Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௯௦

بِئْسَمَا اشْتَرَوْا بِهٖٓ اَنْفُسَهُمْ اَنْ يَّكْفُرُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ بَغْيًا اَنْ يُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰى مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ ۚ فَبَاۤءُوْ بِغَضَبٍ عَلٰى غَضَبٍۗ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ مُّهِيْنٌ  ( البقرة: ٩٠ )

Evil (is) that
بِئْسَمَا
கெட்டது/எது
(for) which they have sold
ٱشْتَرَوْا۟
விற்றார்கள்
with
بِهِۦٓ
அதற்குப் பகரமாக
themselves
أَنفُسَهُمْ
தங்களை
that they disbelieve
أَن يَكْفُرُوا۟
அவர்கள் நிராகரித்து
in what has revealed
بِمَآ أَنزَلَ
எதை/இறக்கினான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
grudging
بَغْيًا
பொறாமைப்பட்டு
that sends down
أَن يُنَزِّلَ
இறக்குவதை
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
of
مِن
இருந்து
His Grace
فَضْلِهِۦ
தன் அருள்
on
عَلَىٰ
மீது
whom
مَن
எவர்
He wills
يَشَآءُ
நாடுகிறான்
from
مِنْ
இருந்து
His servants
عِبَادِهِۦۖ
தன் அடியார்கள்
So they have drawn (on themselves)
فَبَآءُو
ஆகவே சார்ந்தார்கள்
wrath
بِغَضَبٍ
கோபத்தில்
upon
عَلَىٰ
மேல்
wrath
غَضَبٍۚ
கோபம்
And for the disbelievers
وَلِلْكَٰفِرِينَ
இன்னும் நிராகரிப்பாளர்களுக்கு
(is) a punishment
عَذَابٌ
வேதனை
humiliating
مُّهِينٌ
இழிவு தரக்கூடியது

Bi'samash taraw biheee anfusahum ai yakfuroo bimaaa anzalal laahu baghyan ai yunazzilal laahu min fadlilhee 'alaa mai yashaaa'u min ibaadihee fabaaa'oo bighadabin 'alaa ghadab; wa lilkaafireena 'azaabum muheen (al-Baq̈arah 2:90)

Abdul Hameed Baqavi:

(இந்த குர்ஆனை தங்கள்மீது இறக்காமல்) அல்லாஹ் தன்னுடைய அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன்னுடைய கிருபையை இறக்கி வைத்ததைப் பற்றிப் பொறாமைக் கொண்டு, அல்லாஹ் இறக்கி வைத்த இதையே நிராகரிப்பதன் மூலமாய் அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்துவிட்டார்கள். ஆதலால் அந்நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.

English Sahih:

How wretched is that for which they sold themselves – that they would disbelieve in what Allah has revealed through [their] outrage that Allah would send down His favor upon whom He wills from among His servants. So they returned having [earned] wrath upon wrath. And for the disbelievers is a humiliating punishment. ([2] Al-Baqarah : 90)

1 Jan Trust Foundation

தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.