Skip to main content

وَإِذَا قِيلَ
இன்னும் கூறப்பட்டால்
لَهُمْ
அவர்களுக்கு
لَا تُفْسِدُوا۟
விஷமம் செய்யாதீர்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
إِنَّمَا
எல்லாம்
نَحْنُ
நாங்கள்
مُصْلِحُونَ
சீர்திருத்தவாதிகள்தான்

Wa izaa qeela lahum laa tufsidoo fil ardi qaalo innamaa nahnu muslihoon

அவர்களை நோக்கி பூமியில் விஷமம் செய்(து கொண்டு அலை)யாதீர்கள் என்று கூறினால், அதற்கவர்கள் "நாங்கள் சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் (விஷமிகள் அல்லர்)" எனக் கூறுகிறார்கள்.

Tafseer

أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّهُمْ هُمُ
நிச்சயமாக அவர்கள்தான்
ٱلْمُفْسِدُونَ
விஷமிகள்
وَلَٰكِن
எனினும்
لَّا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்

Alaaa innahum humul mufsidoona wa laakil laa yash'uroon

நிச்சயமாக அவர்கள் விஷமிகளே! ஆனால், (தாங்கள்தான் விஷமிகள் என்பதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.

Tafseer

وَإِذَا قِيلَ
இன்னும் கூறப்பட்டால்
لَهُمْ
அவர்களுக்கு
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
كَمَآ
போன்று
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்(கள்)
ٱلنَّاسُ
மக்கள்
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
أَنُؤْمِنُ
நாங்கள் நம்பிக்கை கொள்வோமா?
كَمَآ
போன்று
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்(கள்)
ٱلسُّفَهَآءُۗ
அறிவீனர்கள்
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّهُمْ هُمُ
நிச்சயமாக அவர்கள்தான்
ٱلسُّفَهَآءُ
அறிவீனர்கள்
وَلَٰكِن
எனினும்
لَّا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa izaa qeela lahum aaminoo kamaaa aamanan naasu qaalooo anu'minu kamaaa aamanas sufahaaa'; alaaa innahum humus sufahaaa'u wa laakil laa ya'lamoon

மேலும், அவர்களை நோக்கி "(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினால், (அதற்கு) அவர்கள் "அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?" என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் மூடர்கள். ஆனால் (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள்.

Tafseer

وَإِذَا لَقُوا۟
அவர்கள் சந்தித்தால்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களை
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
وَإِذَا خَلَوْا۟
அவர்கள் தனித்தால்
إِلَىٰ شَيَٰطِينِهِمْ
பக்கம்/ஷைத்தான்கள்/தங்கள்
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
مَعَكُمْ
உங்களுடன்
إِنَّمَا نَحْنُ
நாங்கள் எல்லாம்
مُسْتَهْزِءُونَ
பரிகசிப்பவர்கள்தான்

Wa izaa laqul lazeena aamanoo qaalooo aamannaa wa izaa khalw ilaa shayaateenihim qaalooo innaa ma'akum innamaa nahnu mustahzi'oon

தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் "நாங்களும் (உங்களைப் போல்) நம்பிக்கையாளர்கள்தான்" எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்" எனக் கூறுகின்றனர்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
يَسْتَهْزِئُ
பரிகசிக்கிறான்
بِهِمْ
அவர்களை
وَيَمُدُّهُمْ
இன்னும் விட்டு வைக்கி றான்/அவர்களை
فِى طُغْيَٰنِهِمْ
அட்டூழியத்தில்/அவர்களுடைய
يَعْمَهُونَ
கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக

Allahu yastahzi'u bihim wa yamudduhum fee tughyaanihim ya'mahoon

(அவ்வாறன்று!) அல்லாஹ்தான் அவர்களை பரிகசிக்கின்றான். மேலும், அவர்களுடைய அட்டூழியத்தில் (இவ்விதம் தட்டழிந்து) கெட்டலையும்படி விட்டு வைத்துள்ளான்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
ٱشْتَرَوُا۟
விலைக்கு வாங்கினார்கள்
ٱلضَّلَٰلَةَ
வழிகேட்டை
بِٱلْهُدَىٰ
நேர்வழிக்குப் பதிலாக
فَمَا رَبِحَت
எனவே, இலாபமடையவில்லை
تِّجَٰرَتُهُمْ
வியாபாரம்/அவர்களின்
وَمَا كَانُوا۟
இன்னும் அவர்கள் இருக்கவில்லை
مُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களாக

Ulaaa'ikal lazeenash tara wud dalaalata bilhudaa famaa rabihat tijaaratuhum wa maa kaanoo muhtadeen

இவர்கள்தான் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.

