Skip to main content

وَلَمَّا جَآءَهُمْ
போது/வந்தார்/அவர்களிடம்
رَسُولٌ
ஒரு தூதர்
مِّنْ
இருந்து
عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
مُصَدِّقٌ
உண்மைப்படுத்தக் கூடியவர்
لِّمَا مَعَهُمْ
எதை/அவர்களிடம்
نَبَذَ
எறிந்தார்(கள்)
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
مِّنَ ٱلَّذِينَ
இருந்து/எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டனர்
ٱلْكِتَٰبَ
வேதம்
كِتَٰبَ
வேதத்தை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
وَرَآءَ
பின்னால்
ظُهُورِهِمْ
முதுகுகளுக்கு தங்கள்
كَأَنَّهُمْ
போல்/அவர்கள்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa lammaa jaaa'ahum Rasoolum min 'indil laahi musaddiqul limaa ma'ahum nabaza fareequm minal lazeena ootul Kitaaba Kitaabal laahi waraaa'a zuhoorihim ka annahum laa ya'lamoon

அல்லாஹ்விடமிருந்து (நம்முடைய) தூதராகிய (நீங்கள்) அவர்களிடம் வந்து அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப் படுத்தியபோதிலும், (முந்திய) வேதம் வழங்கப்பட்ட அவர்களில் பலர் அல்லாஹ்வுடைய (இந்த) திருமறையையே தாங்கள் அறியாதது போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கிப்போட்டு விடுகின்றனர்.

Tafseer

وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினார்கள்
مَا تَتْلُوا۟
எவற்றை/ஓதின
ٱلشَّيَٰطِينُ
ஷைத்தான்கள்
عَلَىٰ
இல்
مُلْكِ
ஆட்சி
سُلَيْمَٰنَۖ
சுலைமானுடைய
وَمَا كَفَرَ
நிராகரிக்கவில்லை
سُلَيْمَٰنُ
சுலைமான்
وَلَٰكِنَّ
எனினும்
ٱلشَّيَٰطِينَ
ஷைத்தான்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
يُعَلِّمُونَ
கற்பித்தார்கள்
ٱلنَّاسَ
மனிதர்களுக்கு
ٱلسِّحْرَ
சூனியத்தை
وَمَآ
இன்னும் எவற்றை
أُنزِلَ عَلَى
இறக்கப்பட்டன/மீது
ٱلْمَلَكَيْنِ
இரு வானவர்கள்
بِبَابِلَ
பாபிலோனில்
هَٰرُوتَ
ஹறாரூத்
وَمَٰرُوتَۚ
இன்னும் மாரூத்
وَمَا يُعَلِّمَانِ
அவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லை
مِنْ أَحَدٍ
ஒருவருக்கும்
حَتَّىٰ
வரை
يَقُولَآ
அவ்விருவரும் கூறுவார்கள்
إِنَّمَا نَحْنُ
நாங்கள் எல்லாம்
فِتْنَةٌ
ஒரு சோதனை
فَلَا تَكْفُرْۖ
ஆகவேநிராகரிக்காதே
فَيَتَعَلَّمُونَ
கற்றார்கள்
مِنْهُمَا
அவ்விருவரிடமிருந்து
مَا
எதை
يُفَرِّقُونَ
பிரிப்பார்கள்
بِهِۦ
அதன் மூலம்
بَيْنَ
இடையில்
ٱلْمَرْءِ
ஆண்
وَزَوْجِهِۦۚ
இன்னும் மனைவி/அவனுடைய
وَمَا
இல்லை
هُم
அவர்கள்
بِضَآرِّينَ
தீங்கிழைப்பவர்களாக
بِهِۦ
அதன் மூலம்
مِنْ أَحَدٍ
ஒருவருக்கும்
إِلَّا
தவிர
بِإِذْنِ
அனுமதி கொண்டே
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
وَيَتَعَلَّمُونَ
கற்றார்கள்
مَا
எவற்றை
يَضُرُّهُمْ
தீங்கிழைக்கும்/அவர்களுக்கு
وَلَا يَنفَعُهُمْۚ
இன்னும் பலனளிக்காது/அவர்களுக்கு
وَلَقَدْ
இன்னும் திட்டவட்டமாக
عَلِمُوا۟
அறிந்தார்கள்
لَمَنِ ٱشْتَرَىٰهُ
நிச்சயமாக எவர்/விலைக்கு வாங்கினார்/அதை
مَا لَهُۥ
இல்லை/அவருக்கு
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
مِنْ خَلَٰقٍۚ
எந்த பாக்கியமும்
وَلَبِئْسَ
இன்னும் திட்டமாக கெட்டது
مَا شَرَوْا۟
எது/விற்றார்கள்
بِهِۦٓ
அதற்கு பகரமாக
أَنفُسَهُمْۚ
தங்களையே
لَوْ كَانُوا۟
அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே

