Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௯௨

۞ وَلَقَدْ جَاۤءَكُمْ مُّوْسٰى بِالْبَيِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ  ( البقرة: ٩٢ )

And indeed
وَلَقَدْ
திட்டவட்டமாக
came to you
جَآءَكُم
வந்தார் உங்களிடம்
Musa
مُّوسَىٰ
மூசா
with [the] clear signs
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
then
ثُمَّ
பிறகு
you took
ٱتَّخَذْتُمُ
எடுத்துக்கொண்டீர்கள்
the calf
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
from after him
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
and you
وَأَنتُمْ
நீங்களோ
(were) wrongdoers
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Wa laqad jaaa'akum Moosa bilbaiyinaati summat takhaztunmul 'ijla mim ba'dihee wa antum zaalimoon (al-Baq̈arah 2:92)

Abdul Hameed Baqavi:

(இஸ்ராயீலின் சந்ததிகளே!) நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்களோ அதற்குப் பின்னும் ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். (இவ்வாறே ஒவ்வொரு விஷயத்திலும்) நீங்கள் (வரம்பு கடந்த) அநியாயக்காரர்களாகவே இருக்கின்றீர்கள்.

English Sahih:

And Moses had certainly brought you clear proofs. Then you took the calf [in worship] after that, while you were wrongdoers. ([2] Al-Baqarah : 92)

1 Jan Trust Foundation

நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்; (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.