Skip to main content

ٱلَّذِينَ يَرِثُونَ
சொந்தமாக்கிக் கொள்வார்கள்
ٱلْفِرْدَوْسَ
ஃபிர்தவ்ஸ் சொர்க்கத்தை
هُمْ
அவர்கள்
فِيهَا
அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Allazeena yarisoonal Firdawsa hum feehaa khaalidoon

ஆகவே, இவர்கள் "ஃபிர்தவ்ஸ்" என்னும் சுவனபதியை அனந்தரமாகக் கொண்டு அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
خَلَقْنَا
நாம் படைத்தோம்
ٱلْإِنسَٰنَ
மனிதனை
مِن سُلَٰلَةٍ
ஈரச்சத்திலிருந்து
مِّن طِينٍ
களிமண்ணிலிருந்து

Wa laqad khalaqnal insaana min sulaalatim minteen

நிச்சயமாக (ஆரம்பத்தில் முதல்) மனிதரை களிமண்ணின் மூலச் சத்திலிருந்து படைத்தோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
جَعَلْنَٰهُ
அவனை நாம் வைத்தோம்
نُطْفَةً
ஒரு இந்திரியத் துளியாக
فِى قَرَارٍ
ஒரு தங்குமிடத்தில்
مَّكِينٍ
உறுதியான

Summa ja'alnaahu nutfatan fee qaraarim makeen

பின்னர், அதனை நாம் இந்திரியமாக்கி ஒரு பத்திரமான இடத்தில் வைத்தோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
خَلَقْنَا
நாம் படைத்தோம்
ٱلنُّطْفَةَ
இந்திரியத் துளியை
عَلَقَةً
ஒரு இரத்தக்கட்டியாக
فَخَلَقْنَا
நாம் படைத்தோம்
ٱلْعَلَقَةَ
இரத்தக் கட்டியை
مُضْغَةً
ஒரு சதைத் துண்டாக
فَخَلَقْنَا
நாம் படைத்தோம்
ٱلْمُضْغَةَ
சதைத் துண்டை
عِظَٰمًا
எலும்புகளாக
فَكَسَوْنَا
அணிவித்தோம்
ٱلْعِظَٰمَ
எலும்புகளுக்கு
لَحْمًا
சதையை
ثُمَّ
பிறகு
أَنشَأْنَٰهُ
அவனைப் படைத்தோம்
خَلْقًا
படைப்பாக
ءَاخَرَۚ
வேறு ஒரு
فَتَبَارَكَ
மிக்க அருள் வளம் நிறைந்து விட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَحْسَنُ
மிக அழகியவனாகிய
ٱلْخَٰلِقِينَ
செய்பவர்களில்

Summa khalaqnan nutfata 'alaqatan fakhalaqnal 'alaqata mudghatan fakhalaq nal mudghata 'izaaman fakasawnal 'izaama lahman summa anshaanaahu khalqan aakhar; fatabaarakal laahu ahsanul khaaliqeen

பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதனை (முழுமையான மனிதப்) படைப்பாக உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன்.

Tafseer

ثُمَّ
பிறகு
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
بَعْدَ ذَٰلِكَ
இதற்குப் பின்னர்
لَمَيِّتُونَ
இறப்பெய்யக் கூடியவர்கள்தான்

Summa innakum ba'da zaalika la maaiyitoon

(மனிதர்களே!) இதற்குப் பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பவர்களே!

Tafseer

ثُمَّ
பிறகு
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
تُبْعَثُونَ
எழுப்பப்படுவீர்கள்

Summa innakum Yawmal Qiyaamati tub'asoon

அதற்குப் பின்னர் மறுமைநாளில் நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
خَلَقْنَا
நாம் படைத்தோம்
فَوْقَكُمْ
உங்களுக்கு மேல்
سَبْعَ
ஏழு
طَرَآئِقَ
வானங்களை
وَمَا كُنَّا
நாம் இருக்கவில்லை
عَنِ ٱلْخَلْقِ
படைப்பைப் பற்றி
غَٰفِلِينَ
கவனமற்றவர்களாக

Wa laqad khalaqnaa fawqakum sab'a taraaa'iqa wa maa kunnaa 'anil khalqi ghaafileen

(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்தோம். (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. இவைகளைப் படைத்து இருப்பதுடன்) இப்படைப்புக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை. (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தையும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்.)

Tafseer

وَأَنزَلْنَا
இன்னும் நாம் இறக்கினோம்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مَآءًۢ
மழையை
بِقَدَرٍ
ஓர் அளவின் படி
فَأَسْكَنَّٰهُ
அதை தங்க வைத்தோம்
فِى ٱلْأَرْضِۖ
பூமியில்
وَإِنَّا
நிச்சயமாக நாம்
عَلَىٰ ذَهَابٍۭ
போக்கி விடுவதற்கு
بِهِۦ
அதை
لَقَٰدِرُونَ
ஆற்றலுடையவர்கள்தான்

Wa anzalnaa minas samaaa'i maaa'am biqadarin fa-askannaahu fil ardi wa innaa 'alaa zahaabim bihee laqaa diroon

மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதனைப் பூமியில் தங்கும்படியும் செய்கின்றோம். அதனைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்.

Tafseer

فَأَنشَأْنَا
நாம் உருவாக்கினோம்
لَكُم
உங்களுக்காக
بِهِۦ
அதன் மூலம்
جَنَّٰتٍ
தோட்டங்களை
مِّن نَّخِيلٍ
பேரீட்சை மரங்கள்
وَأَعْنَٰبٍ
இன்னும் திராட்சை செடிகள்
لَّكُمْ
உங்களுக்கு
فِيهَا
அதில்
فَوَٰكِهُ
பழங்கள்
كَثِيرَةٌ
அதிகமான
وَمِنْهَا
அவற்றிலிருந்து
تَأْكُلُونَ
நீங்கள் சாப்பிடுகிறீர்கள்

Fa anshaanaa lakum bihee Jannaatim min nakheelinw wa a'naab; lakum feehaa fawaakihu kaseeratunw wa minhaa taakuloon

அதனைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கின்றோம். அவைகளில் உங்களுக்கு வேண்டிய பல கனி வர்க்கங்கள் இருக்கின்றன. அவைகளில் (பலவற்றை) நீங்கள் புசிக்கிறீர்கள்.

Tafseer

وَشَجَرَةً
இன்னும் ஒரு மரத்தை
تَخْرُجُ
உற்பத்தி ஆகக்கூடியது
مِن طُورِ
மலையிலிருந்து
سَيْنَآءَ
ஸினாய்
تَنۢبُتُ
முளைப்பிக்கிறது
بِٱلدُّهْنِ
எண்ணையை
وَصِبْغٍ
சுவையான உணவை
لِّلْءَاكِلِينَ
உண்பவர்களுக்கு

Wa shajaratan takhruju min Toori Sainaaa'a tambutu bidduhni wa sibghil lil aakileen

"தூர்ஸீனாய்" மலையில் முளைக்கின்ற (ஜைத்தூன் என்னும் ஒலிவ) மரத்தையும் (நாம் உற்பத்தி செய்கின்றோம்.) அது எண்ணையையும் புசிப்பவர்களுக்கு ஒரு சுவையையும் (குழம்பும்) தருகின்றது.

Tafseer