Skip to main content

تِلْكَ
அது
أُمَّةٌ
ஒரு சமுதாயம்
قَدْ خَلَتْۖ
சென்றுவிட்டது
لَهَا
அதற்கு
مَا كَسَبَتْ
எது/செய்தது
وَلَكُم
இன்னும் உங்களுக்கு
مَّا
எது
كَسَبْتُمْۖ
செய்தீர்கள்
وَلَا تُسْـَٔلُونَ
இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
عَمَّا
எது பற்றி
كَانُوا۟ يَعْمَلُونَ
இருந்தார்கள்/ செய்வார்கள்

Tilka ummatun qad khalat lahaa maa kasabat wa lakum maa kasabtum wa laa tus'aloona 'ammaa kaano ya'maloo

(மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்.) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று உங்களிடம் கேட்கப்படமாட்டாது.

Tafseer

سَيَقُولُ
கூறுவார்கள்
ٱلسُّفَهَآءُ
அறிவீனர்கள்
مِنَ ٱلنَّاسِ
மக்களில்
مَا
எது
وَلَّىٰهُمْ
திருப்பியது/அவர்களை
عَن
விட்டு
قِبْلَتِهِمُ
கிப்லா/அவர்களின்
ٱلَّتِى
எது
كَانُوا۟
இருந்தார்கள்
عَلَيْهَاۚ
அதன் மீது
قُل
கூறு(வீராக)
لِّلَّهِ
அல்லாஹ்வுக்குரியன
ٱلْمَشْرِقُ
கிழக்கு
وَٱلْمَغْرِبُۚ
இன்னும் மேற்கு
يَهْدِى
நேர்வழிகாட்டுகிறான்
مَن يَشَآءُ
எவர்/நாடுகிறான்
إِلَىٰ صِرَٰطٍ
பாதைக்கு
مُّسْتَقِيمٍ
நேரான

Sayaqoolus sufahaaa'u minan naasi maa wallaahum 'an Qiblatihimul latee kaanoo 'alaihaa; qulo lillaahil mashriqu walmaghrib; yahdee mai yashaaa'u ilaa Siraatim Mustaqeem

(நபியே! "முஸ்லிம்கள் முன்னர்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பிவிட்டது எது?" என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புபவர்களை நேரான வழியில் செலுத்துவான்."

Tafseer

وَكَذَٰلِكَ
இன்னும் அவ்வாறுதான்
جَعَلْنَٰكُمْ
ஆக்கினோம்/உங்களை
أُمَّةً
சமுதாயமாக
وَسَطًا
நடுநிலையான
لِّتَكُونُوا۟
நீங்கள் இருப்பதற்காக
شُهَدَآءَ
சாட்சிகளாக
عَلَى ٱلنَّاسِ
மக்களுக்கு
وَيَكُونَ
இன்னும் இருப்பார்
ٱلرَّسُولُ
தூதர்
عَلَيْكُمْ
உங்களுக்கு
شَهِيدًاۗ
சாட்சியாக
وَمَا جَعَلْنَا
இன்னும் நாம்ஆக்கவில்லை
ٱلْقِبْلَةَ
கிப்லாவை
ٱلَّتِى
எது
كُنتَ
நீர் இருந்தீர்
عَلَيْهَآ
அதன் மீது
إِلَّا
தவிர
لِنَعْلَمَ
நாம் அறிவதற்காக
مَن
எவர்
يَتَّبِعُ
பின்பற்றுவார்
ٱلرَّسُولَ
தூதரை
مِمَّن
எவரிலிருந்து
يَنقَلِبُ
திரும்பி விடுகிறார்
عَلَىٰ
மீது
عَقِبَيْهِۚ
அவருடைய (இரு) குதிங்கால்கள்
وَإِن كَانَتْ
இன்னும் நிச்சயமாக அது இருந்தது
لَكَبِيرَةً
பெரிதாக
إِلَّا
தவிர
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
هَدَى
நேர்வழி நடத்தினான்
ٱللَّهُۗ
அல்லாஹ்
وَمَا كَانَ
இன்னும் இருக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لِيُضِيعَ
அவன் வீணாக்குபவனாக
إِيمَٰنَكُمْۚ
உங்கள் நம்பிக்கையை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
بِٱلنَّاسِ
மக்கள் மீது
لَرَءُوفٌ
மிக இரக்கமுடையவன்தான்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Wa kazaalika ja'alnaakum ummatanw wasatal litakoonoo shuhadaaa'a 'alan naasi wa yakoonar Rasoolu 'alaikum shaheedaa; wa maa ja'alnal qiblatal latee kunta 'alaihaaa illaa lina'lama mai yattabi'ur Rasoola mimmai yanqalibu 'alaa 'aqibayh; wa in kaanat lakabeeratan illaa 'alal lazeena hadal laah; wa maa kaanal laahu liyudee'a eemaanakum; innal laaha binnaasi la Ra'oofur Raheem

(நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான வகுப்பினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக் கூடிய) சாட்சிகளாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு (வழி காட்டக் கூடிய) சாட்சியாக இருப்பார். (நபியே!) நீங்கள் (இதுவரை முன்நோக்கித் தொழுதுகொண்டு) இருந்த (பைத்துல் முகத்தஸின்) திசையை (மாற்றாமல் நீங்கள் அதையே நோக்கித் தொழுது வரும்படி இதுவரை) நாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின் நம்) தூதரைப் பின்பற்றுபவர் யார்? பின்பற்றாது தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு) திரும்பி(ச் சென்று) விடுகிறவர் யார்? என்பதை நாம் அறி(வித்து விடு)வதற்காகத்தான். ஆனால் எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகின்றானோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அ(வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும். தவிர, (நம்பிக்கையாளர்களே! இதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த) உங்களுடைய நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகக் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன்.

Tafseer

قَدْ نَرَىٰ
திட்டமாக காண்கிறோம்
تَقَلُّبَ
திரும்புவதை
وَجْهِكَ
உம் முகம்
فِى ٱلسَّمَآءِۖ
வானத்தின் பக்கம்
فَلَنُوَلِّيَنَّكَ
ஆகவே நிச்சயமாக திருப்புவோம்/உம்மை
قِبْلَةً
ஒரு கிப்லாவிற்கு
تَرْضَىٰهَاۚ
நீர்அதைவிரும்புகிறீர்
فَوَلِّ
எனவே திருப்புவீராக
وَجْهَكَ
உம் முகத்தை
شَطْرَ
பக்கம்
ٱلْمَسْجِدِ
அல் மஸ்ஜிது
ٱلْحَرَامِۚ
புனிதமான
وَحَيْثُ مَا
நீங்கள் எங்கிருந்தாலும்
فَوَلُّوا۟
திருப்புங்கள்
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
شَطْرَهُۥۗ
அதன் பக்கம்
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
لَيَعْلَمُونَ
திட்டமாக அறிவார்கள்
أَنَّهُ
நிச்சயமாக அது
ٱلْحَقُّ
உண்மை
مِن
இருந்து
رَّبِّهِمْۗ
தங்கள் இறைவன்
وَمَا ٱللَّهُ
இன்னும் இல்லை/அல்லாஹ்
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
عَمَّا
எதைப்பற்றி
يَعْمَلُونَ
செய்கிறார்கள்

Qad naraa taqalluba wajhika fis samaaa'i fala nuwalliyannaka qiblatan tardaahaa; fawalli wajhaka shatral Masjidil haaraam; wa haisu maa kuntum fawalloo wujoohakum shatrah; wa innal lazeena ootul Kitaaba laya'lamoona annahul haqqu mir Rabbihim; wa mal laahu bighaafilin 'ammaa ya'maloon

(நபியே!) உங்களுடைய முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீங்கள் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உங்களை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே, நீங்கள் (தொழும்போது மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்தபோதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள். வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும், கிறிஸ்த)வர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) "இது தங்கள் இறைவனிடமிருந்(து வந்)த உண்மை(யான உத்தரவு)தான்" என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால், அவ்வாறே அவர்களுடைய வேதத்தில் இருக்கின்றது. எனவே, உண்மையை மறைக்கும்) அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.