Wattaba'oo maa tatlush Shayaateenu 'alaa mulki Sulaimaana wa maa kafara Sulaimaanu wa laakinnash Shayattena kafaroo yu'al limoonan naasas sihra wa maaa unzila 'alal malakaini bi Baabila Haaroota wa Maaroot; wa maa yu'allimaani min ahadin hattaa yaqoolaaa innamaa nahnu fitnatun falaa takfur fayata'al lamoona minhumaa maa yufarriqoona bihee bainal mar'i wa zawjih; wa maa hum bidaaarreena bihee min ahadin illaa bi-iznillah; wa yata'allamoona maa yadurruhum wa laa yanfa'uhum; wa laqad 'alimoo lamanish taraahu maa lahoo fil Aakhirati min khalaaq; wa labi'sa maa sharaw biheee anfusahum; law kaanoo ya'lamoon

மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ "நிராகரிப்பவராக" இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் "பாபிலூன்" (என்னும் ஊரில்) "ஹாரூத்" "மாரூத்" என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) "நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர் களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர் களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!

Tafseer

وَلَوْ أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டால்
وَٱتَّقَوْا۟
இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்கள்
لَمَثُوبَةٌ
திட்டமாக சன்மானம்
مِّنْ عِندِ
இடமிருந்து/அல்லாஹ்
خَيْرٌۖ
சிறந்தது
لَّوْ كَانُوا۟
அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

Wa law annahum aamanoo wattaqaw lamasoobatum min 'indillaahi khairun law kaanoo ya'lamoon

ஆகவே அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, (அச்சூனியங்களை விட்டு) விலகிக்கொண்டால் (அவர்களுக்கு) அல்லாஹ்விடம் கிடைக்கும் சன்மானம் நிச்சயமாக மிக மேலானதாயிருக்கும். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
لَا تَقُولُوا۟
கூறாதீர்கள்
رَٰعِنَا
ராஇனா
وَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
ٱنظُرْنَا
உன்ளுர்னா (பாருங்கள்/எங்களை)
وَٱسْمَعُوا۟ۗ
இன்னும் செவிமடுங்கள்
وَلِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Yaaa ayyuhal lazeena aamanoo laa taqooloo raa'inaa wa qoolun zurnaa wasma'oo; wa lilkaafireena 'azaabun aleem

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) "ராயினா" எனக் கூறாதீர்கள். (அதற்குப் பதிலாக "எங்களைப் பாருங்கள்!" என்ற பொருளைத் தரும்) "உன்ளுர்னா" எனக் கூறுங்கள். (மேலும் நபி கூறுவதை முழுமையாக) செவிமடுங்கள். (இதற்கு மாறாகக் கூறும்) நிராகரிப்பவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

Tafseer

مَّا يَوَدُّ
விரும்பமாட்டார்(கள்)
ٱلَّذِينَ كَفَرُوا۟
எவர்கள்/நிராகரித்தனர்
مِنْ أَهْلِ
வேதக்காரர்களாகிய
وَلَا ٱلْمُشْرِكِينَ
இன்னும் இணைவைப்பவர்கள்
أَن يُنَزَّلَ
இறக்கப்படுவதை
عَلَيْكُم
உங்கள் மீது
مِّنْ خَيْرٍ
சிறந்தது எதுவும்
مِّن
இருந்து
رَّبِّكُمْۗ
இறைவன்/உங்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
يَخْتَصُّ
சொந்தமாக்குகிறான்
بِرَحْمَتِهِۦ
கருணையை/தன்
مَن
எவர்
يَشَآءُۚ
நாடுகிறான்
وَٱللَّهُ
அல்லாஹ்
ذُو ٱلْفَضْلِ
அருளுடையவன்
ٱلْعَظِيمِ
பெரும்

