Skip to main content

وَإِنَّ
நிச்சயமாக
لَكُمْ
உங்களுக்கு
فِى ٱلْأَنْعَٰمِ
கால்நடையில்
لَعِبْرَةًۖ
ஒரு படிப்பினை
نُّسْقِيكُم
உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்
مِّمَّا فِى
அவற்றின் வயிற்றிலிருந்து
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
فِيهَا
அவற்றில்
مَنَٰفِعُ
பலன்களும்
كَثِيرَةٌ
அதிகமான
وَمِنْهَا
இன்னும் அவற்றிலிருந்து
تَأْكُلُونَ
நீங்கள் புசியுங்கள்

Wa inna lakum fil an'aami la'ibrah; nusqeekum mimmaa fee butoonihaa wa lakum feehaa manaafi'u kaseeratunw wa minhaa taakuloon

நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அன்றி, உங்களுக்கு அவைகளில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை நீங்கள் புசிக்கின்றீர்கள்.

Tafseer

وَعَلَيْهَا
அவற்றின் மீதும்
وَعَلَى ٱلْفُلْكِ
கப்பல்கள் மீதும்
تُحْمَلُونَ
நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்

Wa 'alaihaa wa'alal fulki tuhmaloon

அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகின்றீர்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
نُوحًا
நூஹை
إِلَىٰ قَوْمِهِۦ
அவருடைய மக்களிடம்
فَقَالَ
அவர் கூறினார்
يَٰقَوْمِ
எனது மக்களே
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا
இல்லை
لَكُم
உங்களுக்கு
مِّنْ إِلَٰهٍ
கடவுள் யாரும்
غَيْرُهُۥٓۖ
அவனையன்றி
أَفَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச வேண்டாமா?

Wa laqad arsalnaa Noohan ilaa qawmihee faqaala yaa qawmi'budul laaha maa lakum min ilahin ghairuhoo afalaa tattaqoon

நிச்சயமாக நாம் "நூஹ்" (நபியை) நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?" என்று கூறினார்.

Tafseer

فَقَالَ
கூறினர்
ٱلْمَلَؤُا۟
தலைவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
مِن قَوْمِهِۦ
அவருடைய மக்களில்
مَا
இல்லை
هَٰذَآ
இவர்
إِلَّا
தவிர
بَشَرٌ
மனிதரே
مِّثْلُكُمْ
உங்களைப் போன்ற
يُرِيدُ
அவர் நாடுகிறார்
أَن يَتَفَضَّلَ
மேன்மை அடைய
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
لَأَنزَلَ
இறக்கி இருப்பான்
مَلَٰٓئِكَةً
வானவர்களை
مَّا سَمِعْنَا
நாங்கள் கேள்விப்பட்டதில்லை
بِهَٰذَا
இதை
فِىٓ ءَابَآئِنَا
எங்கள் மூதாதைகளில்
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான

Faqaalal mala'ul lazeena kafaroo min qawmihee maa haazaaa illaa basharum mislukum yureedu ai yatafaddala 'alaikum wa law shaaa'al laahu la anzala malaaa'ikatam maa sami'naa bihaazaa feee aabaaa'inal awwaleen

அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தம்முடைய மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் மலக்குகளையே அனுப்பி வைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும்,

Tafseer

إِنْ هُوَ
அவர் இல்லை
إِلَّا
தவிர
رَجُلٌۢ
ஓர் ஆடவரே
بِهِۦ
அவருக்கு
جِنَّةٌ
பைத்தியம் (ஏற்பட்டிருக்கிறது)
فَتَرَبَّصُوا۟
எதிர் பார்த்திருங்கள்
بِهِۦ
அவருக்கு
حَتَّىٰ
வரை
حِينٍ
ஒரு காலம்

In huwa illaa rajulum bihee jinnatun fatarabbasoo bihee hattan heen

"இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, (இவர் கூறுவதின் உண்மையை) சிறிது காலம் பொறுத்து இருந்து பாருங்கள்" என்றும் கூறினார்கள்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா
ٱنصُرْنِى
எனக்கு நீ உதவுவாயாக
بِمَا كَذَّبُونِ
அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்

Qaala Rabbin surnee bimaa kazzaboon

(அதற்கு நூஹ் நபி) "என்னுடைய இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, நீ எனக்கு உதவி செய்" என்று பிரார்த்தித்தார்.

