Wa ja'alanee mubaarakan aina maa kuntu wa awsaanee bis Salaati waz Zakaati maa dumtu haiyaa
நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும் வரையில் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும் படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்.
Wa barram biwaalidatee wa lam yaj'alnee jabbaaran shaqiyyaa
என்னுடைய தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து, நான் முரடனாகவும் வழி தப்பியவனாகவும் ஆகாதபடியும் செய்வான்.
Wassalaamu 'alaiya yawma wulittu wa yawma amootu wa yawma ub'asu baiyaa
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்றெழும் நாளிலும், ஈடேற்றம் எனக்கு நிலை பெற்றிருக்கும்" (என்றும் அக்குழந்தை கூறியது).
Zaalika 'Eesab-nu Marya; qawlal haqqil lazee feehi yamtaroon
இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான்.
Maa kaana lillaahi ai yattakhiza minw waladin Subhaanah; izaa qadaaa amran fa innamaa yaqoolu lahoo kun fa yakoon
ஆகவே, (அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும் தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். யாதொன்றை படைக்கக் கருதினால் அதனை "ஆகுக!" என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்.
Wa innal laaha Rabbee wa Rabbukum fa'budooh; haazaa Siraatum Mustaqeem
நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்களது இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி (என்று நபியே! நீங்கள் கூறுங்கள்.)
Fakhtalafal ahzaabu mim bainihim fawailul lillazeena kafaroo mim mashhadi Yawmin 'azeem
ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதனை, நிராகரிப்பவர்கள் அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் அவர்களுக்குக் கேடுதான்.
Asmi' bihim wa absir Yawma yaatoonanaa laakiniz zaalimoonal yawma fee dalaalim mubeen
(இன்றைய தினம் இதனை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம்முடைய கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவி சாய்ப்பார்கள். (நம்முடைய வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
Wa anzirhum Yawmal hasrati iz qudiyal amr; wa hum fee ghaflatinw wa hum laa yu'minoon
ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
Innaa NNahnu narisul arda wa man 'alaihaa wa ilainaa yurja'oon
நிச்சயமாக நாம்தான் பூமிக்கும், அதிலுள்ளவைகளுக்கும் அனந்தரம் கொள்வோம். அவர்கள் (அனைவரும்) நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.