Maa yawaddul lazeena kafaroo min ahlil kitaabi wa lal mushrikeena ai-yunazzala 'alaikum min khairim mir Rabbikum; wallaahu yakhtassu birahmatihee mai-yashaaa; wallaahu zul fadlil'azeem

(நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களாயினும், இணைவைத்து வணங்குபவர்களாயினும் (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்கள் (தங்களிடம் உள்ளதைவிட) மேலானதொன்று உங்கள் இறைவனால் உங்கள்மீது அருளப்படுவதை விரும்பவே மாட்டார்கள். ஆனால் அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்குத் தன் கிருபையைச் சொந்தமாக்கி விடுகின்றான். அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.

Tafseer

مَا نَنسَخْ
நாம் மாற்றினால்
مِنْ
இருந்து
ءَايَةٍ
ஒரு வசனம்
أَوْ
அல்லது
نُنسِهَا
மறக்கடித்தால்/அதை
نَأْتِ
வருவோம்
بِخَيْرٍ
சிறந்ததைக் கொண்டு
مِّنْهَآ
அதைவிட
أَوْ
அல்லது
مِثْلِهَآۗ
அது போன்றதை
أَلَمْ تَعْلَمْ
நீர் அறியவில்லையா?
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாப் பொருள்கள் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Maa nansakh min aayatin aw nunsihaa na-ti bikhairim minhaaa aw mislihaaa; alam ta'lam annal laaha 'alaa kulli shai'in qadeer

(நபியே!) யாதொரு வசனத்தை நாம் மாற்றினாலும் அல்லது அதை மறக்கடித்தாலும் அதற்கு ஒப்பானதை அல்லது அதைவிடச் சிறந்ததை நாம் கொண்டு வருவோம். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் நிச்சயமாக ஆற்றலுடையவன் என்பதை நீங்கள் அறியவில்லையா?

Tafseer

أَلَمْ تَعْلَمْ
நீர் அறியவில்லையா?
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَهُۥ
அவனுக்கு உரியது
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமி
وَمَا
இன்னும் இல்லை
لَكُم
உங்களுக்கு
مِّن دُونِ
அல்லாஹ்வைத் தவிர
مِن
அறவே
وَلِىٍّ
பொறுப்பாளர்
وَلَا نَصِيرٍ
இன்னும் உதவியாளர் இல்லை

Alam ta'lam annallaaha lahoo mulkus samaawaati wal ard; wa maa lakum min doonil laahi minw waliyyinw wa laa naseer

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதென்பதையும் நீங்கள் அறியவில்லையா? (நம்பிக்கை யாளர்களே!) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனும் இல்லை; உதவி செய்பவனுமில்லை.

Tafseer

أَمْ تُرِيدُونَ
நாடுகிறீர்களா?
أَن تَسْـَٔلُوا۟
நீங்கள் கேள்வி கேட்க
رَسُولَكُمْ
தூதரி டம்/உங்கள்
كَمَا
போல்
سُئِلَ
கேள்வி கேட்கப்பட்டார்
مُوسَىٰ
மூசா
مِن قَبْلُۗ
முன்னர்
وَمَن
இன்னும் எவர்
يَتَبَدَّلِ
மாற்றுவார்
ٱلْكُفْرَ
நிராகரிப்பை
بِٱلْإِيمَٰنِ
நம்பிக்கைக்குப் பகரமாக
فَقَدْ
திட்டமாக
ضَلَّ
தவறினார்
سَوَآءَ
நேர்
ٱلسَّبِيلِ
வழி

