Skip to main content

وَنَجَّيْنَٰهُ
இன்னும் நாம் பாதுகாத்தோம்/அவரை
وَلُوطًا
லூத்தையும்
إِلَى
பக்கம்
ٱلْأَرْضِ
பூமியின்
ٱلَّتِى بَٰرَكْنَا
அருள்வளம் புரிந்த
فِيهَا
அதில்
لِلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு

Wa najjainaahu wa Lootan ilal ardil latee baaraknaa feehaa lil 'aalameen

அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக் கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊரளவில் கொண்டு வந்து சேர்த்தோம்.

Tafseer

وَوَهَبْنَا
நாம் வழங்கினோம்
لَهُۥٓ
அவருக்கு
إِسْحَٰقَ
இஸ்ஹாக்கையும்
وَيَعْقُوبَ
யஃகூபையும்
نَافِلَةًۖ
கொடையாக
وَكُلًّا
அனைவரையும்
جَعَلْنَا
ஆக்கினோம்
صَٰلِحِينَ
நல்லவர்களாக

Wa wahabnaa lahooo Ishaaq; wa Ya'qooba naafilah; wa kullan ja'alnaa saaliheen

அன்றி, நாம் அவருக்கு (அவருடைய) கோரிக்கைக்கு அதிகமாக இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நல்லடியார்களாகவும் நாம் ஆக்கினோம்.

Tafseer

وَجَعَلْنَٰهُمْ
இன்னும் அவர்களை ஆக்கினோம்
أَئِمَّةً
தலைவர்களாக
يَهْدُونَ
நேர்வழி காட்டுகின்றார்கள்
بِأَمْرِنَا
நமது கட்டளையின்படி
وَأَوْحَيْنَآ
இன்னும் நாம் வஹீ அறிவித்தோம்
إِلَيْهِمْ
அவர்களுக்கு
فِعْلَ
செய்வதற்கும்
ٱلْخَيْرَٰتِ
நன்மைகளை
وَإِقَامَ
இன்னும் நிலைநிறுத்துவதற்கு
ٱلصَّلَوٰةِ
தொழுகையை
وَإِيتَآءَ
இன்னும் கொடுப்பதற்கு
ٱلزَّكَوٰةِۖ
ஸகாத்தை
وَكَانُوا۟
அவர்கள் இருந்தார்கள்
لَنَا
நம்மை
عَٰبِدِينَ
வணங்குபவர்களாக

Wa ja'alnaahum a'immatany yahdoona bi amrinaa wa awhainaaa ilaihim fi'lal khairaati wa iqaamas Salaati wa eetaaa'az Zakaati wa kaanoo lanaa 'aabideen

அன்றி, நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். அன்றி, நன்மையான காரியங்களைச் செய்யும்படியும், தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், "ஜகாத்" கொடுத்து வரும்படியாகவும் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள்.

Tafseer

وَلُوطًا
இன்னும் லூத்தை நினைவு கூர்வீராக!
ءَاتَيْنَٰهُ
அவருக்கு நாம் கொடுத்தோம்
حُكْمًا
தீர்ப்பளிக்கின்ற ஆற்றலை(யும்)
وَعِلْمًا
கல்வி ஞானத்தையும்
وَنَجَّيْنَٰهُ
நாம் அவரை பாதுகாத்தோம்
مِنَ ٱلْقَرْيَةِ
ஊரிலிருந்து
ٱلَّتِى كَانَت
இருந்தார்கள்
تَّعْمَلُ
செய்துகொண்டு
ٱلْخَبَٰٓئِثَۗ
அசிங்கங்களை
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தார்கள்
قَوْمَ
மக்களாக
سَوْءٍ فَٰسِقِينَ
கெட்ட/பாவிகளாக

Wa Lootan aatainaahu hukmanw wa 'ilmanw wa najjainaahu minal qaryatil latee kaanat ta'malul khabaaa'is; innahum kaanoo qawma saw'in faasiqeen

லூத்தையும் (நபியாக்கி) அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் கொடுத்துத் தீய காரியங்களைச் செய்து கொண்டிருந்த ஊர் மக்களிலிருந்தும் நாம் அவரை பாதுகாத்துக் கொண்டோம். நிச்சயமாக அவ்வூரார் (மனிதர்களில்) மிகக்கெட்ட மனிதர்களாகவும் பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.

Tafseer

وَأَدْخَلْنَٰهُ
இன்னும் அவரை நாம் நுழைத்தோம்
فِى رَحْمَتِنَآۖ
நமது அருளில்
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில் உள்ளவர்

Wa adkhalnaahu fee rahmatinaa innahoo minas saalihee

நாம் அவரை நம்முடைய அருளில் புகுத்தினோம். நிச்சயமாக அவர் நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.

