Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௬௩

وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَۗ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ  ( البقرة: ٦٣ )

And when We took
وَإِذْ أَخَذْنَا
இன்னும் சமயம்/வாங்கினோம்
your covenant
مِيثَٰقَكُمْ
உறுதிமொழியை/உங்கள்
and We raised
وَرَفَعْنَا
இன்னும் உயர்த்தினோம்
over you
فَوْقَكُمُ
மேல்/உங்களுக்கு
the mount "Hold
ٱلطُّورَ خُذُوا۟
மலையை/பிடியுங்கள்
what We have given you
مَآ ءَاتَيْنَٰكُم
எதை/கொடுத்தோம்/உங்களுக்கு
with strength
بِقُوَّةٍ
பலமாக
and remember what (is) in it
وَٱذْكُرُوا۟ مَا فِيهِ
இன்னும் நினைவு கூருங்கள்/எதை/அதில்
perhaps you (would become) righteous"
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக

Wa iz akhaznaa meesaaqakum wa rafa'naa fawqakumut Toora khuzoo maaa aatainaakum biquwwatinw wazkuroo maa feehi la'allakum tattaqoon (al-Baq̈arah 2:63)

Abdul Hameed Baqavi:

"தூர்" என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் "நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத் என்னும் வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள், அதிலுள்ளதை (எப்பொழுதும்) சிந்தனையில் வையுங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவீர்கள்" (என்று கூறினோம்.)

English Sahih:

And [recall] when We took your covenant, [O Children of Israel, to abide by the Torah] and We raised over you the mount, [saying], "Take what We have given you with determination and remember what is in it that perhaps you may become righteous." ([2] Al-Baqarah : 63)

1 Jan Trust Foundation

இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, “தூர்“ மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).