Yaaa aiyuhan naasu'budoo Rabbakumul lazee khalaqakum wallazeena min qablikum la'allakum tattaqoon
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்.
Allazee ja'ala lakumul arda firaashanw wassamaaa'a binaaa 'anw wa anzala minassamaaa'i maaa'an fa akhraja bihee minas samaraati rizqal lakum falaa taj'aloo lillaahi andaadanw wa antum ta'lamoon
அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்.
Wa in kuntum fee raibim mimmaa nazzalnaa 'alaa 'abdinaa fatoo bi Sooratim mim mislihee wad'oo shuhadaaa'akum min doonil laahi in kuntum saadiqeen
நாம் (நமது தூதர் முஹம்மது என்னும்) நமது அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர் களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஒரு அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்
Fail lam taf'aloo wa lan taf'aloo fattaqun Naaral latee waqooduhan naasu walhijaaratu u'iddat lilkaafireen
நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாதுபோனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்துகொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது.
Wa bashshiril lazeena aamanoo wa 'amilus saalihaati anna lahum jannaatin tajree min tahtihal anhaaru kullamaa riziqoo minhaa min samaratir rizqan qaaloo haazal lazee ruziqnaa min qablu wa utoo bihee mutashaabihaa, wa lahum feehaaa azwaajum mutahhara tunw wa hum feehaa khaalidoon
(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு (சுவனபதியில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீங்கள் நற்செய்தி கூறுங்கள். அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றிலிருந்து (அவர்களுக்கு) ஒரு கனி புசிக்கக் கொடுக்கப்படும்போதெல்லாம் முன்னர் நமக்குக் கொடுக்கப்பட்டதும் இதுதானே! என (ஆச்சரியப்பட்டு)க் கூறுவார்கள். (ஏனென்றால்) பார்வைக்கு ஒரே விதமாகத் தோன்றக் கூடியவைகளையே கொடுக்கப் பெறுவார்கள். (எனினும் அவை சுவையில் விதவிதமாக இருக்கும்) பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு கிடைப்பார்கள். அன்றி அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்.
Innal laaha laa yastahyeee ai yadriba masalam maa ba'oodatan famaa fawqahaa; faammal lazeena aamanoo faya'lamoona annahul haqqu mir rabbihim wa ammal lazeena kafaroo fayaqooloona maazaaa araadal laahu bihaazaa masalaa; yudillu bihee kaseeranw wa yahdee bihee kaseeraa; wa maa yudillu biheee illal faasiqeen
கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான். ஆதலால் எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான்.
Allazeena yanqudoona 'ahdal laahi mim ba'di meesaaqihee wa yaqt'oona maaa amaral laahu biheee ai yoosala wa yufsidoona fil ard; ulaaa'ika hum khaasirron
அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தைச் சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அதைப் பிரித்தும் விடுகின்றனர். பூமியில் விஷமம் செய்துகொண்டும் இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.
Kaifa takfuroona billaahi wa kuntum amwaatan fa ahyaakum summa yumeetukum summa yuhyeekum summaa ilaihi turja'oon
(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான். பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படுவீர்கள்.
Huwal lazee khalaqa lakum maa fil ardi jamee'an summas tawaaa ilas samaaa'i fasaw waahunna sab'a samaa waat; wa Huwa bikulli shai'in Aleem
அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். மேலும், அவன் வானத்தைப் படைக்கக் கருதி அதனை ஏழாகவும் அமைத்தான். அன்றி (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.
Wa iz qaala rabbuka lil malaaa'ikati innee jaa'ilun fil ardi khaleefatan qaalooo ataj'alu feehaa mai yufsidu feehaa wa yasfikud dimaaa'a wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu laka qaala inneee a'lamu maa laa ta'lamoon
(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்" எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் "(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத்தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். அதற்கவன் "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்" எனக் கூறிவிட்டான்.