Tafseer

وَلَئِنْ
أَتَيْتَ
நீர் வந்தால்
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
بِكُلِّ
எல்லாவற்றையும் கொண்டு
ءَايَةٍ
அத்தாட்சி
مَّا تَبِعُوا۟
அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்
قِبْلَتَكَۚ
உமது கிப்லாவை
وَمَآ أَنتَ
இன்னும் இல்லை/நீர்
بِتَابِعٍ
பின்பற்றுபவராக
قِبْلَتَهُمْۚ
அவர்களின்கிப்லாவை
وَمَا
இன்னும் இல்லை
بَعْضُهُم
அவர்களில் சிலர்
بِتَابِعٍ
பின்பற்றுபவராக
قِبْلَةَ
கிப்லாவை
بَعْضٍۚ
சிலரின்
وَلَئِنِ ٱتَّبَعْتَ
நீர் பின்பற்றினால்
أَهْوَآءَهُم
விருப்பங்களை அவர்களுடைய
مِّنۢ بَعْدِ
பின்னர்
مَا
எது
جَآءَكَ
வந்தது/உமக்கு
مِنَ ٱلْعِلْمِۙ
கல்வியிலிருந்து
إِنَّكَ
நிச்சயமாக நீர்
إِذًا
அப்போது
لَّمِنَ
தான்/இல்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Wa la'in ataital lazeena ootul kitaaba bikulli aayatim maa tabi'oo Qiblatak; wa maaa anta bitaabi'in Qiblatahum; wa maa ba'duhum bitaabi''in Qiblata ba'd; wa la'init taba'ta ahwaaa;ahum mim ba'di maa jaaa'aka minal 'ilmi innaka izal laminaz zaalimeen

ஆகவே (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட அவர்களுக்குத் (திருப்தியளிப்பதற்காக) அத்தாட்சிகள் அனைத்தையும் நீங்கள் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உங்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீங்களும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. அன்றி (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உங்களுக்கு வஹீ(யின் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னும் அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்களும் அநியாயக்கரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்கள்).

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
ءَاتَيْنَٰهُمُ
கொடுத்தோம்/அவர்களுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
يَعْرِفُونَهُۥ
அறிவார்கள்/அதை
كَمَا
போன்று
يَعْرِفُونَ
அறிகிறார்கள்
أَبْنَآءَهُمْۖ
பிள்ளைகளை தங்கள்
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
فَرِيقًا
ஒரு பிரிவினர்
مِّنْهُمْ
அவர்களிலிருந்து
لَيَكْتُمُونَ
திட்டமாக மறைக்கிறார்கள்
ٱلْحَقَّ
உண்மையை
وَهُمْ
அவர்கள்
يَعْلَمُونَ
அறிகிறார்கள்

Allazeena aatainaahumul kitaaba ya'rifoonahoo kamaa ya'rifoona abnaaa'ahum wa inna fareeqam minhum layaktumoonal haqqa wa hum ya'lamoon

எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த மக்காவின் திசையளவில் நீங்கள் திரும்பித் தொழுவீ ரென்ப)தை அறிவார்கள். ஆனால், அதிலொரு பிரிவினர் நிச்சயமாக நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்.

Tafseer

ٱلْحَقُّ مِن
உண்மை/இருந்து
رَّبِّكَۖ
உம் இறைவன்
فَلَا تَكُونَنَّ
எனவே, நீர் ஆகிவிட வேண்டாம்
مِنَ ٱلْمُمْتَرِينَ
சந்தேகிப்பவர்களில்

Alhaqqu mir Rabbika falaa takoonana minal mumtareen

(நபியே! கிப்லாவைப் பற்றி) உங்கள் இறைவனிடமிருந்து வந்த இதுதான் உண்மை(யான கட்டளை.) ஆதலால், நீங்கள் சந்தேகிப்பவர்களில் ஒருவராக ஒரு சிறிதும் ஆகிவிட வேண்டாம்.

