியச் செய்வதையும் நீங்கள் காண்கிறீர்கள். அவனே வானத்தில் மலை போன்றிருக்கும் மேகங்களிலிருந்து ஆலங்கட்டி (கல் மாரி)யையும் பொழியச் செய்கின்றான். அதனை அவன் நாடியவர்கள் மீது விழும்படி செய்கிறான். அவன் நாடியவர்களை விட்டு அதனைத் தடுத்துக் கொள்கிறான். அதன் மின்னலில் வெளிச்சம் பார்வையைப் பறிக்கப் பார்க்கின்றது.

Tafseer

يُقَلِّبُ
மாற்றுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّيْلَ وَٱلنَّهَارَۚ
இரவு இன்னும் பகலை
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இவற்றில்
لَعِبْرَةً
படிப்பினை இருக்கிறது
لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
அறிவுடையவர்களுக்கு

Yuqallibul laahul laila wannahaar; inna fee zaalika la'ibratal li ulil absaar

இரவையும் பகலையும் அல்லாஹ்வே (திருப்பித் திருப்பி) மாற்றிக்கொண்டு இருக்கின்றான். அறிவுடையவருக்கு இதில் ஒரு (நல்ல) படிப்பினை உண்டு.

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்
خَلَقَ
படைத்தான்
كُلَّ
எல்லா
دَآبَّةٍ
உயிரினங்களையும்
مِّن مَّآءٍۖ
தண்ணீரிலிருந்து
فَمِنْهُم
அவர்களில் உண்டு
مَّن يَمْشِى
நடப்பவையும்
عَلَىٰ بَطْنِهِۦ
தனது வயிற்றின் மீது
وَمِنْهُم
அவர்களில் உண்டு
مَّن يَمْشِى
நடப்பவையும்
عَلَىٰ رِجْلَيْنِ
இரண்டு கால்கள் மீது
وَمِنْهُم
அவர்களில் உண்டு
مَّن يَمْشِى
நடப்பவையும்
عَلَىٰٓ أَرْبَعٍۚ
நான்கு கால்கள் மீது
يَخْلُقُ
படைக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَا يَشَآءُۚ
தான் நாடியதை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wallaahu khalaqa kulla daaabbatim mim maaa'in faminhum mai yamshee 'alaa batnihee wa minhum mai yamshee 'alaa rijlaine wa minhum mai yamshee 'alaaa arba'; yakhluqul laahu maa yashaaa'; innal laaha 'alaa kulli shai'in Qadeer

(மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்த போதிலும் (அவை யாவும் ஒரு வகையாக இருக்க வில்லை.) அவைகளில் சில தன் வயிற்றால் (பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவைகளில் சில இரு கால்களால் நடக்கின்றன. அவைகளில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவைகளை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

Tafseer

لَّقَدْ
திட்டவட்டமாக
أَنزَلْنَآ
நாம் இறக்கியுள்ளோம்
ءَايَٰتٍ
வசனங்களை
مُّبَيِّنَٰتٍۚ
தெளிவான
وَٱللَّهُ
அல்லாஹ்
يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
مَن يَشَآءُ
தான் நாடியவருக்கு
إِلَىٰ
பக்கம்
صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
நேரான பாதையின்

Laqad anzalnaaa Aayaatim mubaiyinaat; wallaahu yahdee mai yashaaa'u ilaa Siraatim Mustaqeem

(மனிதர்களே! அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய) தெளிவான வசனங்களையே நிச்சயமாக நாம் (இதில்) இறக்கியிருக்கிறோம். எனினும், அல்லாஹ் தான் விரும்பிய (நல்ல) வர்களையே (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகிறான்.

Tafseer

وَيَقُولُونَ
கூறுகின்றனர்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
وَبِٱلرَّسُولِ
தூதரையும்
وَأَطَعْنَا
கீழ்ப்படிந்தோம்
ثُمَّ
பிறகு
يَتَوَلَّىٰ
திரும்பி விடுகின்றனர்
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
مِّنْهُم
அவர்களில்
مِّنۢ بَعْدِ
பின்னர்
ذَٰلِكَۚ
அதற்குப்
وَمَآ
இல்லை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
بِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்

Wa yaqooloona aamannaa billaahi wa bir Rasooli wa ata'naa summa yatawallaa fareequm minhum mim ba'di zaalik; wa maaa ulaaa'ika bilmu'mineen

(நபியே!) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நாங்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றோம்" என்று கூறுபவர்களில் சிலர் பின்னர் புறக்கணித்து விடுகின்றனர். ஆகவே, இவர்கள் (உண்மையான) நம்பிக்கை யாளர்களே அல்ல.

Tafseer

وَإِذَا دُعُوٓا۟
அவர்கள் அழைக்கப்பட்டால்
إِلَى
பக்கம்
ٱللَّهِ
அல்லாஹ்
وَرَسُولِهِۦ
இன்னும் அவனது தூதரின்
لِيَحْكُمَ
தீர்ப்பளிப்பதற்காக
بَيْنَهُمْ
அவர்களுக்கிடையில்
إِذَا فَرِيقٌ
அப்போது ஒரு பிரிவினர்
مِّنْهُم
அவர்களில்
مُّعْرِضُونَ
புறக்கணிக்கின்றனர்

Wa izaa du'ooo ilal laahi wa Rasoolihee li yahkuma bainahum izaa fareequm minhum mu'ridoon

தவிர, தங்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி நியாயத்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வாருங்கள் என அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணித்து விடுகின்றனர்.

Tafseer

وَإِن يَكُن
இருந்தால்
لَّهُمُ
அவர்களுக்கு சாதகமாக
ٱلْحَقُّ
சத்தியம்
يَأْتُوٓا۟
வருகின்றனர்
إِلَيْهِ
அவர் பக்கம்
مُذْعِنِينَ
கட்டுப்பட்டவர்களாக

Wa iny-yakul lahumul haqqu yaatooo ilaihi muz'ineen

எனினும், தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக இருந்தால் (நம்முடைய தூதருக்கு) கீழ்படிந்து (நடப்பவர்களைப் போல்) அவரிடம் வருகின்றனர்.

Tafseer

أَفِى قُلُوبِهِم
அவர்களது உள்ளங்களில் இருக்கிறதா?
مَّرَضٌ
நோய்
أَمِ
அல்லது
ٱرْتَابُوٓا۟
அவர்கள் சந்தேகிக்கின்றனரா?
أَمْ
அல்லது
يَخَافُونَ
பயப்படுகின்றனரா?
أَن يَحِيفَ
அநீதியிழைத்து விடுவார்கள் என்று
ٱللَّهُ
அல்லாஹ்வும்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَرَسُولُهُۥۚ
இன்னும் அவனது தூதரும்
بَلْ
மாறாக
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Afee quloobihim ma radun amirtaabooo am yakhaafoona ani yaheefallaahu 'alaihim wa Rasooluh; bal ulaaa'ika humuz zaalimoon

என்னே! அவர்களுடைய உள்ளங்களில் ஏதும் நோய் இருக்கின்றதா? அல்லது (அவரைப் பற்றி) இவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இவர்களுக்கு அநியாயம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? (அன்று, அவர்கள் அநீதி செய்யப்படவே மாட்டார்கள்.) மாறாக, இவர்கள்தாம் வரம்பு மீறும் அநியாயக் காரர்கள். (ஆதலால்தான் இவ்வாறு செய்கின்றனர்.)

Tafseer