Fahazamoohum bi iznillaahi wa qatala Daawoodu jaaloota wa aataahul laahulmulka Wal Hikmata wa 'allamahoo mimmaa yashaaa'; wa law laa daf'ullaahin naasa ba'dahum biba'dil lafasadatil ardu wa laakinnal laaha zoo fadlin 'alal'aalameen
ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை (தாலூத்துடைய படையிலிருந்த) தாவூத் வெட்டினார். பின்னர், அவருக்கு அல்லாஹ் ஞானத்தையும், அரசாங்கத்தையும் அளித்து (போர்க்கவசம் செய்வது போன்ற) தான் விரும்பியவைகளை எல்லாம் அவருக்குக் கற்பித்துக் கொடுத்தான். (இவ்வாறு) மனிதர்களில் (தீங்கு செய்யும்) சிலரை மனிதர்களில் சிலரைக் கொண்டே அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்தேயிருக்கும். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் மீது கருணையுடையவனாக இருக்கின்றான்.
Tilka Aayaatul laahi natloohaa 'alaika bilhaqq; wa innaka laminal mursaleen
(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். நாம் அவைகளை உங்களுக்கு உண்மையில் ஓதிக்காண்பிக்கிறோம். தவிர, நிச்சயமாக நீங்களும் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான்.
Tilkar Rusulu faddalnaa ba'dahum 'alaa ba'd; minhum man kallamal laahu wa rafa'a ba'dahum darajaat; wa aatainaa 'Eesab na Maryamal baiyinaati wa ayyadnaahu bi Roohil Qudus; wa law shaaa'al laahu maqtatalal lazeena mimba'dihim mim ba'di maa jaaa'athumul baiyinaatu wa laakinikh talafoo faminhum man aamana wa minhum man kafar; wa law shaaa'al laahu maq tataloo wa laakinnallaaha yaf'alu maa yureed (
(நம்மால் அனுப்பப்பட்ட) அத்தூதர்கள் (அனைவரும் ஒரே பதவி உடையவர்களல்லர்.) அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கின்றான். அவர்களில் சிலரை (சிலரைவிட) பதவியில் உயர்த்தியும் இருக்கின்றான். தவிர, மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து (ஜிப்ரீல் என்னும்) "பரிசுத்த ஆத்மா"வைக் கொண்டு அவருக்கு உதவி செய்தோம். (ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாதென்று) அல்லாஹ் நாடியிருந்தால் (அவன் அனுப்பிய தூதர்களான) அவர்களுக்குப் பின் வந்தவர்கள், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களோ தங்களுக்குள் வேறுபாடு கொண்டு (பிரிந்து) விட்டனர். அவர்களில் (நம்மையும், நம்முடைய வசனங்களையும்) நம்பிக்கை கொண்டவர்களும் உண்டு. அவர்களில் (அதை) நிராகரிப்பவர்களும் உண்டு. ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்வாறு) அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ் தான் நாடியவைகளையே செய்வான்.
Yaa ayyuhal lazeena aamanoo anfiqoo mimmaa razaqnaakum min qabli ai yaatiya yawmul laa bai'un fee wa la khullatunw wa laa shafaa'ah; walkaa firoona humuz zaalimoon
நம்பிக்கையாளர்களே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத (நியாயத் தீர்ப்பின்) நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து (நன்மையான வழியில்) நீங்கள் செலவு செய்யுங்கள். (இதை) நிராகரிப்பவர்கள்தான் (தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளும்) அநியாயக்காரர்கள்.
Allahu laaa ilaaha illaa Huwal Haiyul Qaiyoom; laa taakhuzuhoo sinatunw wa laa nawm; lahoo maa fissamaawaati wa maa fil ard; man zal lazee yashfa'u indahooo illaa bi-iznih; ya'lamu maa baina aydeehim wa mww khalfahum wa laa yuheetoona bishai'im min 'ilmihee illaa bimaa shaaa'; wasi'a Kursiyyuhus samaawaati wal arda wa laa ya'ooduho hifzuhumaa; wa Huwal Aliyyul 'Azeem
அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்த வற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய "குர்ஸி" வானங்கள், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்.
Laaa ikraaha fid deeni qat tabiyanar rushdu minal ghayy; famai yakfur bit Taaghooti wa yu'mim billaahi faqadis tamsaka bil'urwatil wusqaa lan fisaama lahaa; wallaahu Samee'un 'Aleem
(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தெளிவாகிவிட்டது. ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
Allaahu waliyyul lazeena aamanoo yukhrijuhum minaz zulumaati ilan noori wallazeena kafarooo awliyaaa'uhumut Taaghootu yukhrijoonahum minan noori ilaz zulumaat; ulaaa'ika Ashaabun Naari hum feehaa khaalidoon
(அன்றி) அல்லாஹ்வே நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகின்றான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் பாதுகாவலர்கள் ஷைத்தான்கள்தான். அவைகள் அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின்பால் செலுத்துகின்றன. அன்றி அவர்கள் நரகவாசிகள். மேலும், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்.
