Skip to main content

كَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பியதற்காக
فِيكُمْ
உங்களுக்கு
رَسُولًا
ஒரு தூதரை
مِّنكُمْ
உங்களிலிருந்தே
يَتْلُوا۟
அவர் ஓதுகிறார்
عَلَيْكُمْ
உங்கள் மீது
ءَايَٰتِنَا
நம் வசனங்களை
وَيُزَكِّيكُمْ
இன்னும் உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்
وَيُعَلِّمُكُمُ
இன்னும் உங்களுக்குக் கற்பிக்கிறார்
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
وَيُعَلِّمُكُم مَّا
இன்னும் உங்களுக்கு கற்பிக்கிறார்/எதை
لَمْ تَكُونُوا۟
நீங்கள்இருக்கவில்லை
تَعْلَمُونَ
அறிவீர்கள்

kamaaa arsalnaa feekum Rasoolam minkum yatloo 'alaikum aayaatina wa yuzakkeekum wa yu'alli mukumul kitaaba wal hikmata wa yu'allimukum maa lam takoonoo ta'lamoon

அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் (அவைகளிலுள்ள) ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பி வைத்தோம்.

Tafseer

فَٱذْكُرُونِىٓ
ஆகவே நினைவு கூருங்கள் என்னை
أَذْكُرْكُمْ
நினைவு கூருவேன்/உங்களை
وَٱشْكُرُوا۟ لِى
இன்னும் நன்றி செலுத்துங்கள்/எனக்கு
وَلَا تَكْفُرُونِ
இன்னும் மாறுசெய்யாதீர்கள்/எனக்கு

Fazkurooneee azkurkum washkuroo lee wa laa takfuroon

நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
ٱسْتَعِينُوا۟
உதவி கோருங்கள்
بِٱلصَّبْرِ
பொறுமையைக் கொண்டு
وَٱلصَّلَوٰةِۚ
இன்னும் தொழுகை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
مَعَ
உடன்
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்கள்

Yaaa ayyuhal laazeena aamanus ta'eenoo bissabri was Salaah; innal laaha ma'as-saabireen

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

Tafseer

وَلَا تَقُولُوا۟
இன்னும் கூறாதீர்கள்
لِمَن
எவரை
يُقْتَلُ
கொல்லப்படுவார்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
أَمْوَٰتٌۢۚ
இறந்தவர்கள்
بَلْ
மாறாக
أَحْيَآءٌ
உயிருள்ளவர்கள்
وَلَٰكِن
எனினும்
لَّا تَشْعُرُونَ
அறிய மாட்டீர்கள்

Wa laa taqooloo limai yuqtalu fee sabeelil laahi amwaat; bal ahyaaa'unw wa laakil laa tash'uroon

அன்றி, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரி களால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால் (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.

Tafseer

وَلَنَبْلُوَنَّكُم
நிச்சயமாக சோதிப்போம்/உங்களை
بِشَىْءٍ
கொஞ்சத்தைக் கொண்டு
مِّنَ ٱلْخَوْفِ
பயத்திலிருந்து
وَٱلْجُوعِ
இன்னும் பசி
وَنَقْصٍ
இன்னும் நஷ்டம்
مِّنَ ٱلْأَمْوَٰلِ
செல்வங்களிலிருந்து
وَٱلْأَنفُسِ
இன்னும் உயிர்கள்
وَٱلثَّمَرَٰتِۗ
இன்னும் விளைச்சல்கள்
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்களுக்கு

Wa lanablu wannakum bishai'im minal khawfi waljoo'i wa naqsim minal amwaali wal anfusi was samaraat; wa bashshiris saabireen

(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
إِذَآ أَصَٰبَتْهُم
ஏற்பட்டால்/அவர்களுக்கு
مُّصِيبَةٌ
ஒரு சோதனை
قَالُوٓا۟
கூறுவார்கள்
إِنَّا
நிச்சயமாக நாம்
لِلَّهِ
அல்லாஹ்விற்காக
وَإِنَّآ
இன்னும் நிச்சயமாக நாம்
إِلَيْهِ
அவனிடமே
رَٰجِعُونَ
திரும்புகிறவர்கள்

Allazeena izaaa asaabathum museebatun qaalooo innaa lillaahi wa innaaa ilaihi raaji'oon

