Skip to main content

جَنَّٰتِ
சொர்க்கங்களில்
عَدْنٍ
அத்ன்
ٱلَّتِى وَعَدَ
எது/வாக்களித்துள்ளான்
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
عِبَادَهُۥ
தன் அடியார்களுக்கு
بِٱلْغَيْبِۚ
மறைவில்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கிறது
وَعْدُهُۥ
அவனுடைய வாக்கு
مَأْتِيًّا
நிகழக்கூடியதாக

Jannaati 'adninil latee wa'adar Rahmaanu ibaadahoo bilghaib; innahoo kaana wa'duhoo maatiyyaa

அது "அத்ன்" என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கின்றான். (அது தற்சமயம்) மறைவாக இருந்த போதிலும் நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும்.

Tafseer

لَّا يَسْمَعُونَ
செவிமடுக்க மாட்டார்கள்
فِيهَا
அவற்றில்
لَغْوًا
வீணானவற்றை
إِلَّا
எனினும்
سَلَٰمًاۖ
ஸலாமை
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
رِزْقُهُمْ
அவர்களுடைய உணவு
فِيهَا
அவற்றில்
بُكْرَةً
காலையிலும்
وَعَشِيًّا
மாலையிலும்

Laa yasma'oona feehaa laghwan illaa salaamaa; wa lahum rizquhum feehaa bukratanw wa 'ashiyyaa

(அவற்றில்) ஸலாம் என்பதைத் தவிர (ஸலாம் என்ற முகமனைத் தவிர) வீணான வார்த்தைகளைச் செவியுறார். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவு அளிக்கப்படும்.

Tafseer

تِلْكَ
இந்த
ٱلْجَنَّةُ
சொர்க்கம்
ٱلَّتِى نُورِثُ
வாரிசாக ஆக்குவோம்
مِنْ عِبَادِنَا
நமது அடியார்களில்
مَن كَانَ
எவர்/இருக்கின்றார்
تَقِيًّا
இறையச்சமுடையவராக

Tilkal jannatul latee oorisu min 'ibaadinaa man kaana taqiyyaa

இத்தகைய சுவனத்திற்கு நம் அடியார்களில் இறை அச்சமுடையவர்களை நாம் வாரிசாக்கி விடுவோம்.

Tafseer

وَمَا نَتَنَزَّلُ
இறங்க மாட்டோம்
إِلَّا بِأَمْرِ
உத்தரவைக் கொண்டே தவிர
رَبِّكَۖ
உமது இறைவனின்
لَهُۥ
அவனுக்கே சொந்தம்
مَا بَيْنَ
எங்களுக்கு முன் இருப்பவையும்
وَمَا خَلْفَنَا
எங்களுக்கு பின் இருப்பவையும்
وَمَا بَيْنَ
அவற்றுக்கு மத்தியில் இருப்பவையும்
وَمَا كَانَ
இருக்கவில்லை
رَبُّكَ
உமது இறைவன்
نَسِيًّا
மறதியாளனாக

Wa maa natanazzalu illaa bi amri Rabbika lahoo maa baina aideenaa wa maa khalfanaa wa maa baina zaalik; wa maa kaana Rabbuka nasiyyaa

(நம்முடைய மலக்குகள் கூறுகின்றனர்: நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவைகளும், பின்னிருப்பவைகளும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவைகளும் அவனுக்குச் சொந்தமானவைகளே. இதில் (யாதொன்றையும்) உங்கள் இறைவன் மறப்பவனன்று.

Tafseer

رَّبُّ
இறைவன்
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
وَمَا بَيْنَهُمَا
இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவை
فَٱعْبُدْهُ
ஆகவே, அவனை வணங்குவீராக
وَٱصْطَبِرْ
இன்னும் பொறுமையாக இருப்பீராக
لِعِبَٰدَتِهِۦۚ
அவனை வணங்குவதில்
هَلْ تَعْلَمُ
நீர் அறிவீரா
لَهُۥ
அவனுக்கு
سَمِيًّا
ஒப்பானவரை

Rabbus samaawaati wal ardi wa maa bainahumaa fa'bud hu wastabir li'ibaadatih; hal ta'lamu lahoo samiyyaa

வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவனும் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கு வழிப்படுவதில் (உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும்) நீங்கள் சகித்துக் கொள்ளுங்கள். அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீங்கள் அறிவீர்களா?

Tafseer

وَيَقُولُ
கூறுகிறான்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
أَءِذَا مَا
நான் மரணித்து விட்டால்
لَسَوْفَ أُخْرَجُ
கண்டிப்பாக எழுப்பப்படுவேனா
حَيًّا
உயிருள்ளவனாக

Wa yaqoolul insaanu 'aizaa maa mittu lasawfa ukhraju haiyaa

(இவ்வாறிருக்க) மனிதன் "நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?" என்று (பரிகாசமாகக்) கேட்கிறான்.

Tafseer

أَوَلَا يَذْكُرُ
சிந்திக்க வேண்டாமா!
ٱلْإِنسَٰنُ
மனிதன்
أَنَّا
நிச்சயமாக நாம்
خَلَقْنَٰهُ
அவனைப் படைத்ததை
مِن قَبْلُ
முன்னர்
وَلَمْ يَكُ
அவன் இருக்கவில்லை
شَيْـًٔا
எந்த ஒரு பொருளாகவும்

awalaa yazkurul insaanu annaa khalaqnaahu min qablu wa lam yaku shai'aa

இதற்கு முன்னர் யாதொரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வேண்டாமா?

Tafseer

فَوَرَبِّكَ
உம் இறைவன் மீது சத்தியமாக
لَنَحْشُرَنَّهُمْ
நிச்சயமாக நாம் அவர்களை எழுப்புவோம்
وَٱلشَّيَٰطِينَ
இன்னும் ஷைத்தான்களை
ثُمَّ
பிறகு
لَنُحْضِرَنَّهُمْ
அவர்களைக் கொண்டு வருவோம்
حَوْلَ
சுற்றி
جَهَنَّمَ
நரகத்தை
جِثِيًّا
முழந்தாளிட்டவர்களாக

Fawa Rabbika lanahshu rannahum wash shayaateena summa lanuhdirannahum hawla jahannama jisiyyaa

ஆகவே, (நபியே!) உங்களது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், இவர்கள் வணங்குகிற ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.

Tafseer

ثُمَّ
பிறகு
لَنَنزِعَنَّ
கழட்டி எடுப்போம்
مِن كُلِّ
ஒவ்வொரு
شِيعَةٍ
கூட்டத்திலும்
أَيُّهُمْ
அவர்களில்
أَشَدُّ
கடுமையானவரை
عَلَى ٱلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
عِتِيًّا
பாவம் செய்வதில்

Summa lananzi 'anna min kulli shee'atin aiyuhum ashaddu 'alar Rahmaani 'itiyyaa

பின்னர், ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக இருந்தவர்கள் அனைவரையும் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் நிச்சயமாக நாம் பிரித்து விடுவோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
لَنَحْنُ
நாம்
أَعْلَمُ
மிக அறிந்தவர்கள்
بِٱلَّذِينَ هُمْ
எவர்கள்/அவர்கள்
أَوْلَىٰ
மிகவும் தகுதியானவர்கள்
بِهَا
அதில்
صِلِيًّا
கடுமையாக வேதனை அனுபவிப்பதற்கு

Summa lanahnu a'lamu billazeena hum awlaa bihaa siliyyaa

பின்னர், அவர்களில் நரகத்தை அடைய மிக்க தகுதி உடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிந்து கொள்வோம்.

Tafseer