Alam tara ilal lazee Haaajja Ibraaheema fee Rabbiheee an aataahullaahul mulka iz qaala Ibraaheemu Rabbiyal lazee yuhyee wa yumeetu qaala ana uhyee wa yumeetu qaala ana uhyee wa umeetu qaala Ibraaheemu fa innal laaha yaatee bishshamsi minal mashriqi faati bihaa minal maghribi fabuhital lazee kafar; wallaahu laa yahdil qawmaz zaalimeen
(நபியே!) நீங்கள் ஒருவனை கவனித்தீர்களா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் (கர்வம் கொண்டு) இப்ராஹீமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தான். இப்ராஹீம் "எவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கவும் செய்கின்றானோ அவன்தான் என்னுடைய இறைவன்" என்று கூறியதற்கு, அவன் "நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்" என்று கூறினான். (அதற்கு) இப்ராஹீம் "(அவ்வாறாயின்) நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்குத் திசையில் உதயமாக்குகின்றான். நீ அதை மேற்குத் திசையில் உதயமாக்கு" எனக் கூறினார். ஆகவே, (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் (எவ்வித விடையுமளிக்க முடியாமல் திகைத்து) வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை.
Aw kallazee marra 'alaa qaryatinw wa hiya khaawiyatun 'alaa 'urooshihaa qaala annaa yuhyee haazihil laahu ba'da mawtihaa fa amaatahul laahu mi'ata 'aamin suumma ba'asahoo qaala kam labista qaala labistu yawman aw ba'da yawmin qaala bal labista mi'ata 'aamin fanzur ilaa ta'aamika wa sharaabika lam yatasannah wanzur ilaa himaarika wa linaj'alaka Aayatal linnaasi wanzur ilal'izaami kaifa nunshizuhaa summa naksoohaa lahmaa; falammaa tabiyana lahoo qaala a'lamu annal laaha 'alaakulli shai'in Qadeer
(நபியே!) அல்லது ஒரு கிராமத்தின் மீது சென்றவரைப் போல் (நீங்கள் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) "இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்தபின் அல்லாஹ் இதனை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?" என்று கூறினார். ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரையில் மரணித்திருக்கச் செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரை நோக்கி "இந்நிலையில்) நீங்கள் எவ்வளவு காலம் இருந்தீர்கள்" எனக் கேட்க "ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்" எனக் கூறினார். (அதற்கு அவன்) "அல்ல! நீங்கள் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர்கள். (இதோ!) உங்களுடைய உணவையும், உங்களுடைய பானத்தையும் பாருங்கள். (அவை இதுவரை) கெட்டுப்போகவில்லை. (ஆனால்) உங்களுடைய கழுதையைப் பாருங்கள். (அது செத்து மக்கி எலும்பாகக் கிடக்கின்றது.) இன்னும் உங்களை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர் களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (கழுதையின்) எலும்பு களையும் நீங்கள் பாருங்கள். எவ்வாறு அவைகளைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கின்றோம் என்று கூறி (அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான். (இவை அனைத்தும்) அவர் முன் தெளிவாக நடைபெற்றபோது (அவர்) "நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் என்பதை நான் உறுதியாக அறிந்துகொண்டேன்" என்று கூறினார்.
Wa iz qaala Ibraaheemu Rabbi arinee kaifa tuhyil mawtaa qaala awa lam tu'min qaala balaa wa laakil liyatma'inna qalbee qaala fakhuz arab'atam minal tairi fasurhunna ilaika summaj 'al a'alaa kulli jabalim minhunna juz'an sumaad 'uhunna yaateenaka sa'yaa; wa'lam annal laaha 'Azeezun Hakeem
அன்றி, இப்ராஹீம் (இறைவனை நோக்கி) "என் இறைவனே! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய். (அதை) நீ எனக்குக் காண்பி" எனக் கூறியபோது, அவன் (இதை) "நீங்கள் நம்பவில்லையா?" என்று கேட்டான். (அதற்கு) அவர் "நான் நம்பியே இருக்கின்றேன். ஆயினும், (அதனை என் கண்ணால் கண்டு) என்னுடைய உள்ளம் திருப்தியடைவதற்காக (அதனைக் காண்பி)" எனக் கூறினார். (அதற்கவன்) "நான்கு பறவைகளைப் பிடித்து நீங்கள் அவைகளைப் பழக்கி, பின்னர் (அவைகளைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிட்டு (நடுவில் இருந்துகொண்டு) அவைகளை நீங்கள் கூப்பிடுங்கள். அவை உங்களிடம் பறந்துவந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) "நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், மிக்க நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்" என்றான்.