Skip to main content
bismillah

الٓمٓ
அலிஃப், லாம், மீம்

Alif-Laaam-Meeem

அலிஃப்; லாம்; மீம். (அல்லாஹுதஆலா, வானவர் ஜிப்ரீல் - அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய)

Tafseer

ذَٰلِكَ
இந்த
ٱلْكِتَٰبُ
வேதம்
لَا رَيْبَۛ
அறவே சந்தேகம் இல்லை
فِيهِۛ
இதில்
هُدًى
நேர்வழி காட்டி
لِّلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு

Zaalikal Kitaabu laa raiba feeh; udal lilmuttaqeen

இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறை அச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
بِٱلْغَيْبِ
மறைவானதை
وَيُقِيمُونَ
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَمِمَّا
இன்னும் எதிலிருந்து
رَزَقْنَٰهُمْ
கொடுத்தோம்/அவர்களுக்கு
يُنفِقُونَ
தர்மம் புரிவார்கள்

Allazeena yu'minoona bilghaibi wa yuqeemoonas salaata wa mimmaa razaqnaahum yunfiqoon

அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
بِمَآ أُنزِلَ
எதை/இறக்கப்பட்டது
إِلَيْكَ
உமக்கு
وَمَآ
இன்னும் எதை
أُنزِلَ
இறக்கப்பட்டது
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
وَبِٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமையை
هُمْ
அவர்கள்
يُوقِنُونَ
உறுதி கொள்வார்கள்

Wallazeena yu'minoona bimaa unzila ilaika wa maaa unzila min qablika wa bil Aakhirati hum yooqinoon

(அன்றி, நபியே!) அவர்கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உங்களுக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
عَلَىٰ
இல்
هُدًى
நேர்வழி
مِّن رَّبِّهِمْۖ
இறைவனின்/தங்கள்
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
இன்னும் அவர்கள்தான்
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்

Ulaaa'ika 'alaa hudam mir rabbihim wa ulaaa'ika humul muflihoon

இத்தகையவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கின்றார்கள். இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
سَوَآءٌ
சமம்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ءَأَنذَرْتَهُمْ
அவர்களை எச்சரித்தீர்
أَمْ
அல்லது
لَمْ
நீர் எச்சரிக்கவில்லை
تُنذِرْهُمْ
நீர் எச்சரிக்கவில்லை அவர்களை
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Innal lazeena kafaroo sawaaa'un 'alaihim 'a-anzar tahum am lam tunzirhum laa yu'minoon

(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் உண்மையில் சமமே. அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

Tafseer

خَتَمَ
முத்திரையிட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
وَعَلَىٰ
இன்னும் மீது
سَمْعِهِمْۖ
அவர்களின் கேள்விப் புலன்
وَعَلَىٰٓ
இன்னும் மீது
أَبْصَٰرِهِمْ
அவர்களின் பார்வைகள்
غِشَٰوَةٌۖ
திரை
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
عَظِيمٌ
பெரியது

Khatamal laahu 'alaa quloobihim wa 'alaa sam'i-him wa 'alaaa absaarihim ghishaa watunw wa lahum 'azaabun 'azeem

(அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டுவிட்டது. தவிர அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு.

Tafseer

وَمِنَ ٱلنَّاسِ
இன்னும் மக்களில்
مَن
எவர்
يَقُولُ
கூறுகிறார்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَبِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் நாளை/இறுதி
وَمَا هُم
அவர்கள் அல்லர்
بِمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களே

Wa minan naasi mai yaqoolu aamannaa billaahi wa bil yawmil aakhiri wa maa hum bimu'mineen

(நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதரில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களல்லர்.

Tafseer

يُخَٰدِعُونَ
வஞ்சிக்கின்றனர்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
وَمَا يَخْدَعُونَ
வஞ்சிக்க மாட்டார்கள்
إِلَّآ
தவிர
أَنفُسَهُمْ
தங்களையே
وَمَا يَشْعُرُونَ
இன்னும் உணரமாட்டார்கள்

Yukhaadi'oonal laaha wallazeena aamanoo wa maa yakhda'oona illaaa anfusahum wa maa yash'uroon

அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையேயன்றி (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.

Tafseer

فِى قُلُوبِهِم
அவர்களின் உள்ளங்களில்
مَّرَضٌ
ஒரு நோய்
فَزَادَهُمُ
எனவே, அவர்களுக்கு அதிகப்படுத்தினான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَرَضًاۖ
நோயை
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌۢ
துன்புறுத்தக் கூடியது
بِمَا
காரணத்தால்
كَانُوا۟
இருந்தனர்
يَكْذِبُونَ
பொய்கூறுபவர்களாக

Fee quloobihim mara dun fazzdahumul laahu maradan wa lahum 'azaabun aleemum bimaa kaanoo yakziboon

(ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. (அதன் காரணமாக) அவர்களுக்கு அந்நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். (இவ்விதம்) அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்குண்டு.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் பகரா
القرآن الكريم:البقرة
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Baqarah
ஸூரா:2
வசனம்:286
Total Words:6121
Total Characters:25500
Number of Rukūʿs:40
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:87
Starting from verse:7