(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்" எனக் கூறுவார்கள்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
صَلَوَٰتٌ
மன்னிப்பு
مِّن
இருந்து
رَّبِّهِمْ
அவர்களின் இறைவன்
وَرَحْمَةٌۖ
இன்னும் கருணை
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
ٱلْمُهْتَدُونَ
நேர்வழி பெற்றவர்கள்

Ulaaa'ika 'alaihim salawaatun mir Rabbihim wa rahma; wa ulaaa'ika humul muhtadoon

இத்தகையவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து புகழுரைகளும் கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், இவர்கள்தாம் நேரான வழியையும் அடைந்தவர்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلصَّفَا
ஸஃபா
وَٱلْمَرْوَةَ
இன்னும் மர்வா
مِن
இருந்து
شَعَآئِرِ
அடையாளங்கள்
ٱللَّهِۖ
அல்லாஹ்வுடைய
فَمَنْ
ஆகவே எவர்
حَجَّ
ஹஜ்ஜு செய்தார்
ٱلْبَيْتَ
கஅபாவை
أَوِ
அல்லது
ٱعْتَمَرَ
உம்றா செய்தார்
فَلَا جُنَاحَ
அறவே குற்றமில்லை
عَلَيْهِ
அவர் மீது
أَن يَطَّوَّفَ
சுற்றி வருவது
بِهِمَاۚ
அவ்விரண்டையும்
وَمَن
இன்னும் எவர்
تَطَوَّعَ
உபரியாகச் செய்தார்
خَيْرًا
நன்மையை
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
شَاكِرٌ
நன்றி பாராட்டுபவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Innas Safaa wal-Marwata min sha'aaa'iril laahi faman hajjal Baita awi'tamara falaa junaaha 'alaihi ai yattawwafa bihimaa; wa man tatawwa'a khairan fa innal laaha Shaakirun'Aleem

நிச்சயமாக "ஸஃபா" (மலையும்) "மர்வா" (மலையும், வணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் எவர்கள் ("கஅபா" என்னும்) அவ்வீட்டை "ஹஜ்ஜு" அல்லது "உம்ரா" செய்தார்களோ அவர்கள், அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்றமல்ல. ஆகவே, எவரேனும் நன்மையை நாடி (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அதற்கு) நன்றி பாராட்டுபவ னாகவும் (எண்ணங்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
يَكْتُمُونَ
மறைக்கிறார்கள்
مَآ
எவற்றை
أَنزَلْنَا
இறக்கினோம்
مِنَ
இருந்து
ٱلْبَيِّنَٰتِ
தெளிவான சான்றுகள்
وَٱلْهُدَىٰ
இன்னும் நேர்வழி
مِنۢ بَعْدِ
பின்னர்
مَا بَيَّنَّٰهُ
நாம் தெளிவுபடுத்தினோம்/அவற்றை
لِلنَّاسِ
மக்களுக்கு
فِى ٱلْكِتَٰبِۙ
வேதத்தில்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يَلْعَنُهُمُ
சபிக்கிறான்/அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
وَيَلْعَنُهُمُ
இன்னும் சபிக்கிறார்(கள்)/அவர்களை
ٱللَّٰعِنُونَ
சபிப்பவர்கள்

Innal lazeena yaktumoona maaa anzalnaa minal baiyinaati walhudaa mim ba'di maa baiyannaahu linnaasi fil kitaabi ulaaa'ika yal'anuhumul laahu wa yal'anuhumul laa 'inoon

நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் இறக்கி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி(க் கூறி)ய பின்னும் எவர்கள் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கின்றான். (மற்றும்) சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர்.

Tafseer

إِلَّا ٱلَّذِينَ
தவிர/எவர்கள்
تَابُوا۟
மன்னிப்புக் கோரினார்கள்
وَأَصْلَحُوا۟
இன்னும் சீர்திருத்தினார்கள்
وَبَيَّنُوا۟
இன்னும் தெளிவுபடுத்தினார்கள்
فَأُو۟لَٰٓئِكَ
இன்னும் அவர்கள்
أَتُوبُ
மன்னிப்பேன்
عَلَيْهِمْۚ
அவர்களை
وَأَنَا
நான்
ٱلتَّوَّابُ
மகா மன்னிப்பாளன்
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்

Illal lazeena taaboo wa aslahoo wa baiyanoo fa ulaaa'ika atoobu 'alaihim; wa Anat Tawwaabur Raheem

ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (தங்கள் வேதங்களில் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்துவிடுவேன். நானோ மிக்க மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன்.

Tafseer