Falammaa balaghaa majma'a bainihimaa nasiyaa hootahumaa fattakhaza sabeelahoo fil bahri sarabaa
அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கும் இடத்தை அடைந்தபொழுது தங்களுடைய மீனை அவர்கள் மறந்துவிட்டனர். அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (சென்று) விட்டது.
Falammaa jaawazaa qaala lifataahu aatinaa ghadaaa'anaa laqad laqeena min safarinaa haazaa nasabaa
(தாங்கள் விரும்பிச் சென்ற அவ்விடத்தை அறியாது) அவ்விருவரும் அதைக் கடந்த பின், மூஸா தன் வாலிபனை நோக்கி "நம்முடைய காலை உணவை நீங்கள் கொண்டு வாருங்கள். நிச்சயமாக நாம் இந்த பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்" என்று கூறினார்.
Qaala ara'ayta iz awainaaa ilas sakhrati fa innee naseetul hoota wa maaa ansaaneehu illash Shaitaanu an azkurah; wattakhaza sabeelahoo fil bahri'ajabaa
அதற்கு (அந்த வாலிபன் மூஸாவை நோக்கி) "அந்த கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் (நிகழ்ந்த ஆச்சரியத்தை) நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் (நம்முடன் கொண்டுவந்த) மீனை மறந்துவிட்டேன். அதனை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தானையன்றி (வேறொருவரும்) எனக்கு மறக்கடிக்கவில்லை. (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தனக்கு வழி செய்துகொண்டு (சென்று) விட்டது" என்று கூறினார்.
Qaala zaalika maa kunnaa nabgh; fartaddaa 'alaa aasaari him maa qasasaa
அதற்கு மூஸா "நாம் தேடிவந்த இடம் அதுதான்" என்று கூறி இவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் காலடியைப் பின்பற்றி வந்த வழியே சென்றார்கள்.
Fa wajadaa 'abdam min 'ibaadinaaa aatainaahu Rahmatam min 'indinaa wa 'allamnaahu mil ladunnaa 'ilmaa
இவ்விருவரும் அங்கு வந்தபோது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவர் மீது நாம் அருள்புரிந்து நமக்குச் சொந்தமானதொரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம்.
Qaala lahoo Moosaa hal attabi'uka 'alaaa an tu'allimani mimmaa 'ullimta rushdaa
மூஸா அவரை நோக்கி "உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியில் பயனளிக்கக் கூடியதை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உங்களைப் பின்பற்றலாமா?" என்று கேட்டார்.
Qaalaa innaka lan tastatee'a ma'iya sabraa
அதற்கவர் "என்னுடன் இருக்க நிச்சயமாக நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்.
Wa kaifa tasbiru 'alaa maa lam tuhit bihee khubraa
அவ்வாறிருக்க உங்களுடைய அறிவுக்கு அப்பாற் பட்டவைகளை (நான் செய்யும்போது பார்த்துக் கொண்டு) நீங்கள் எவ்வாறு சகித்துக் கொண்டு இருப்பீர்கள்" என்று கூறினார்.
Qaala satajiduneee in shaa 'al laahu saabiranw wa laaa a'see laka amraa
அதற்கு மூஸா "இறைவன் அருளால் (எந்த விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் நான் உங்களுக்கு மாறுசெய்ய மாட்டேன்" என்று கூறினார்.
Qaala fa init taba'tanee falaa tas'alnee 'an shai'in hattaaa uhdisa laka minhu zikraa
அதற்கு அவர் "நீங்கள் என்னைப் பின்பற்றுவதாயின் (நான் செய்யும்) எவ்விஷயத்தைப் பற்றியும் நானாகவே உங்களுக்கு அறிவிக்கும் வரையில் நீங்கள் என்னிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்" என்று சொன்னார்.