فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَقُّۚ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ ۖوَقُلْ رَّبِّ زِدْنِيْ عِلْمًا ( طه: ١١٤ )
Fata'aalal laahul Malikul Haqq; wa laa ta'jal bil Quraani min qabli ai yuqdaaa ilaika wahyuhoo wa qur Rabbi zidnee 'ilmaa (Ṭāʾ Hāʾ 20:114)
Abdul Hameed Baqavi:
உண்மையான அரசனாகிய அல்லாஹ்தான் மிக்க உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனைப் பற்றி உங்களுக்கு வஹீ அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே (அதனை ஓத) நீங்கள் அவசரப்படாதீர்கள். எனினும் "என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்.
English Sahih:
So high [above all] is Allah, the Sovereign, the Truth. And, [O Muhammad], do not hasten with [recitation of] the Quran before its revelation is completed to you, and say, "My Lord, increase me in knowledge." ([20] Taha : 114)
1 Jan Trust Foundation
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!