Wa qaaloo lai yadkhulal jannata illaa man kaana Hoodan aw Nasaaraa; tilka ammniyyuhum; qul haatoo burhaa nakum in kuntum saadiqeen
(நபியே!) கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருப்பவரைத் தவிர (மற்ற எவரும்) சுவர்க்கம் நுழையவே மாட்டார்கள் என அவ(ரவ)ர்கள் கூறுகிறார்கள். இது அவர்களுடைய வீண் நம்பிக்கையே(யன்றி உண்மையல்ல. ஆதலால் அவர்களை நோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் உங்களுடைய (இவ்வார்த்தைக்குரிய) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்."
Balaa man aslama wajhahoo lillaahi wa huwa muhsinun falahooo ajruhoo 'inda rabbihee wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon
(உண்மை) அவ்வாறன்று! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை (முற்றிலும்) அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறாரோ அவருக்கே அவர் செய்யும் நன்மையின் கூலி அவருடைய இறைவனிடம் உண்டு. அன்றி, இத்தகையவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
Wa qaalatil Yahoodu laisatin Nasaaraa 'alaa shai'inw-wa qaalatin Nasaaraaa laisatil Yahoodu 'alaa shai'inw'wa hum yatloonal Kitaab; kazaalika qaalal lazeena la ya'lamoona misla qawlihim Yawmal Qiyaamati feemaa kaanoo feehi yakhtalifoon
தவிர, "கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை" என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறே) "யூதர்கள் எ(ந்த மார்க்கத்) திலுமில்லை" எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால் இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் "பழைய ஏற்பாடாகிய" தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக் கொள்வதுபோலவே (வேதத்தை) அறிந்துகொள்ளாத (இணைவைத்து வணங்குப)வர்கள் ("யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்களல்ல" எனக்) கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்.
Wa man azlamu mimmam-mana'a masaajidal laahi ai-yuzkara feehas muhoo wa sa'aa fee kharaabihaaa; ulaaa'ika maa kaana lahum ai yadkhuloohaaa illaa khaaa''feen; lahum fiddunyaa khizyunw wa lahum fil aakhirati 'azaabun 'azeem
அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அச்சத்துடனன்றி அவைகளில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு.
Wa lillaahil mashriqu walmaghrib; fa aynamaa tuwalloo fasamma wajhullaah; innal laaha waasi'un Aleem
கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அது அல்லாஹ்வின் திசையே! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன்.
Wa qaalut takhazal laahu waladan subhaanahoo bal lahoo maa fis samaawaati wal ardi kullul lahoo qaanitoon
"அல்லாஹ் (தனக்கு) சந்ததி ஏற்படுத்திக் கொண்டான்" என்றும் கூறுகின்றனர். அவ்வாறன்று; அவனோ மிக்க பரிசுத்தமானவன். அன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே! இவை அனைத்தும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன(வே அன்றி சந்ததியாகக் கூடிய தகுதியில் எந்த ஒன்றுமே இல்லை).
Badree'us samaawaati wal ardi wa izaa qadaaa amran fa innamaa yaqoolu lahoo kun fayakoon
(அன்றி) அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை "ஆகுக!" எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது.
Wa qaalal lazeena laa ya'lamoona law laa yukallimunal laahu aw taateenaaa aayah; kazaalika qaalal lazeena min qablihim misla qawlihim; tashaabahat quloobuhum; qad baiyannal aayaati liqawminy yooqinoon
மேலும் கல்வி (அறிவு) இல்லாதோர் "அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?" எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கின்றன. (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்.
Innaaa arsalnaaka bilhaqqi basheeranw wa nazeeranw wa laa tus'alu 'am Ashaabil Jaheem
(நபியே! நன்மை செய்பவர்களுக்கு) இவ்வேதத்தின் மூலம் நீங்கள் நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டுமே) நாம் உங்களை அனுப்பி வைத்திருக்கிறோம். ஆகவே (அவர்கள் உங்களுடைய சொல்லை நிராகரித்து நரகம் சென்றால், அந்)நரகவாசிகளைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது.
Wa lan tardaa 'ankal Yahoodu wa lan Nasaaraa hattaa tattabi'a millatahum; qul inna hudal laahi huwalhudaa; wa la'init taba'ta ahwaaa'ahum ba'dal lazee jaaa'aka minal 'ilmimaa laka minal laahi minw waliyyinw wa laa naseer
(நபியே!) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) "அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்) தான் நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்)" எனக் கூறிவிடுங்கள். அன்றி உங்களுக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உங்களை காப்பவனுமில்லை; உங்களுக்கு உதவி செய்பவனுமில்லை.