Tafseer

وَلِكُلٍّ
ஒவ்வொருவருக்கும்
وِجْهَةٌ
ஒரு திசை
هُوَ مُوَلِّيهَاۖ
அவர் அதை முன்னோக்கக்கூடியவர்
فَٱسْتَبِقُوا۟
எனவே, முந்திச் செல்லுங்கள்
ٱلْخَيْرَٰتِۚ
நன்மைகளில்
أَيْنَ مَا
எங்கே
تَكُونُوا۟
நீங்கள்இருந்தாலும்
يَأْتِ
வருவான்
بِكُمُ
உங்களைக் கொண்டு
ٱللَّهُ
அல்லாஹ்
جَمِيعًاۚ
அனைவரையும்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாப் பொருள் மீது
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wa likullinw wijhatun huwa muwalleehaa fastabiqul khairaat; ayna maa takoonoo yaati bikumullaahu jamee'aa; innal laaha 'alaa kulli shai'in qadeer

(நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) நன்மையானவைகளை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.

Tafseer

وَمِنْ حَيْثُ
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்
فَوَلِّ
திருப்புவீராக
وَجْهَكَ
உம் முகத்தை
شَطْرَ
பக்கம்
ٱلْمَسْجِدِ
அல் மஸ்ஜிது
ٱلْحَرَامِۖ
புனிதமான
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக இது
لَلْحَقُّ
(உ) உண்மைதான்
مِن
இருந்து
رَّبِّكَۗ
உம் இறைவன்
وَمَا
இன்னும் இல்லை
ٱللَّهُ
அல்லாஹ்
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
عَمَّا
எது பற்றி
تَعْمَلُونَ
நீங்கள் செய்கிறீர்கள்

Wa min haisu kharajta fawalli wajhaka shatral Masjidil Haraami wa innahoo lalhaqqu mir Rabbik; wa mallaahu bighaafilin 'ammaa ta'maloon

ஆகவே (நபியே!) நீங்கள் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். நிச்சயமாக இதுதான் உங்கள் இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும். (ஆகவே, இதனைப்பற்றி வீண் தர்க்கம் செய்பவர்களே!) உங்களுடைய செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.

Tafseer

وَمِنْ حَيْثُ
இன்னும் நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்
فَوَلِّ
திருப்புவீராக
وَجْهَكَ
உம் முகத்தை
شَطْرَ
பக்கம்
ٱلْمَسْجِدِ
அல் மஸ்ஜிது
ٱلْحَرَامِۚ
புனிதமான
وَحَيْثُ مَا
நீங்கள் எங்கிருந்தாலும்
فَوَلُّوا۟
திருப்புங்கள்
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
شَطْرَهُۥ
அதன் பக்கம்
لِئَلَّا يَكُونَ
ஆகாமல் இருப்பதற்காக
لِلنَّاسِ
மக்களுக்கு
عَلَيْكُمْ
உங்களுக்கெதிராக
حُجَّةٌ
ஓர் ஆதாரம்
إِلَّا
தவிர
ٱلَّذِينَ
எவர்கள்
ظَلَمُوا۟
அநியாயம் செய்தார்கள்
مِنْهُمْ
அவர்களில்
فَلَا تَخْشَوْهُمْ
ஆகவே, அவர்களைப் பயப்படாதீர்கள்
وَٱخْشَوْنِى
இன்னும் என்னைப் பயப்படுங்கள்
وَلِأُتِمَّ
இன்னும் நான் முழுமைப்படுத்துவதற்காக
نِعْمَتِى
என் அருட்கொடையை
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ
இன்னும் நீங்கள் நேர்வழி அடைவதற்கு

Wa min haisu kharajta fawalli wajhaka shatral Masjidil Haraam; wa haisu maa kuntum fawalloo wujoohakum shatrahoo li'allaa yakoona linnaasi 'alaikum hujjatun illal lazeena zalamoo minhum falaa takhshawhum wakhshawnee wa liutimma ni'matee 'alaikum wa la'allakum tahtadoon

அன்றி, (நபியே!) நீங்கள் எங்குச் சென்றாலும் தொழும் போது) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் வரம்பு மீறியவர் களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் (வீண்) விவாதம் செய்ய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக நீங்களும் எங்கிருந்த போதிலும் "அல் மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள். அன்றி, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம்) என்னுடைய அருட்கொடையை நான் உங்கள்மீது முழுமையாக்கி வைப்பேன். (அதனால்) நிச்சயமாக நீங்கள் நேரான வழியை அடைவீர்கள்.

Tafseer