Tafseer

مَثَلُهُمْ
உதாரணம்/அவர்களின்
كَمَثَلِ
உதாரணத்தைப் போல்
ٱلَّذِى
எவர்(கள்)
ٱسْتَوْقَدَ
மூட்டினார்(கள்)
نَارًا
நெருப்பை
فَلَمَّآ
போது
أَضَآءَتْ
வெளிச்சமாக்கியது
مَا حَوْلَهُۥ
எதை/சுற்றி/அவரை
ذَهَبَ
சென்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِنُورِهِمْ
ஒளியைக் கொண்டு/அவர்களின்
وَتَرَكَهُمْ
இன்னும் விட்டு விட்டான்/அவர்களை
فِى ظُلُمَٰتٍ
இருள்களில்
لَّا يُبْصِرُونَ
பார்க்க மாட்டார்கள்

Masaluhum kamasalillazis tawqada naaran falammaaa adaaa'at maa hawlahoo zahabal laahu binoorihim wa tarakahum fee zulumaatil laa yubsiroon

இவர்களுடைய உதாரணம் ஓர் உதாரணத்தை ஒத்திருக் கின்றது. (அதாவது: அபாயகரமான காட்டில், காரிருளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழியை அறிவிப்பதற்காக) ஒருவர் தீயை மூட்டி (அதனால்) அவரைச் சூழ ஒளி ஏற்பட்ட சமயத்தில் (அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக) அல்லாஹ் அவர்களுடைய (பார்வை) ஒளியைப் போக்கி பார்க்க முடியாத காரிருளில் விட்டுவிட்டான்.

Tafseer

صُمٌّۢ بُكْمٌ
செவிடர்கள்/ஊமைகள்
عُمْىٌ
குருடர்கள்
فَهُمْ
எனவே, அவர்கள்
لَا يَرْجِعُونَ
திரும்ப மாட்டார்கள்

Summum bukmun 'umyun fahum laa yarji'oon

(அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றார்கள். ஆதலால், இவர்கள் (அபாயகரமான இந்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள்.

Tafseer

أَوْ
அல்லது
كَصَيِّبٍ
போல/மழை
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
فِيهِ
அதில்
ظُلُمَٰتٌ
இருள்கள்
وَرَعْدٌ
இன்னும் இடி
وَبَرْقٌ
இன்னும் மின்னல்
يَجْعَلُونَ
வைக்கிறார்கள்
أَصَٰبِعَهُمْ
தங்கள் விரல்களை
فِىٓ ءَاذَانِهِم
தங்கள் காதுகளில்
مِّنَ ٱلصَّوَٰعِقِ
இடி முழக்கங்களால்
حَذَرَ
பயந்து
ٱلْمَوْتِۚ
மரணத்தை
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
مُحِيطٌۢ
சூழ்ந்திருக்கிறான்
بِٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை

Aw kasaiyibim minas samaaa'i feehi zulumaatunw wa ra'dunw wa barq, yaj'aloona asaabi'ahum feee aazaanihim minas sawaa'iqi hazaral mawt' wallaahu muheetum bilkaafireen

அல்லது (இவர்களுடைய உதாரணம்:) அடர்ந்த இருளும், இடியும், மின்னலும் கொண்ட மேகம் பொழியும் மழையில் அகப்பட்டுக் கொண்ட(வர்களின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. இவ்வாறு அகப்பட்டுக் கொண்ட இ)வர்கள் இடி முழக்கங்களால் மரணத்திற்குப் பயந்து தங்களுடைய விரல்களைத் தங்களுடைய காதுகளில் நுழைத்து (அடைத்து)க் கொள்கின்றனர். அல்லாஹ் நிராகரிக்கும் இவர்களை (எப்பொழுதும்) சூழ்ந்துகொண்டு இருக்கின்றான்.

Tafseer

يَكَادُ
நெருங்குகிறது
ٱلْبَرْقُ
மின்னல்
يَخْطَفُ
பறிக்கிறது
أَبْصَٰرَهُمْۖ
பார்வைகளை அவர்களின்
كُلَّمَآ أَضَآءَ
அது வெளிச்சம் தரும் போதெல்லாம்
لَهُم
அவர்களுக்கு
مَّشَوْا۟
நடக்கிறார்கள்
فِيهِ
அதில்
وَإِذَآ أَظْلَمَ
இன்னும் இருள் சூழ்ந்தால்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
قَامُوا۟ۚ
நிற்கிறார்கள்
وَلَوْ شَآءَ
நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
لَذَهَبَ
திட்டமாக சென்றுவிடுவான்
بِسَمْعِهِمْ
கேள்விப்புலனைக் கொண்டு/அவர்களின்
وَأَبْصَٰرِهِمْۚ
பார்வைகளை அவர்களின்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلَىٰ
மீது
كُلِّ شَىْءٍ
எல்லாம்/பொருள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Yakaadul barqu yakhtafu absaarahum kullamaaa adaaa'a lahum mashaw feehi wa izaaa azlama 'alaihim qaamoo; wa law shaaa'al laahu lazahaba bisam'ihim wa absaarihim; innal laaha 'alaa kulli shai'in Qadeer

(தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த வெளிச்சத்)தில் நடக்(க விரும்பு)கிறார்கள். (ஆனால், அம்மின்னல் மறைந்து) அவர்களை இருள் சூழ்ந்து கொண்டால் (வழி தெரியாது திகைத்து) நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப் புலனையும் பார்வைகளையும் போக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன்.

Tafseer