لِلَّذِيْنَ يُؤْلُوْنَ مِنْ نِّسَاۤىِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍۚ فَاِنْ فَاۤءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ( البقرة: ٢٢٦ )
Lillazeena yu'loona min nisaaa'ihim tarabbusu arba'ati ashhurin fain faaa'oo fa innal laaha Ghafoorur Raheem (al-Baq̈arah 2:226)
Abdul Hameed Baqavi:
தங்கள் மனைவிகளுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் தாமதிக்க அனுமதியுண்டு. ஆகவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து) கொண்டால் (அல்லாஹ் அவர்களை மன்னித்திடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான்.
English Sahih:
For those who swear not to have sexual relations with their wives is a waiting time of four months, but if they return [to normal relations] – then indeed, Allah is Forgiving and Merciful. ([2] Al-Baqarah : 226)
1 Jan Trust Foundation
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.