Skip to main content
bismillah

قَدْ أَفْلَحَ
வெற்றி பெற்று விட்டார்கள்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்

Qad aflahal mu'minoon

நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
هُمْ
அவர்கள்
فِى صَلَاتِهِمْ
தங்கள் தொழுகையில்
خَٰشِعُونَ
உள்ளச்சமுடையவர்கள்

Allazeena hum fee Salaatihim khaashi'oon

அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ هُمْ
இன்னும் எவர்கள்/அவர்கள்
عَنِ ٱللَّغْوِ
வீணான விஷயங்களை விட்டு
مُعْرِضُونَ
விலகியவர்கள்

Wallazeena hum 'anillaghwimu'ridoon

அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ هُمْ
இன்னும் எவர்கள்/அவர்கள்
لِلزَّكَوٰةِ
ஸகாத்தை
فَٰعِلُونَ
நிறைவேற்றக்கூடியவர்கள்

Wallazeena hum liz Zakaati faa'iloon

அவர்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ هُمْ
இன்னும் எவர்கள்/அவர்கள்
لِفُرُوجِهِمْ
தங்கள் மர்மஸ்தலங்களை
حَٰفِظُونَ
பாதுகாக்கக் கூடியவர்கள்

Wallazeena hum lifuroo jihim haafizoon

அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்.

Tafseer

إِلَّا
தவிர
عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ
தங்கள் மனைவியர்களிடம்
أَوْ
அல்லது
مَا مَلَكَتْ
சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம்
أَيْمَٰنُهُمْ
தங்கள் வலக்கரங்கள்
فَإِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
غَيْرُ
அல்லர்
مَلُومِينَ
பழிக்கப்படுபவர்கள்

Illaa 'alaaa azwaajihim aw maa malakat aimaanuhum fa innahum ghairu maloomeen

எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள்.

Tafseer

فَمَنِ
யார்
ٱبْتَغَىٰ
தேடுவார்களோ
وَرَآءَ
பின்னர்
ذَٰلِكَ
அதற்கு
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْعَادُونَ
எல்லை மீறிகள்

Famanib taghaa waraaa'a zaalika fa ulaaa'ika humul 'aadoon

இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ هُمْ
இன்னும் எவர்கள்/அவர்கள்
لِأَمَٰنَٰتِهِمْ
தங்கள் அமானிதங்களையும்
وَعَهْدِهِمْ
இன்னும் தங்கள் உடன்படிக்கையையும்
رَٰعُونَ
பேணக்கூடியவர்கள்

Wallazeena hum li amaanaatihim wa 'ahdihim raa'oon

அன்றி, அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணி(க் காத்து) நடந்து,

Tafseer

وَٱلَّذِينَ هُمْ
இன்னும் எவர்கள்/அவர்கள்
عَلَىٰ صَلَوَٰتِهِمْ
தங்கள் தொழுகைகளை
يُحَافِظُونَ
பாதுகாப்பார்கள்

Wallazeena hum 'alaa Salawaatihim yuhaafizoon

தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப்பிடித்து தொழுது வருவார்கள்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
هُمُ
அவர்கள்தான்
ٱلْوَٰرِثُونَ
சொந்தமாக்கிக் கொள்பவர்கள்

Ulaaa'ika humul waarisoon

இத்தகையவர்தாம் (சுவனபதிக்கு) உண்மையான வாரிசுதாரர்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் முஃமினூன்
القرآن الكريم:المؤمنون
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Mu'minun
ஸூரா:23
வசனம்:118
Total Words:1840
Total Characters:4800
Number of Rukūʿs:6
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:74
Starting from verse:2673