فَانْطَلَقَاۗ حَتّٰٓى اِذَا رَكِبَا فِى السَّفِيْنَةِ خَرَقَهَاۗ قَالَ اَخَرَقْتَهَا لِتُغْرِقَ اَهْلَهَاۚ لَقَدْ جِئْتَ شَيْـًٔا اِمْرًا ( الكهف: ٧١ )
Fantalaqaa hattaaa izaa rakibaa fis safeenati kharaqahaa qaala akharaqtahaa litughriqa ahlahaa laqad ji'ta shai'an imraa (al-Kahf 18:71)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறு முடிவு செய்துகொண்டு) அவ்விருவரும் சென்றவழியில் குறுக்கிட்ட ஒரு கடலைக் கடக்க கப்பலில் ஏறி, அவர் அதன் (ஒரு) பலகையைப் பெயர்த்து அதனை ஓட்டையாக்கி விட்டார். அதற்கு மூஸா "இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் துவாரமிட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் மிக்க அபாயகரமானதொரு காரியத்தைச் செய்துவிட்டீர்கள்" என்று கூறினார்.
English Sahih:
So they set out, until when they had embarked on the ship, he [i.e., al-Khidhr] tore it open. [Moses] said, "Have you torn it open to drown its people? You have certainly done a grave thing." ([18] Al-Kahf : 71)
1 Jan Trust Foundation
பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.