Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௨௮

وَالْمُطَلَّقٰتُ يَتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْۤءٍۗ وَلَا يَحِلُّ لَهُنَّ اَنْ يَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِيْٓ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۗ وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِيْ ذٰلِكَ اِنْ اَرَادُوْٓا اِصْلَاحًا ۗوَلَهُنَّ مِثْلُ الَّذِيْ عَلَيْهِنَّ بِالْمَعْرُوْفِۖ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ۗ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ ࣖ  ( البقرة: ٢٢٨ )

And the women who are divorced
وَٱلْمُطَلَّقَٰتُ
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்
shall wait
يَتَرَبَّصْنَ
அவர்கள் எதிர்பார்ப்பார்கள்
concerning themselves
بِأَنفُسِهِنَّ
தங்களுக்கு
(for) three
ثَلَٰثَةَ
மூன்று
monthly periods
قُرُوٓءٍۚ
மாதவிடாய்களை
And (it is) not lawful
وَلَا يَحِلُّ
இன்னும் ஆகுமானதில்லை
for them
لَهُنَّ
அவர்களுக்கு
that they conceal
أَن يَكْتُمْنَ
அவர்கள் மறைப்பது
what
مَا
எது
(has been) created
خَلَقَ
படைத்தான்
(by) Allah
ٱللَّهُ
அல்லாஹ்
in their wombs
فِىٓ أَرْحَامِهِنَّ
அவர்களுடைய கர்ப்பப்பைகளில்
if they
إِن كُنَّ
அவர்கள் இருந்தால்
believe
يُؤْمِنَّ
நம்பிக்கை கொள்கிறார்கள்
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வை
and the Day [the] Last
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۚ
இன்னும் இறுதி நாள்
And their husbands
وَبُعُولَتُهُنَّ
இன்னும் அவர்களின் கணவர்கள்
(have) better right
أَحَقُّ
மிக உரிமை உடையவர்(கள்)
to take them back
بِرَدِّهِنَّ
அவர்களை மீட்டிக் கொள்வதற்கு
in that (period)
فِى ذَٰلِكَ
அதில்
if they wish
إِنْ أَرَادُوٓا۟
அவர்கள் விரும்பினால்
(for) reconciliation
إِصْلَٰحًاۚ
இணக்கத்தை
And for them (wives)
وَلَهُنَّ
இன்னும் அவர்களுக்கு
(is the) like
مِثْلُ
போன்றே
(of) that which
ٱلَّذِى
எது
(is) on them
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
in a reasonable manner
بِٱلْمَعْرُوفِۚ
நல்ல முறையில்
and for the men
وَلِلرِّجَالِ
இன்னும் ஆண்களுக்கு
over them (wives)
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
(is) a degree
دَرَجَةٌۗ
ஓர் உயர்வு
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) All-Mighty
عَزِيزٌ
மிகைத்தவன்
All-Wise
حَكِيمٌ
ஞானவான்

Walmutallaqaatu yatarab basna bi anfusihinna salaasata qurooo'; wa laa yahillu lahunna ai yaktumna maa khalaqal laahu feee arhaaminhinna in kunna yu'minna billaahi wal yawmil aakhir; wa bu'oola tuhunna ahaqqu biraddihinna fee zaalika in araadooo islaahaa; wa lahunna mislul lazee 'araihinna bilma'roof; wa lirrijjaali 'alaihinna daraja; wallaahu 'Azeezun Hakeem (al-Baq̈arah 2:228)

Abdul Hameed Baqavi:

"தலாக்" கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று (மாத) விடாய்கள் வரும் வரையில் எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதி கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப் பையில் (சிசுவை) படைத்திருந்தால் அதனை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர ("ரஜயி"யான தலாக்குக் கூறப்பட்ட) பெண்களின் கணவர்கள் பின்னும் (சேர்ந்து வாழக்கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள கணவர்கள் மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர்பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவனும், நுண்ணறிவு உடையவனுமாக இருக்கின்றான்.

English Sahih:

Divorced women remain in waiting [i.e., do not remarry] for three periods, and it is not lawful for them to conceal what Allah has created in their wombs if they believe in Allah and the Last Day. And their husbands have more right to take them back in this [period] if they want reconciliation. And due to them [i.e., the wives] is similar to what is expected of them, according to what is reasonable. But the men [i.e., husbands] have a degree over them [in responsibility and authority]. And Allah is Exalted in Might and Wise. ([2] Al-Baqarah : 228)

1 Jan Trust Foundation

தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.