Ulaaa'ika lahum Jannaatu 'Adnin tajree min tahtihimul anhaaru yuhallawna feehaa min asaawira min zahabinw wa yalbasoona siyaaban khudram min sundusinw wa istabraqim muttaki'eena feehaa 'alal araaa'ik; ni'mas sawaab; wa hasunat murtafaqaa
இவர்களுக்கு நிலையான சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்களுக்குப் (பரிசாகப்) பொற்கடகம் அணிவிக்கப்படும். மெல்லியதாகவோ அழுத்தமானதாகவோ (அவர்கள் விரும்பிய) பசுமையான பட்டாடைகளை அணிவார்கள். ஆசனங்களிலுள்ள தலையணைகள் மீது சாய்ந்து (மிக்க உல்லாசமாக) இருப்பார்கள். இவர்களுடைய கூலி மிக்க நன்றே! இவர்கள் இன்பம் சுவைக்கும் இடமும் மிக்க அழகானது.
Wadrib lahum masalar rajulaini ja'alnaa li ahadihimaa jannataini min a'naabinw wa hafafnaahumaa binakhilinw wa ja'alnaa bainahumaa zar'aa
(நபியே!) இரு மனிதர்களை நீங்கள் அவர்களுக்கு உதாரணமாகக் கூறுங்கள்: அவர்களில் ஒருவனுக்கு இரு திராட்சைத் தோட்டங்களைக் கொடுத்தோம். அவ்விரண்டைச் சூழவும் பேரீச்ச மரங்களை ஆக்கினோம். இவ்விரண்டிற்கும் மத்தியில் தானிய வயல்களை அமைத்தோம்.
Kiltal jannataini aatat ukulahaa wa lam tazlim minhu shai'anw wa fajjarnaa khi laalahumaa naharaa
அவ்விரு தோட்டங்களில் ஒவ்வொன்றும் அதன் பலனை யாதொரு குறைவுமின்றி கொடுத்துக் கொண்டிருந்தது. அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு நதியையும் ஓடச்செய்தோம்.
Wa kaana lahoo samarun faqaala lisaahibihee wa huwa yuhaawiruhoo ana aksaru minka maalanw wa a'azzu nafaraa
அவனிடத்தில் (இவையன்றி) வேறு பல கனி (மரங்)களும் இருந்தன. (இத்தகைய நிலைமையில் ஒரு நாள்) அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் நண்பனை நோக்கி "நான் உன்னைவிட அதிகப் பொருளுடையவன்" மக்கள் தொகையிலும் நான் (உன்னை) மிகைத்தவன்" என்று (கர்வத்துடன்) கூறினான்.
Wa dakhala jannatahoo wa huwa zaalimul linafsihee qaala maaa azunnu an tabeeda haaziheee abadaa
பின்னர், அவன் தன் தோப்புக்குள் நுழைந்து (அளவு மீறிய அக மகிழ்ச்சியின் காரணமாக) தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டு "இவை ஒரு காலத்திலும் அழிந்து விடுமென நான் நினைக்கவில்லை" (என்றும்)
Wa maaa azunnus Saa'ata qaaa'imatanw wa la'ir rudittu ilaa Rabbee la ajidanna khairam minhaa munqalabaa
"மறுமை ஏற்படும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருகால் (மறுமை ஏற்பட்டு) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதைவிட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்" என்றும் கூறினான்.
Qaala lahoo saahibuhoo wa huwa yuhaawiruhooo akafarta billazee khalaqaka min turaabin summa min nutfatin summa sawwaaka rajulaa
அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி "உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்து உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான்.
Laakinaa Huwal laahu Rabbee wa laa ushriku bi Rabbeee ahadaa
நிச்சயமாக அந்த அல்லாஹ்தான் என்னையும் படைத்து வளர்ப்பவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆகவே, நான் என்னுடைய இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்க மாட்டேன்.
Wa law laaa iz dakhalta jannataka qulta maa shaaa'al laahu laa quwwata illaa billaah; in tarani ana aqalla minka maalanw wa waladaa
அன்றி, நீ உன் தோட்டத்தில் நுழைந்தபொழுது (இவை அனைத்தும்) அல்லாஹ் (தன் அருளால்) எனக்குத் தந்தவையே! அல்லாஹ்வின் உதவியின்றி (நாம்) ஒன்றும் (செய்து) விட முடியாது? என்று நீ கூறியிருக்க வேண்டாமா? பொருளிலும் சந்ததியிலும் நான் உனக்குக் குறைவாக இருப்பதை நீ கண்டபோதிலும்,
Fa'asaa Rabeee any yu'tiyani khairam min jannatika wa yursila 'alaihaa husbaanam minas samaaa'i fatusbiha sa'eedan zalaqaa
உன்னுடைய தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றிகெட்ட தன்மையின் காரணமாக) உன் தோப்பின் மீது யாதொரு ஆபத்தை வானத்தில் இருந்து இறக்கி (அதிலுள்ள மரம், செடிகளையெல்லாம் அழித்து) அதனை வெட்டவெளியாக (என் இறைவன்) செய்து விடவும் கூடும்.