Tafseer

وَنُوحًا
இன்னும் நூஹையும் நினைவு கூர்வீராக
إِذْ نَادَىٰ
அவர் அழைத்தபோது
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
فَٱسْتَجَبْنَا
பதிலளித்தோம்
لَهُۥ
அவருக்கு
فَنَجَّيْنَٰهُ
பாதுகாத்தோம்
وَأَهْلَهُۥ
இன்னும் அவருடைய குடும்பத்தாரை
مِنَ ٱلْكَرْبِ
தண்டனையிலிருந்து
ٱلْعَظِيمِ
பெரிய

Wa noohan iz naadaa min qablu fastajabnaa lahoo fanajjainaahu wa ahlahoo minal karbil 'azeem

நூஹையும் (நபியாக அனுப்பி வைத்தோம்.) அவர் இதற்கு முன்னர் செய்துகொண்டிருந்த பிரார்த்தனையை அவருக்காக நாம் அங்கீகரித்துக் கொண்டு, அவரையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் கஷ்டத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.

Tafseer

وَنَصَرْنَٰهُ
இன்னும் அவருக்கு நாம் உதவி செய்தோம்
مِنَ ٱلْقَوْمِ
மக்களிடமிருந்து
ٱلَّذِينَ كَذَّبُوا۟
எவர்கள்/ பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَآۚ
நமது அத்தாட்சிகளை
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தனர்
قَوْمَ
மக்களாக
سَوْءٍ
கெட்ட
فَأَغْرَقْنَٰهُمْ
ஆகவே நாம் மூழ்கடித்தோம்/அவர்களை
أَجْمَعِينَ
அனைவரையும்

Wa nasarnaahu minal qawmil lazeena kazzaboo bi Aayaatinaa; innahum kkaanoo qawma saw'in fa-aghraq naahum ajma'een

நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய மக்களுக்கு விரோதமாக அவருக்கு நாம் உதவி செய்தோம். நிச்சயமாக அவர்களும் மிகக் கெட்ட மக்களாகவே இருந்தனர். ஆதலால், அவர்கள் அனைவரையும் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம்.

Tafseer

وَدَاوُۥدَ
இன்னும் தாவூது
وَسُلَيْمَٰنَ
இன்னும் ஸுலைமானை
إِذْ يَحْكُمَانِ
அவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக
فِى ٱلْحَرْثِ
விவசாயத்தின் விளைச்சலில்
إِذْ نَفَشَتْ
நுழைந்த போது
فِيهِ غَنَمُ
அதில்/ஆடுகள்
ٱلْقَوْمِ
மக்களுடைய
وَكُنَّا
இருந்தோம்
لِحُكْمِهِمْ
அவர்களின் தீர்ப்பை
شَٰهِدِينَ
நாம் அறிந்தவர்களாக

Wa Daawooda wa Sulaimaana iz yahkumaani fil harsi iz nafashat feehi ghanamul qawmi wa kunnaa lihukmihim shaahideen

தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பி வைத்தோம்.) ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்துவிட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம்.

Tafseer

فَفَهَّمْنَٰهَا
அதை புரிய வைத்தோம்
سُلَيْمَٰنَۚ
சுலைமானுக்கு
وَكُلًّا
எல்லோருக்கும்
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
حُكْمًا
ஞானத்தை(யும்)
وَعِلْمًاۚ
இன்னும் கல்வியை
وَسَخَّرْنَا
இன்னும் வசப்படுத்தினோம்
مَعَ دَاوُۥدَ
தாவூதுடன்
ٱلْجِبَالَ
மலைகளை
يُسَبِّحْنَ
துதிக்கின்றவையாக
وَٱلطَّيْرَۚ
இன்னும் பறவைகளை
وَكُنَّا
இன்னும் நாம் இருந்தோம்
فَٰعِلِينَ
முடிவு செய்தவர்களாக

Fafahhamnaahaa sulaimaan; wa kullan aatainaa hukmanw wa'ilmanw wa sakh kharnaa ma'a Daawoodal jibaala yusabbihna wattayr; wa kunnaa faa'ileen

தீர்ப்புக் கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும் ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், ஸுலைமானுக்கு நியாயத்தை விளக்கிக் காண்பித்தோம். மலைகளையும் பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் அல்லாஹ்வை தஸ்பீஹ் (துதி) செய்தன. நாமேதான் இவைகளை எல்லாம் செய்தோம்.

Tafseer

وَعَلَّمْنَٰهُ
நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம்
صَنْعَةَ
செய்வதை
لَبُوسٍ
ஆயுதங்களை
لَّكُمْ
உங்களுக்காக
لِتُحْصِنَكُم
உங்களை பாதுகாப்பதற்காக
مِّنۢ بَأْسِكُمْۖ
உங்கள் போரில்
فَهَلْ أَنتُمْ
ஆகவே ?/நீங்கள்
شَٰكِرُونَ
நன்றி செலுத்துவீர்கள்

Wa 'allamanaahu san'ata laboosil lakum lituhsinakum mim baasikum fahal antum shaakiroon

(போரில் ஈட்டி, கத்தி ஆகியவைகளின்) காயத்தில் இருந்து உங்களை பாதுகாக்கக் கூடிய கவசங்கள் செய்வதை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களா?

Tafseer