Qaala innahoo yaqoolu innahaa baqaratul laa zaloolun tuseerul arda wa laa tasqil harsa musallamatullaa shiyata feehaa; qaalul 'aana jita bilhaqq; fazabahoohaa wa maa kaado yaf'aloon
(அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள்.
Wa iz qataltum nafsan faddaara'tum feehaa wallaahu mukrijum maa kuntum taktumoon
நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு (தப்பித்துக் கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் (அம்மாட்டை அறுக்கும்படிக் கட்டளையிட்டு கொலை விஷயத்தில்) நீங்கள் மறைத்து வைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கினான்.
Faqulnad riboohu biba'dihaa; kazaalika yuhyil laa hul mawtaa wa yureekum aayaatihee la'allakum ta'qiloon
ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதனை அறுத்து) "அதில் ஒரு பாகத்தைக்கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்" என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வாறே இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வற்காக அவன் தன்னுடைய (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகின்றான்.
Summa qasat quloobukum mim ba'di zaalika fahiya kalhijaarati aw-ashaadu qaswah; wa inna minal hijaarati lamaa yatafajjaru minhul anhaar; wa inna minhaa lamaa yash shaqqaqu fayakhruju minhul maaa'; wa inna minhaa lamaa yahbitu min khashyatil laa; wa mal laahu bighaafilin 'ammaa ta'maloon
இதற்குப் பின்னும் உங்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவைகளைவிடக் கடினமானவைகளாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக உண்டு. (பிளந்தால்) வெடித்து அதிலிருந்து நீர் புறப்படக் கூடியவைகளும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக்கூடியவைகளும் அவற்றில் உண்டு. (ஆனால் யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
Afatatma'oona ai yu'minoo lakum wa qad kaana fareequm minhum yasma'oona Kalaamal laahi summa yuharri foonahoo mim ba'di maa'aqaloohu wa hum ya'lamoon
(நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்களென நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர்.
Wa izaa laqul lazeena aamanoo qaalooo aamannaa wa izaakhalaa ba'duhum ilaa ba'din qaalooo atuhaddisoonahum bimaa fatahal laahu 'alaikum liyuhaajjookum bihee 'inda rabbikum; afalaa ta'qiloon
மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் ("தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்" எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி "(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றீர்கள்.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறுகின்றனர்.
Awalaa ya'lamoona annal laaha ya'lamu maa yusirroona wa maa yu'linoon
அவர்கள் மறைத்துக் கொள்வதையும் பகிரங்கப்படுத்து வதையும் அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா?
Wa minhum ummiyyoona laa ya'lamoonal kitaaba illaaa amaaniyya wa in hum illaa yazunnoon
அன்றி, கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை.
Fawailul lillazeena yaktuboonal kitaaba bi aydddhim summa yaqooloona haazaa min 'indil laahi liyashtaroo bihee samanan qaleelan fawilul lahum mimaa katabat aydeehim wa wailul lahum mimmaa yaksiboon
எவர்கள் தங்கள் கையைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக் கிரயத்தையடைவதற்காக "இது அல்லாஹ் விடமிருந்து வந்ததுதான்" என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்!
Wa qaaloo lan tamassanan Naaru illaaa ayyaamam ma'doo dah; qul attakhaztum 'indal laahi 'ahdan falai yukhlifal laahu 'ahdahooo am taqooloona 'alal laahi maa laa ta'lamoon
"ஒரு சில நாள்களைத் தவிர நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது" என அவர்கள் கூறுகின்றார்கள். (அதற்கு நபியே! அவர்களை) நீங்கள் கேளுங்கள்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கு மாற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கின்றீர்களா?