Yaaa aiyuhar Rusulu kuloo minat taiyibaati wa'maloo saalihan innee bimaa ta'maloona 'Aleem
(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) "என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவைகளையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகின்றவனாகவே இருக்கிறேன்.
Wa inna haaziheee ummatukum ummatanw waahidatanw wa Ana Rabbukum fattaqoon
நிச்சயமாக உங்களுடைய இந்த மார்க்கம் ஒரே வழிதான். (இதில் வேற்றுமை கிடையாது.) நானே உங்களுடைய இறைவன். ஆகவே, நீங்கள் என்னையே அஞ்சுங்கள்" (என்று கட்டளை இட்டிருந்தோம். அவர்களும் தம் மக்களுக்கு இவ்வாறே கூறி வந்தனர்.)
Fataqatta'ooo amrahum bainahum zuburaa; kullu hizbim bimaa ladaihim farihoon
எனினும், (யூதர்கள்) தங்களுடைய வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக் கொண்டு சந்தோஷம் அடைகின்றனர்.
Fazarhum fee ghamratihim hattaa heen
(நபியே!) நீங்கள் அவர்களை ஒரு காலம் வரையில் அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டுவிடுங்கள்.
A-yahsaboona annnamaa numiduhum bihee mimmaalinw wa baneen
நாம் அவர்களுக்கு ஆண் சந்ததிகளையும் பொருள்களையும் கொடுத்து வருவதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டனர்?
Nusaari'u lahum fil khairaat; bal laa yash'uroon
இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறன்று! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
Innal lazeena hum min khashyati Rabbihim mushfiqoon
நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும்,
Wallazeena hum bi Aayaati Rabbihim yu'minoon
எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ அவர்களும்,
Wallazeena hum bi Rabbihim laa yushrikoon
எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும்,
Wallazeena yu'toona maaa aataw wa quloobuhum wajilatun annahum ilaa Rabbihim raaji'oon
எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரையில் தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும்,