Tafseer

فَأَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
إِلَيْهِ
அவருக்கு
أَنِ ٱصْنَعِ
நீர் செய்வீராக
ٱلْفُلْكَ
கப்பலை
بِأَعْيُنِنَا
நமது கண்களுக்கு முன்னும்
وَوَحْيِنَا
நமது அறிவிப்பின்படியும்
فَإِذَا جَآءَ
வந்துவிட்டால்
أَمْرُنَا
நம் கட்டளை
وَفَارَ
பொங்க ஆரம்பித்து விட்டால்
ٱلتَّنُّورُۙ
அடுப்பு
فَٱسْلُكْ فِيهَا
அதில்/ஏற்றுவீராக
مِن كُلٍّ
எல்லாவற்றிலிருந்தும்
زَوْجَيْنِ
ஜோடிகளையும்
ٱثْنَيْنِ
இரண்டு
وَأَهْلَكَ
இன்னும் உமது குடும்பத்தினரையும்
إِلَّا
தவிர
مَن
எவன்
سَبَقَ
முந்திவிட்டதோ
عَلَيْهِ
அவன் மீது
ٱلْقَوْلُ
வாக்கு
مِنْهُمْۖ
அவர்களில்
وَلَا تُخَٰطِبْنِى
இன்னும் என்னிடம் நீர் உரையாடாதீர்
فِى ٱلَّذِينَ
அநியாயக்காரர்கள் விஷயத்தில்
إِنَّهُم
நிச்சயமாக அவர்கள்
مُّغْرَقُونَ
மூழ்கடிக்கப்படுவார்கள்

Fa awhainaaa ilaihi anis na'il fulka bi a'yuninaa wa wahyinaa fa izaa jaaa'a amrunaa wa faarat tannooru fasluk feehaa min kullin zawjainis naini wa ahlaka illaa man sabaqa 'alaihil qawlu minhum wa laa tukhaat ibnee fil lazeena zalamooo innaahum mughraqoon

அதற்கு நாம் அவரை நோக்கி நீங்கள் "நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்யுங்கள். நம்முடைய உத்தரவு ஏற்பட்டு அடுப்புப்பொங்க ஆரம்பித்தால் (ஒவ்வொரு உயிர்ப் பிராணிகளிலும்) ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உங்களுடைய குடும்பத்தினரையும் நீங்கள் அதில் ஏற்றிக் கொள்ளுங்கள். ஆயினும், எவன் மீது நம்முடைய தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவனைத் தவிர. (ஏனென்றால்,) அநியாயம் செய்பவ(ர் உங்களது குடும்பத்தவராயினும் அவ)ரைப் பற்றி நீங்கள் என்னிடம் ஏதும் (சிபாரிசாகப்) பேசாதீர்கள். நிச்சயமாக அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்" என்று வஹீ அறிவித்தோம்.

Tafseer

فَإِذَا ٱسْتَوَيْتَ
நீர் ஏறிவிட்டால்
أَنتَ
நீரும்
وَمَن مَّعَكَ
இன்னும் உன்னுடன் இருப்பவரும்
عَلَى ٱلْفُلْكِ
கப்பலில்
فَقُلِ
கூறுவீராக
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
ٱلَّذِى نَجَّىٰنَا
எவன்/எங்களை பாதுகாத்தான்
مِنَ ٱلْقَوْمِ
மக்களிடமிருந்து
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Fa izas tawaita ata wa mam ma'aka 'alal fulki faqulil hamdu lillaahil lazee najjaanaa minal qawmiz zalimeen

நீங்களும் உங்களுடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் "அநியாயக்கார இந்த மக்களில் இருந்தும் எங்களை பாதுகாத்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுங்கள்.

Tafseer

وَقُل
இன்னும் கூறுவீராக
رَّبِّ
என் இறைவா
أَنزِلْنِى
என்னை தங்க வைப்பாயாக
مُنزَلًا
ஓர் இடத்தில்
مُّبَارَكًا
அருள் நிறைந்த
وَأَنتَ
நீ
خَيْرُ
மிகச் சிறந்தவன்
ٱلْمُنزِلِينَ
தங்க வைப்பவர்களில்

Wa qur Rabbi anzilnee munzalam mubaarakanw wa Anta khairul munzileen

அன்றி "என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ளவனாக (பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலிலிருந்து) இறக்கி வைப்பாயாக! நீயோ விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பதில் மிக்க மேலானவன் என்றும் பிரார்த்தியுங்கள்" (என்றும் கூறினோம்.)

Tafseer

إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
لَءَايَٰتٍ
(பல) அத்தாட்சிகள்
وَإِن كُنَّا
நிச்சயமாக நாம் இருந்தோம்
لَمُبْتَلِينَ
சோதிப்பவர்களாகவே

Inna fee zaalika la Aayaatinw wa in kunnaa lamubtaleen

(இவ்வாறு மனிதர்களின் நம்பிக்கையை) நாம் சோதித்தபோதிலும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer