Aw yusbiha maaa'uhaaa ghawran falan tastatee'a lahoo talabaa
அல்லது அதன் நீர் முழுதும் பூமிக்குள் வற்றி(யிருப்பதை) நீ தேடிக் காண முடியாமலும் (ஆக்கிவிடக் கூடும்" என்றும் கூறினார்.)
Wa uheeta bisamarihee faasbaha yuqallibu kaffaihi 'alaa maaa anfaqa feehaa wa hiya khaawiyatun 'alaa 'urooshihaa wa yaqoolu yaalaitanee lam ushrik bi Rabbeee ahadaa
(அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளைபொருள் அனைத்தும் அழிந்து அதற்காக அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்துகொண்டு அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்துவிட்டதைப் பற்றி (துக்கித்துக் கவலைகொண்டு) "என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே?" என்று அவனே சொல்லும்படியும் நேர்ந்தது.
Wa lam takul lahoo fi'atuny yansuroonahoo min doonil laahi wa maa kaana muntasiraa
அச்சமயம் அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யக்கூடிய யாதொரு சேனையும் அவனுக்கு இருக்கவில்லை. அவனும் (இதற்காக அல்லாஹ்விடம்) பழிவாங்க முடியாது போயிற்று.
Hunaalikal walaayatu lillaahil haqq; huwa khairun sawaabanw wa khairun 'uqbaa
அத்தகைய நிலைமையில் எல்லா அதிகாரங்களும் உண்மையான அல்லாஹ்வுக்கு உரியனவே. அவனே கூலி கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்; முடிவு செய்வதிலும் மிக்க மேலானவன் (என்பதையும் அவன் அறிந்து கொண்டான்).
Wadrib lahum masalal hayaatid dunyaa kamaaa'in anzalnaahu minas samaaa'i fakhtalata bihee nabaatul ardi fa asbaha hasheeman tazroo hur riyaah; wa kaanal laahu 'alaa kulli shai'im muqtadiraa
(நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுங்கள்: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கும் (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகிவிட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
Almaalu walbanoona zeenatul hayaatid dunya wal baaqiyaatus saalihaatu khairun 'inda Rabbika sawaabanw wa khairun amalaa
(ஆகவே) பொருளும் மக்களும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (அன்றி நிலையானவையல்ல.) என்றுமே நிலையான நற்செயல்கள் தாம் உங்கள் இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கு மிக சிறந்ததும், நல்ஆதரவு வைப்பதற்கு மிக சிறந்ததும் ஆகும்.
Wa yawma nusaiyirul jibaala wa taral arda baariza tanw wa hasharnaahum falam nughaadir minhum ahadaa
(நபியே!) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடும் நாளில், நீங்கள் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர்கள். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.
Wa 'uridoo 'alaa Rabbika saffaa, laqad ji'tumoonaa kamaa khalaqnaakum awala marrah; bal za'amtum allannaj'ala lakum maw'idaa
உங்கள் இறைவன் முன் அவர்கள் கொண்டு வரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்பட்டு "நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். (எனினும், நீங்களோ நம்மிடம் வரக்கூடிய) இந்நாளை உங்களுக்கு ஏற்படுத்தவே இல்லை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறப்படுவார்கள்).
Wa wudi'al kitaabu fataral mujrimeena mushfiqeena mimmaa feehi wa yaqooloona yaa wailatanaa maa lihaazal kitaabi laa yughaadiru saghee ratanw wa laa kabeeratan illaaa ahsaahaa; wa wajadoo maa 'amiloo haadiraa; wa laa yazlimu Rabbuka ahadaa
(அவர்களுடைய தினசரிக் குறிப்புப் புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து "எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம்! (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் வரையப்பட்டிருக்கின்றதே" என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீங்கள் காண்பீர்கள். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உங்கள் இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்ய மாட்டான்.
Wa iz qulnaa lilma laaa'ikatis judoo li Aadama fasajadooo illaaa Ibleesa kaana minal jinni fafasaqa 'an amri Rabbih; afatattakhizoonahoo wa zurriyatahooo awliyaaa'a min doonee wa hum lakum 'aduww; bi'sa lizzaalimeena badalaa
மலக்குகளை நோக்கி "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவனோ ஜின்களின் இனத்தைச் சார்ந்தவன். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து பாவியானான். ஆகவே (மனிதர்களே!) நீங்கள் என்னையன்றி அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குக் கொடிய எதிரிகளாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்கள் (என்னை விட்டு விட்டு அவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக) மாற்றிக் கொண்டது மகா கெட்டது.