Skip to main content

ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௬௨

وَلَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۖ وَلَدَيْنَا كِتٰبٌ يَّنْطِقُ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ   ( المؤمنون: ٦٢ )

And not We burden
وَلَا نُكَلِّفُ
நாம் சிரமம் தருவதில்லை
any soul
نَفْسًا
எந்த ஓர் ஆன்மாவுக்கும்
except
إِلَّا
தவிர
(to) its capacity
وُسْعَهَاۖ
அதன் வசதிக்கு உட்பட்டே
and with Us
وَلَدَيْنَا
இன்னும் நம்மிடம் இருக்கின்றது
(is) a Record
كِتَٰبٌ
ஒரு புத்தகம்
(which) speaks
يَنطِقُ
பேசுகின்றது
with the truth;
بِٱلْحَقِّۚ
சத்தியத்தைக் கொண்டு
and they
وَهُمْ
அவர்கள்
(will) not be wronged
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Wa laa nukallifu nafsan illaa wus'ahaa wa ladainaa kitaabuny yantiqu bilhaqqi w ahum la yuzlamoon (al-Muʾminūn 23:62)

Abdul Hameed Baqavi:

நாம் யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. ஒவ்வொருவரின் மெய்யான தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கின்றது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

English Sahih:

And We charge no soul except [with that within] its capacity, and with Us is a record which speaks with truth; and they will not be wronged. ([23] Al-Mu'minun : 62)

1 Jan Trust Foundation

நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.