Am tureedoona an tas'aloo Rasoolakum kamaa su'ila Moosa min qabl; wa mai yatabaddalil kufra bil eemaani faqad dalla sawaaa'as sabeel

(நம்பிக்கையாளர்களே!) இதற்கு முன்னர் மூஸாவிடம் (அவருடைய மக்கள் வீணான கேள்விகளைக்) கேட்டதைப் போல் நீங்களும் உங்களுக்கு அனுப்பட்ட தூதரிடம் கேட்க விரும்பு கிறீர்களா? எவர் (இத்தகைய கேள்விகளைக் கேட்டு) தன்னுடைய நம்பிக்கையை நிராகரிப்பைக் கொண்டு மாற்றிக் கொள்கிறாரோ அவர் நேரான வழியைவிட்டு மெய்யாகவே தவறிவிட்டார்.

Tafseer

وَدَّ
விரும்பினார்(கள்)
كَثِيرٌ
அதிகமானவர்கள்
مِّنْ أَهْلِ
வேதக்காரர்களில்
لَوْ يَرُدُّونَكُم
அவர்கள் திருப்பிவிடவேண்டுமே/உங்களை
مِّنۢ بَعْدِ
பின்னர்
إِيمَٰنِكُمْ
நம்பிக்கை/உங்கள்
كُفَّارًا
நிராகரிப்பாளர்களாக
حَسَدًا
பொறாமையினால்
مِّنْ عِندِ
அவர்களின் உள்ளங்களில்
مِّنۢ بَعْدِ
பின்னர்
مَا تَبَيَّنَ
தெளிவானதற்கு
لَهُمُ
அவர்களுக்கு
ٱلْحَقُّۖ
உண்மை
فَٱعْفُوا۟
ஆகவே மன்னியுங்கள்
وَٱصْفَحُوا۟
இன்னும் புறக்கணியுங்கள்
حَتَّىٰ يَأْتِىَ
வரும் வரை
ٱللَّهُ
அல்லாஹ்
بِأَمْرِهِۦٓۗ
கட்டளையைக் கொண்டு/தன்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَلَىٰ
மீது
كُلِّ
எல்லா
شَىْءٍ
பொருள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wadda kaseerum min ahlil kitaabi law yaruddoo nakum mim ba'di eemaanikum kuffaaran hasadam min 'indi anfusihim mim ba'di maa tabaiyana lahumul haqqu fa'foo washfahoo hattaa yaa tiyallaahu bi amrih; innal laaha 'alaa kulli shai'in qadeer

வேதத்தையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாளர்களாகிய உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டுமே! என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் இவ்வாறு அவர்கள் விரும்புவதன் காரணமெல்லாம் அவர்களுக்கு (உங்கள் மீது)ள்ள பொறாமைதான். ஆகவே, அல்லாஹ்வுடைய (மற்றொரு) கட்டளை வரும் வரையில் (அவர்களை) நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிகவும் ஆற்றலுடையவன்.

Tafseer

وَأَقِيمُوا۟
நிலைநிறுத்துங்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
ٱلزَّكَوٰةَۚ
ஸகாத்தை
وَمَا
இன்னும் எதை
تُقَدِّمُوا۟
முற்படுத்துவீர்கள்
لِأَنفُسِكُم
உங்களுக்காக
مِّنْ خَيْرٍ
நன்மையில்
تَجِدُوهُ
அதை பெறுவீர்கள்
عِندَ
இடத்தில்
ٱللَّهِۗ
அல்லாஹ்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
بِمَا
எவற்றை
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Wa aqeemus salaata wa aatuz zakaah; wa maa tuqaddimoo li anfusikum min khairin tajidoohu 'indal laah; innal laaha bimaa ta'maloona baseer

அன்றி, நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தும், "ஜகாத்" (மார்க்கவரி) கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் (மரணத்திற்கு) முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டி அனுப்பி வைப்பீர்களோ அதனையே அல்லாஹ்விடம் (மறுமையில்) பெற்றுக்கொள்வீர்கள். (ஆதலால் இறப்பதற்கு முன்னரே இயன்றளவு நன்மை செய்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.

Tafseer