Innal lazeena sabaqat lahum minnal husnaaa ulaaa'ika 'anhaa mub'adoon
ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள்.
Laa yasma'oona hasee sahaa wa hum fee mash tahat anfusuhum khaalidoon
அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். அன்றி, அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சுவனபதியில்) என்றென்றும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
Laa yahzunuhumul faza'ul akbaru wa tatalaq qaahumul malaaa'ikatu haazaa Yawmukumul lazee kuntum too'adoon
(மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) மலக்குகள் அவர்களை எதிர்கொண்டழைத்து "உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்" (என்று நற்செய்தி கூறுவார்கள்).
Yawma natwis samaaa'a kataiyis sijilli lilkutub; kamaa badaanaa awwala khalqin nu'eeduh; wa'dan 'alainaa; innaa kunna faa'ileen
எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீள வைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம்.
Wa laqad katabnaa fiz Zaboori mim ba'diz zikri annal arda yarisuhaa 'ibaadi yas saalihoon
நிச்சயமாக நாம் "ஜபூர்" என்னும் வேதத்தில், நல்லுபதேசங் களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம். நிச்சயமாக பூமிக்கு என்னுடைய அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தாம் வாரிசாவார்கள் என்று.
Inna fee haaza labalaa ghal liqawmin 'aabideen
என்னையே வணங்குபவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு நற்செய்தி இருக்கிறது.
Wa maaa arsalnaaka illaa rahmatal lil'aalameen
(நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை."
Qul innamaa yoohaa ilaiya annamaaa ilaahukum illaahunw Waahid, fahal antum muslimoon
(ஆகவே) நீங்கள் கூறுங்கள்: "எனக்கு வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம் உங்களுடைய "வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்" என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பீர்களாக!
Fa in tawallaw faqul aazantukum 'alaa sawaaa'; wa in adreee aqareebun am ba'eedum maa too'adoon
(நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) "நான் (என்னுடைய தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்திலிருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்" என்று கூறிவிடுங்கள்.
Innahoo ya'lamul jahra minal qawli wa ya'lamu maa taktumoon
நிச்சயமாக (என் இறைவன்) நீங்கள் (வாயால்) சப்தமிட்டுப் பேசுவதையும் (உங்கள் உள்ளங்களில் அதற்கு மாறாக) மறைத்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்கிறான்.